கடன் அட்டை மோசடி: வங்­கி­க­ளுக்கு பொறுப்பு

மும்பை;கிரெடிட், டெபிட் அட்­டைகள் வாயி­லான வர்த்­தக பரி­வர்த்­தனையில் நடை­பெறும் மோச­டிக்கு, உரிய பாது­காப்பு கட்டமைப்பு வச­தியை செய்யத் தவறும் வங்­கி­களே பொறுப்­பேற்கும் நடை­முறை, நாளை முதல் அம­லுக்கு வரு­கி­றது.கள­வா­டப்­படும் கிரெடிட், டெபிட் கார்­டுகள் மூலம், மோசடி பேர்­வ­ழிகள், வணிக அங்­கா­டி­களில் பொருட்­களை வாங்கி நழுவி விடு­கின்­றனர்.

இது போன்ற செயல்­களை தடுக்க, கார்டு பரி­வர்த்­தனை சார்ந்த பாது­காப்பு அம்­சங்­களை பலப்­ப­டுத்­து­மாறு, அனைத்து வங்­கி­க­ளுக்கும் ரிசர்வ் வங்கி உத்­த­ர­விட்­டி­ருந்­தது.அவ்­வாறு செயல்­ப­டாத வங்­கிகள், மோசடி பணத்தை, சம்­பந்தப்­பட்ட வாடிக்­கை­யா­ள­ருக்கு, புகார் அளித்த ஏழு நாட்­க­ளுக்குள் வழங்க வேண்டும். தவ­றினால், மறுநாள் முதல், நாள் ஒன்­றுக்கு, 100 ரூபாய் வீதம், இழப்­பீ­டாக வழங்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் மாதம் தெரி­வித்­தி­ருந்­தது.வங்­கிகள், இந்த நடை­மு­றையை, அக்­டோபர் 1 முதல் பின்­பற்ற வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரி­வித்­தி­ருந்­தது. எனினும், இதை நடை­மு­றைப்­ப­டுத்த, கூடுதல் அவ­காசம் வேண்­டும என, சில வங்­கிகள் கோரிக்கை விடுத்­தி­ருந்­தன.ஆனால், இக்­கோ­ரிக்­கையை நிரா­க­ரித்த ரிசர்வ் வங்கி, ஏற்கனவே அறி­வித்­த­படி, அக்­டோபர் 1 முதல், உத்­த­ரவு அமலுக்கு வரு­வ­தாக தெரி­வித்­துள்­ளது

Comments