கிடா ஆடுகளைத் தேர்ந்தெடுத்தல்
கிடாக்கள் மந்தையில் பாதி என்பார்கள். சுமார் 30 முதல் 50 ஆடுகளுக்கு
ஒரு பொலி கிடா போதுமானது. பொலி கிடாவை தேர்ந்தெடுக்கும்
போது கவனிக்க வேண்டியவை.
ஒரு பொலி கிடா போதுமானது. பொலி கிடாவை தேர்ந்தெடுக்கும்
போது கவனிக்க வேண்டியவை.
மற்றவர்கள் பண்ணையில் தேர்வு செய்யும்போது
- நல்ல ஆரோக்கியமானதாகவும், சுறுசுறுப்பாகவும், வயதிற்கு
- தகுந்த நல்ல வளர்ச்சியுள்ளதாகவும், நல்ல எடையுள்ளதாகவும்
- இருத்தல் வேண்டும்.
- கிடாக்கள் உயரமாகவும், உடல்நீளமாகவும், மார்பு அகன்றதாகவும்,
- விரிந்த மார்பெலும்புகளைக் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும்.
- கிடாக்களின் பின்னங்கால்கள் நன்கு திடமாக இருத்தல் வேண்டும்.
- கால்கள் நேராக இருக்க வேண்டும்.
- கிடாக்கள் வீரியத்துடன் பொலிவு செய்யும் திறன் வாய்ந்ததாக
- இருக்க வேண்டும்.
- ஒரு விதைப்பையினுள் இரண்டு ஒரே அளவுள்ள விதைகள் இருக்க வேண்டும். விதைப்பையின் சுற்றளவு குறைந்த பட்சம்
- 25-35 செ.மீட்டராவது இருக்க வேண்டும்.
- ஒரு விதையுள்ள கிடாக்களை வாங்கக்கூடாது.
- இனத்திற்கான பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும்.
சொந்த பண்ணையில் தேர்வு செய்யும்போது
மேற்கண்ட குணங்களுடன்,
- 2-3 குட்டிகளை ஈனும் பெட்டையாட்டின் குட்டிகளிலிருந்து
- தேர்வு செய்ய வேண்டும்.
- நல்ல எடையுள்ள, ஆரோக்கியமான குட்டிகளை 6 மாதவயதில்
- தேர்வு செய்ய வேண்டும்.
- 3-4 சதவீத குட்டிகளை தேர்வு செய்ய வேண்டும்.
- சுமார் 9 முதல் 12 மாதங்களில் பருவமடைந்திருக்க வேண்டும்.
பெட்டை ஆடுகளைத் தேர்ந்தெடுத்தல்
மற்றவர்கள் பண்ணையில் தேர்வு செய்யும்போது
- தலை குறுகியதாகவும், கழுத்து மெலிந்தும், உடல் நீளமாகவும்
- இருக்க வேண்டும்.
- நன்கு வளர்ச்சியடைந்த, மிருதுவான மடி உடலுடன் நன்கு
- ஒட்டியிருக்க வேண்டும்.
- மிருதுவான மற்றும் பால் கறந்தவுடன் சுருங்கக்கூடிய பால்
- காம்புகளாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட காம்புகள்
- உள்ள ஆடுகளை வாங்கக்கூடாது.
- முதுகுப்புறமும், பின்பகுதியும் அகன்று விரிந்து இருக்கும் ஆடுகளை
- வாங்க வேண்டும்.
- நல்ல எடையுள்ள, ஆரோக்கியமான பெட்டை ஆடுகளைத் தேர்வு
- செய்ய வேண்டும்.
சொந்த பண்ணையில் தேர்வு செய்யும்போது
மேற்கண்ட குணங்களுடன்,
- பெட்டை ஆடுகள் 6 முதல் 9 மாதங்களில் பருவமடைந்திருக்க
- வேண்டும்.
- ஒரு ஈற்றில் 2 ஈனும் ஆடுகளின் குட்டிகளிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
- நல்ல எடையுள்ள, ஆரோக்கியமான பெட்டை குட்டிகளை
- 3 மாத வயதில் தேர்வு செய்ய வேண்டும்
- 30-35 சதவீத குட்டிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
‘தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை’ என்ற
பழமொழிக்கேற்ப நல்ல தரமான ஆட்டுக்குட்டிகளைப் பெறுவதற்கு
நல்ல பெட்டை ஆடுகளும், தரமான பொலிக் கிடாக்களும் மிகவும்
அவசியம். பொதுவாக பொலி கிடாக்கள் நல்ல குட்டிகளை
உருவாக்குவதில் 80-90 பங்கு வகிக்கின்றன. ஆகவே அதிக விலையில்
நல்ல பொலி கிடாக்களை வாங்க வேண்டும்.
பழமொழிக்கேற்ப நல்ல தரமான ஆட்டுக்குட்டிகளைப் பெறுவதற்கு
நல்ல பெட்டை ஆடுகளும், தரமான பொலிக் கிடாக்களும் மிகவும்
அவசியம். பொதுவாக பொலி கிடாக்கள் நல்ல குட்டிகளை
உருவாக்குவதில் 80-90 பங்கு வகிக்கின்றன. ஆகவே அதிக விலையில்
நல்ல பொலி கிடாக்களை வாங்க வேண்டும்.
Comments
Post a Comment