அசோலா நீர் நிலைகளில் மிதவைத் தாவரமாக வளரும் பெரணி வகையினைச் சார்ந்தது. இது நெற்பயிருக்கு ஒரு சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனைக் கால்நடை மற்றும் கோழிகளுக்கு புரதச் சத்து மிகுந்த தீவனமாக பயன்படுத்தி உற்பத்திச் செலவினைக் கணிசமாக குறைக்க முடியும் என்பதை உழவர் பெருமக்கள் சமீப காலமாக உணர்ந்து வருகின்றனர்.
அசோலாவிலுள்ள சத்துக்கள் :
அசோலாவில் 25- 30 விழுக்காடு புரதச்சத்து, 14-15 விழுக்காடு நார்ச்சத்து, சுமார் 3 விழுக்காடு கொழுப்புச் சத்து, 45- 50 விழுக்காடு மாவுச்சத்து, பல்வேறுபட்ட கால்நடை மற்றும் கோழி தீவனத்திற்கு அவசியமான தாது உப்புக்கள் (கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம்) மற்றும் பல நுண்ணூட்டச் சத்துக்களும் காணப்படுகின்றன. பொதுவாக தாவர இலைகளில் மிகுந்து காணப்படும் டானின் என்ற நச்சு அசோலாவில் மிகவும் குறைவாக காணப்படுவதால் இது ஒரு சிறந்த கால்நடை தீவனமாக திகழ்கிறது.
அசோலா வளர்க்கும் முறை
அசோலாவைத் தொட்டிகளிலும் மற்றும் வயல்களிலும் வளர்க்கலாம். சிமெண்ட் தொட்டிகளில் கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு வயல் மண்ணை இட்டு நிரப்பி 10 செ.மீ அளவு நீர் நிரப்பி சதுர அடிக்கு 5 கிராம் சூப்பர் பாஸ்பேட், 250 கிராம் பசுஞ்சாணம் ஆகியவைகளை இட்ட பிறகு 200 கிராம் அசோலாவை தொட்டியில் இட வேண்டும். இரு வார காலத்திற்குள் தொட்டியில் இட்ட அசோலா நன்றாக வளர்ச்சி அடைந்து இரண்டு முறை மூன்று கிலோ வரை விளைச்சல் கொடுக்கின்றது. அசோலா வளர வளர தொட்டிகளிலிருந்து தினசரி இயன்ற அளவு ஒரு பகுதி அசோலாவை எடுத்து தீவனமாக பயன்படுத்தலாம்.
இவ்வாறு உற்பத்தி செய்த அசோலாவை பச்சைத் தாவரமாகவோ அல்லது சூரிய ஒளியில் உலர்த்தியோ கால்நடை மற்றும் கோழிகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தலாம். அசோலாவை கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கும் முறையும் அதன் பயன்களும்
கால்நடை தீவனம்:
பசுமையான அசோலாவை நாள் ஒன்றுக்கு ஆடு, மாடு மற்றும் பன்றிகளுக்கு 1 -1/2 முதல் 2 கிலோ வரை கொடுக்கலாம்.
1. பால் உற்பத்தி அதிகரிப்பதுடன் பாலின் தரமும் மேம்படுகிறது.
2. பால் உற்பத்தி 15 முதல் 20 விழுக்காடு அதிகரிக்கிறது.
3. பாலின் கொழுப்புச் சத்து 10 விழுக்காடு வரை உயருகிறது.

கொழுப்புச் சத்து அல்லாத திடப்பொருள்களின் (SNF) அளவு 3 விழுக்காடு வரை கூடுகிறது.
தமிழ்நாட்டில் விவசாயிகள் விவசாயத்துடன் கால்நடையையும் தொன்றுத்தொட்டு வளர்த்து வருகின்றனர். அதில் ” ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படும் வெள்ளாடு வளர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது தமிழ்நாட்டில் 6.5 மில்லியன் வெள்ளாடுகள் உள்ளது. பல்வேறு வகையான நம் நாட்டு இன ஆடுகளும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடுகளும் தற்போதைய வெள்ளாடு வளர்ப்பில் ஈடுபட போகும் தொழில் அதிபர்களுக்கு சிறந்ததொரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
தகவல் மூலம் : வணிகரீதியான ஆடு வளர்ப்பு.
தகவல் அனுப்பியவர் : முருகன், திருவையாறு
அசோலா வளர்ப்பு.... இந்த உலகத்தில் தோன்றிய தொன்மையான உயிரினங்களில் பெரணி வகையைச் சார்ந்த அசோலாவும் ஒன்று. பார்ப்பதற்கு கம்மல் போல இருப்பதால் 'கம்மல் பாசி' என்றும் சொல்கிறார்கள். இதில், வாழும் ‘அனபீனா அசோலா’ என்ற பாக்டீரியாக்கள் காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகிக்கின்றன. இதில் சுமார் 26% தழைச்சத்து உள்ளது. ஒரு பாத்திரம் அல்லது தொட்டியில் 7-10 செ.மீ. உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கிக் கொள்ளவும். பாலிதீன் ஷீட் மற்றும் செங்கற்களை பயன்படுத்தியும் தரையிலேயே தொட்டியை உருவாக்கிக் கொள்ளலாம். சூரிய ஒளி படும் இடத்தில் இந்தத் தொட்டி இருக்கவேண்டும். தொட்டியில் இருக்கும் தண்ணீரில் சாணம் ஒரு கிலோ, பாறைத்தூள் ஒரு கைப்பிடி, அசோலா விதைகள் ஒரு கைப்பிடி போட்டுக் கலக்கி விடவும். அடுத்த ஒரே வாரத்தில் பத்துமடங்கு அளவுக்கு அசோலா பெருகியிருக்கும். மீண்டும் அசோலா வேண்டும் என்றால் சாணம் மற்றும் பாறைத்தூளை தொட்டியில் போட்டால் போதும்... பெருக ஆரம்பித்து விடும். இந்த அசோலாவை நெல் வயலுக்கு இட்டால் கூடுதல் மகசூல் கிடைக்கும். வயலில் இரண்டாம் களை எடுக்கும்போது அசோலாவை வயலில் வைத்து மிதித்துவிடவும். தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து என முக்கியமான சத்துக்கள் ஒருங்கே அடங்கிய அதிசய தாவரம்தான் இந்த அசோலா. இதை பால் மாடுகளுக்குக் கொடுத்தால் அதிக பட்சம் 2 லிட்டர் வரை கூடுதல் பால் கிடைக்கும். 25% தீவனச் செலவு குறையும். கோழி களுக்கு கொடுத்தால் அதிக முட்டையிடும். மீன்களுக்கு போட்டால் விரைவாக வளரும். புரதச் சத்து மிகுந்த இந்த பாசியில் வடை, போண்டா செய்து நாம் சாப்பிடலாம். கொசுறு தகவல்: அசோலா வளர்க்கப் படும் இடங்களை கொசுக்கள் எட்டிக்கூட பார்க்காது. பாடம் சொல்லும் படங்கள்... 1. செங்கல், பாலிதீன் விரிப்பு... 2. அசோலா தொட்டி தயார்... 3. நிலத்தின் மேல்மண்... 4. சாணம்... 5. பாறைத்தூள் ஒரு கைப்பிடி... 6. அசோலா விதை தூவும் பணி...

Comments
Post a Comment