தெள்ளியதோர் முடிச்சவுக்கி!.,

இயற்கை நோக்குதல் 2

நண்பர்களே, இயற்கையின் முடிச்சுக்களை எப்படி அவிழ்ப்பது என்பதை பிரித்து மேயலாமா?

மொபைல் கேமரா இருக்கும்போதே கட்டுக்கடங்காத கட்டெருமையாய் சீரியவனிடம் நல்லதொரு கேமரா பரிசாகக்கிடைதால்?

கேமரா கிடைத்த அன்று “போடுரண்டா மேடையில கால மேல, கொரங்குகிட்ட மாட்டிக்கின சந்தனமால” என்ற பாட்டு பின்னணியில் இசைக்க காட்டு ராசாவாய் என்னை உருவகம் பண்ணிக்கொண்டு நான் கொடுத்த அட்ராசிட்டிகளுக்கு அளவே இல்லை.
......................
அப்போது வடஇந்தியாவில் இருந்த நேரம். எனக்கு நல்ல நண்பன் ஒருத்தன் கிடைத்தான்.

 இருவரும் அருகில் உள்ள கிராமங்களையும் அதன் வனங்களையும் மிதிவண்டியை எடுத்துகிட்டு அளந்தோம்.

நண்பன்

அவன் நம்மள மாதிரி கிடையாது, ஒரு தேர்ந்த ரசிகன், SLR வைத்திருந்த போதும் அரிதாகவே படம் எடுப்பான்.
.............
ஒரு தடவை paradise fly catcher எனும் ஒரு அழகிய பறவையை நாங்களிருவரும் காண நேரிட்டது. அது ஒரிடத்தில் நிமிஷ நேரம் கூட நிற்க மாட்டேங்குது. 

போட்டா புடிக்கலாம்ன்னு சூம் பண்ணி ஃபோக்கஸ் பண்ணுனா, அதுக்குள்ள பறந்து போயிடுது.

 ஒரு அரை மென்ட்டல் போல அது பின்னாலயே ஒடுரதும் வர்ரதுமா இருந்த என்னை நண்பன் கையை புடிச்சு நிப்பாட்டுனான்.”  நண்பா ஃபோட்டா புடிக்கிற ஆர்வத்துல You are missing something, பொறுமையா அது என்ன பண்ணுதுன்னு கவனி” ன்னு சொன்னான்.

யாரும் எளிதில் பார்த்தறியாத ஒரு காட்சியை அன்று தவறவிட இருந்தேன்.

சில பறவைகள் தங்களின் கூட்டில் உள்ள எச்சதின் வாசனையை நோக்கி வரும் வேட்டையர்களிடம் இருந்து தப்பிக்க, எச்சங்களை தூக்கிகொண்டு போய் தூர எறிந்துவிட்டு வரும். அதைத்தான் அந்த பறவை செய்து கொண்டு இருந்தது.


//நாமெடுத்த நிழற்படம் அழிந்தாலுமே நினைவென்றும் அழியாதடி// என்ற பாடல் வரியின் அர்த்தம் அன்று விளங்கியது.
……………………………….

திடுதிப்புன்னு ஒரு அன்னியன் உங்களை குறிவைத்தால், அடித்தளம் ஆட்டம் காண்பது உறுதி. 

பார்த்த உடனே கேமராவை எடுத்தால் பட்டுனு சிட்டா எல்லாரும் பறந்துடுவானுங்க.

அதுவும் லங்க்கூர் குரங்கு, ஆள்காட்டி பறவை போன்றோர் கண்ணுல சிக்குனா “ குப்பாயக்கா பேரன் தூக்கு மாட்டிகிட்டான்னு” ஊருக்கே டமாரம் அடிச்சு ஒரு ஈ காக்கா கூட இல்லாம பண்ணிடுவானுங்க.



இவனைபோன்றோரிடம் நீங்க நல்ல பேரெடுத்துட்டாலே காடு உங்கள் வசம் ஆயிடுச்சுன்னு அர்த்தம்.
..............................................................

எப்டி நல்ல பேரெடுக்குறது?

போன பதிவுல சொன்ன 1,3 மற்றும் 4 ம் விதிகள பின்பற்றினாலே போதுமானது.
......................................................................
உயிரினங்களின் நடவடிக்கைகளை ரசிக்க ஒன்று மறைந்திருந்து நோட்டம் விடலாம் , இல்லை எனில் நம்மால் ஆபத்து இல்லை என அவை கருதும் வரை பொறுமையாக இருந்து பின்னர் வேலையை காட்டலாம். முன்னதைப்பண்ண ஒரு பைனாக்குலர் இருந்தால் சிறப்பு.
………………………………………………………………..
வேட்டையர்களும் சரி வேட்டையாடப்படுபவர்களும் சரி சூழ்நிலையினைப்போல் உடலமைப்பு கொண்டு மறைந்து வாழ்வார்கள்.

  நாம் அவர்களைக்காணும் முன் அவர்கள் நம்மை காணும் வாய்ப்பு அதிகம்.அவர்கள் எங்கே இருப்பார்கள் என ஒரு துப்பு கிடைத்தால் , அவர்களை இனங்காணுதல் எளிது.



 ஐஸ்பாய் விளையாட்டைக்காட்டிலும் சுவாரசியாமான விளையாட்டு இது.



அப்படி ஒளிந்து  விளையாடும்  சிலரை பார்க்கலாமா ?

முள் சிலந்தி - மறைந்திருந்து தாக்கும் மர்மமென்ன ?
மாடு @tree hopper-முள் போன்ற தோற்றம் 
katydid- இலைபோன்ற உடலமைப்பு 

வெட்டுக்கிளி 

babler- bareilly
ஓணான் - பொன்பரப்பி 

நண்டு - கோவளம் 


முள் சிலந்தி 

உடும்பு - திருபத்தூர் 

brown katydid - காய்ந்த இலை போன்ற உடலமைப்பு - bareilly
paddy field pipit- bareilly outskirts
sandpiper - தெரியுரானா ? 
அப்டியே தண்ணியில பிம்பத்த  பாருங்க 

கிளி - திருச்சி 

அன்றில் பறவை-மயிலுக்கு பின்னாடி பாருங்க  -anumanthagudi
வரையாடு - மூணாறு 
முள் சிலந்தி 

பாத்து முடிச்சாச்சா ?

back to the pathivu .

போன பதிவில் ஒரு உதாரண களதை எடுத்துக்கொண்டோம் , அதனை அடிப்படையாக வைத்து சில சூத்திரங்களை வகுக்க திட்டம் போட்டிருந்தோம்.

அதனடிப்படையில் நமக்கு இப்போது சில விஷயங்கள் தெளிவாகி உள்ளது.


அவை, 

-    சூழ்நிலைக்குத்தக்கவாறே உயிரினங்களின் உடலைப்பு அமைந்திருக்கும் ( in most cases ).

-    வேட்டையர்கள் இரை இருக்கும் இடத்தில் இருப்பார்கள்.


இதன் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னன்னா....
ஒரு இடத்தின் ecosystem  மற்றும் அதன் probable உணவுச்சங்கிலியை யூகித்துவிட்டாலே. யார் யார் எங்கே இருப்பார்கள் என்பதை என்பதையும் யூகித்துவிடலாம்.

அப்புறம் என்ன? ஐஸ்பாய் ஆட வேண்டியதுதான்.
.....................................
நாம் எடுத்துக்கொண்ட உதாரண களம் ஒரு வரண்ட பூமி, அங்கே எருக்கன்செடி ஒரு பிரதான செடி, அதுக்கேத்த predator prey adaptationனை எளிதாக அறிந்து அனைவரையும் எளிதா அவுட் ஆக்கியாச்சு.

ஒத்தை செடியை அடிப்படையாகக்கொண்ட ஒரு களத்தில் ஆட்டை மிகவும் சுலபம். பேரரசு படத்தின் காட்சிகளைப்போல இப்ப பாட்டுவரும் பாரு, இப்ப ஃபைட்டுன்னு அடிச்சு ஆடலாம்.

ஆனால்.......................

 இயற்கை ஒரு perfectionist ,

 உண்மையான அடர் காடுகள் நோலனின் ப்ரெஸ்டீஜ் படம் மாதிரி,
 படத்தோட டுவிஸ்ட்ட எல்லாம் கண்டு பிடிக்க முடியாது ,வாயப்பொளந்து பாத்துட்டு வரவேண்டியது தான்.

திரும்ப திரும்ப பாத்தால் தான் படமே புரியும்.

இருப்பினும் நாம் வகுத்த சூத்திரங்கள் எப்பவுமே கை கொடுக்கும்.

மலர்கள் நிறைந்த சோலை, பழங்கள் நிறைந்த மரம் என்று ஏதாவது ஒரு lead மாட்டும்.

உணவுச்சங்கிலியின் ஏதாவது ஒரு முனை சிக்கினாலும் போதும். முழு சங்கிலியையும் உருவிடலாம்.

எடுத்துக்காட்டாக ,Bee eaterகள் ஒரு இடத்தில் கூடியிருந்தால் பட்டாம்பூச்சிக்கூட்டமோ, தட்டான் கூட்டமோ அங்கே நிச்சயம்  இருக்கும்,


bareilly ல எடுத்தது 
 பட்டாம்பூச்சி உங்களை மலர்வனத்திற்கும், தட்டான்கள் ஒரு waterholeக்கும் இட்டுச்செலல்லாம்.
மலர் வனம் - அலக்நந்தா கரையோரம் - கங்கோத்ரில எடுத்தது 


dragon fly -vedanthaangal
golden ringed dragon fly - moonar

ஒரு waterholeஐ காட்டில் நீங்கள் கண்டுபிடித்துவிட்டால் போதும்,
வேலை சுலபமாகிவிடும் .

 Age of Empires  ஆட்டதில் வரும் city center போல  , ஒரு காட்டிற்கு  waterhole.

அங்கே இருக்கும் பாதத்தடத்தை வைத்தோ, அங்கே வருவனவற்றை வைத்தோ அக்காட்டில் யார் யார் எல்லாம் இருக்காங்க என அறிந்துகொள்ளலாம். பின்னர் அவற்றைத்தேடிச்செல்லலாம்.

எடுத்துக்காட்டாக ....
மணப்பாறை அருகே ஒரு காடு 


அதில் ஒரு வாட்டர் ஹோல் 

அதைத்தேடி வரும் குரங்கு


அங்கே gaurன் காலடித்தடம்  மற்றும் சாணம் 
..............................................

அது எல்லாம் சரி நீர்நிலையை எப்படி கண்டுபிடிப்பது ?
..............................................


 பறவைகள் என்றுமே நம்மை கைவிடாது.

               
வட்டமிடும் கருடனோ, நீர்ப்பறவைகளோ நீர்நிலையின் அமைவிடங்களின் மாதிரியினைப்பற்றிய செய்தியை கட்டியம் கூறிவிடும்.

flashback...


கொக்கு,குருட்டுகொக்கு  போன்ற வளைகழுத்தினர் சிறு குளங்களையும்,நாரை குடும்பத்து (stork family) நேர் கழுத்தினர் பெரிய நீர் நிலைகளை நமக்கு  தெறிவிக்கலாம்.

பறக்கும்   போது வளைந்த கழுத்தா  அல்லது நேர் கழுத்தா  என  பார்க்க வேண்டும் . நாரை குடும்பத்தில் bittern (குருகு ) மட்டும் வளை கழுத்துக்காரன்.மத்த எல்லாருக்கும் பறக்கும் போது கழுத்து நேராக இருக்கும் . அவர்கள் பெரும்பாலும் பெரிய நீர்நிலையை சார்ந்து இருப்பார்கள் .

open billed நாரை மட்டும் வயல்வெளியை ரொம்ப விரும்புவான் .

நிற்க  .


வேலை கிடைச்சு , வறண்ட மாவட்டம் ஒன்றில் பணியமர்த்தப்பட்டேன் , பாரதிராஜா படத்துலயே ஊருக்கு ஒரு மயிலு தான் இருக்கும் ,

 அதையும் சப்பாணி பராமரிப்பான்.


இந்த ஊருல என்ன இருக்கப்போவுதுன்னு ஒரே கடுப்புல இருந்தேன்.


ஒரு நாள் எதேச்சையாக வானத்தை பார்க்க நேர்ந்தது , 

அரிவாள் வாயன்கள் வட்டம் போட்டுக்கிட்டு இருந்தானுங்க ...

எனக்கா கையும் ஓடல காலும் ஓடல  .

அனைக்குன்னு ஊரு பஞ்சாயத்து தலைவர் வந்து," டாக்டர் தம்பி உங்களுக்கு என்ன உதவி வேணுமோ   கேளுங்க "ன்னு சொன்னாரு.

மனசு வேகமாக கணக்கு போட்டது ...

அரசாங்கம் நிலவள நீர்வள திட்டத்துக்காக உங்க ஊர்ல இருக்க நீர்நிலைகள படம் புடிச்சு அனுப்ப சொல்லியிருக்கு ,

உங்க ஊர்ல ஏதாவது குளம் குட்டை இருக்கான்னு கேட்டேன்.

என்ன அப்புடி கேட்டுட்டீங்க பெரிய ஏரியே இருக்கு ன்னு சொன்னாரு.சொல்லிட்டு ஒரு உதவியாள கூட அனுப்பிசாரு .

நானும் குஷியா கேமராவ எடுத்துகிட்டு கிளம்புனேன்.

ஏரில  ஒரே பறவைக்கூட்டம் .

ஏரிக்கரையோரம் கிராம மக்கள் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்காக வேலை செய்த களைப்பில் ஓய்வெடுத்துக்கிட்டு இருந்தாங்க .

திடீர்னு ஒருத்தன் பேன்ட் ஷர்ட் போட்டுக்கிட்டு பஞ்சாயத்து தலைவரோட வேலயாளோட வந்து photo புடிக்கவும் , கலவரமாகி வேலையாள் கிட்ட என்னனு விசாரிச்சாங்க .

நீங்க எல்லாம் வேல செய்றீங்களா  இல்லையான்னு பாத்து அத அரசாங்கத்துக்கு தெரிவிக்க வந்துருக்காருன்னு கிளப்பி விட்டுட்டான் .

எல்லாரும் எங்கிட்ட வந்து இவ்ளோ நேரம் வேல செஞ்சிட்டு தான் இருந்தோம் , இப்ப தான் உக்காந்தோம்னு ஒரே புலம்பல் .
 அப்புறம் உண்மைய சொல்லிட்டு , இப்ப படம் , புடிக்ககூடாதுன்னு  எல்லாரும் போனப்புறம் மத்தியானத்துக்கு  மேல வந்து படம் புடிச்சேன் .
....................


பெரிய நீர் நிலை -  spot billed duck, black headed ibis, egret(breeding plumage), black winged stilt 
சிறிய நீர்நிலை - சிராவயல் 


சிறிய நீர்நிலையில் குருட்டுகொக்கு 
கொக்கு - வயல் வெளியில்   

  


நாரை குடும்பத்து நேர் கழுத்தினர் .....................



black headed ibis, open bill - sivagangai
painted stork - vedanthangal
வயல் வெளியில் open billed stork

மேலும் பறவைகள் இனம் காணுதல் தொடர்பான    மாஸ்டரை அணுகவும் . தமிழில் ஒரு அறிய முயற்சிஇது .

-----------------------------------

கருடனயோ நீர்ப்பறவயையோ நாம் ஒரு lead ஆக பயன்படுத்துரோமல்லவா ?
அது சம்பந்தமாக ஒரு சுவாரசிய தகவல் .

உணவுச்சங்கிலியின் கீழே இருக்கும் கோழி, காடை ,முயல்  போன்ற சிறிய உயிர்களுக்கும் கருடன் ஒரு  lead ...

கோழி இருக்கும் இடத்துக்கு மேலே இங்கே காட்டியுள்ள படத்தினை போல ஒரு மாடலின் பிம்பத்தை  நீளமான பகுதி முன்னே செல்வது போல அசைய விட்டனர் .

கோழி எதோ ஒரு நீர்ப்பறவை தான் பறக்குதுன்னு சும்மா இருந்துச்சு ,

ஆனா அப்புடியே ஆப்போசிட்டா பறக்க விட்டதும் , ஏதோ ஒரு வல்லூறு தான் பறக்குதுன்னு பயந்து பம்மிடிச்சு .


கருடன்கள் பறக்கும் இடத்துக்கு கீழே நிறைய  இரையாகும் உயிரினங்கள் நிச்சயம் இருக்கும். ஆனா பம்மிகிட்டு இருக்கும் . 

அத கண்டுபிடிக்கிறது தான் சுவாரசியமே ...
----------------------------------------

tks

Comments