திருந்­திய நெல் சாகு­ப­டி ஏக்­க­ருக்கு, 240 கிராம் போதும்!

திருந்­திய நெல் சாகு­ப­டி ஏக்­க­ருக்கு, 240 கிராம் போதும்!

திருந்­திய நெல் சாகு­ப­டிக்கு மாற்­றாக, புதிய முறையை கண்­டு­பி­டித்து, ஏக்­க­ருக்கு, 240 கிராம் விதை நெல் மூலம், 4 டன் அறு­வடை செய்த பெருமாள்: நான், நாகை மாவட்டம், மயிலாடு­ துறை அடுத்த, ஆலக்­கு­டியை சேர்ந்­தவன். சாதா­ர­ண­மாக ஏக்­க­ருக்கு, 30 கிலோ விதை நெல் பயன்­படுத்­துவர். ‘திருந்­திய நெல் சாகு­ப­டி’யில், 2 கிலோ
தேவைப்­படும். ஆனால், நான் கண்­டு­பி­டித்த புதிய முறையில், 240 கிராம் விதை நெல்லே போது­மா­னது. இந்தப் ­பு­திய முறையால், அதிக விதை நெல் வாங்கும் செலவு குறை­கி­றது. திருந்­திய நெல் சாகு­ப­டியில், 22க்கு, 22 செ.மீ., இடை­வெ­ளியில் நாற்று நடலாம். மேலும், ஒரு சதுர மீட்­ட­ருக்கு அதி­க­பட்சம், 20 நாற்­றுகள் வரையும் நடுவர். ஆனால் நான், 50க்கு, 50 செ.மீ., இடை­வெ­ளியில், ‘ஆடு­துறை47’ என்ற, ‘சன்ன’ ரக நாற்றை நட்டேன். இதனால், ஒரு சதுர மீட்­ட­ருக்கு வெறும், நான்கு நாற்­று­களே நட­மு­டியும் என்­பதால், ஏக்­க­ருக்கு, 240 கிராம் விதை நெல்லை பயன்­ப­டுத்தி, 4 டன் நெல்லை அறு­வடை செய்தேன். ‘மோட்டா’ ரகம் என்றால், 500 கிராம் விதை நெல் தேவைப்­படும். எந்த ரக நெல்­லையும், இம்­மு­றைக்கு பயன் ப­டுத்­தலாம். நிலத்தை நன்கு உழுது, இறுக்­க­மற்ற நிலையை ஏற்­ப­டுத்­து­வ­துடன், மேடு, பள்­ள­மற்ற சம­நி­லை­யையும், கட்­டாயம் அமைக்க வேண்டும். மற்ற முறை­களை விட இடை­வெளி அதிகம் என்­பதால், ஒவ்­வொரு நாற்­றிலும், 100 துார்கள் வரை வெடித்து, துாருக்கு, 70 முதல், 100 கதிர்கள் வந்­தன. ஒவ்­வொரு கதி­ரிலும், 200 முதல், 400 நெல்­ம­ணிகள் வரை கிடைப்­பதால், ஒரு நாற்­றி­லேயே, 250 கிராம் வரை, அறு­வடை செய்தேன். குத்­தாலம், ஆடு­துறை, சிக்கல், நாகை போன்ற இடங்­க­ளி­லி­ருந்து, நெல் ஆராய்ச்சி விஞ்­ஞா­னிகள் மற்றும் வேளாண் துறை அதிகா­ரிகள் பார்­வை­யிட்டு, என் புதிய முறையை பாராட்­டினர். மேலும், நாகை வேளாண் இணை இயக்­குனர், தமி­ழக அரசு வழங்கும்,

 ‘சிறந்த விவ­சா­யிக்­கான விரு­து’க்கு, என் பெயரை பரிந்­து­ரைத்­து உள்ளார். தொடர்­புக்கு 94868 35547

Comments