வீட்டிலேயே தேனீ வளர்க்கலாம்!

தேனீக்களை, வீட்டி லேயே வளர்க்கும் வழிமுறைகளை கூறும், சுவாமிநாதன்: என் சொந்த ஊர், தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாள். தற்போது சென்னை, சிட்டிலப்பாக்கத்தில் வசிக்கிறேன். பள்ளிக்கு செல்லும்போதே, தேனீக்கள் மீது ஆர்வம் அதிகம். எனவே, மார்த்தாண்டத்தில் உள்ள தேனீ வளர்ப்பு மையத்தில் பயிற்சி பெற்றேன். நான், இந்தியன் மற்றும் இத்தாலியன் தேனீக்களை வளர்த்து வருகிறேன். இத்தாலியன் தேனீக்கள், மிக சாதுவானவை. ஏனெனில், கொட்டும் தன்மை அதற்கு கிடையாது. ஆனால், இந்தியன் தேனீக்களை, மனிதர்கள் தெரியாமல் சீண்டினாலே கொட்டிவிடும் இயல்புடையது. காட்டுத் தேனீக்கள், மலை இடுக்குகள், பெரிய மரங்கள் என, மிக உயரமான இடங்களில் மட்டுமே, கூடு கட்டும். ஆனால், வீட்டில் வளர்க்கும் தேனீக்கள், இரண்டு மாடி உயரத்திற்கு மேல் பறக்காது. எனவே, வீட்டின் மொட்டை மாடியில் வெயில் படாத இடமாக பார்த்து, தேனீக்கள் வளர்க்கும் பெட்டியை வைத்தாலே போதும்... அவை தானாக வளர்ந்து விடும். தேனீ வளர்க்கும் பெட்டிகளின், மரபிரேம்களில் இருக் கும் தேன், அடைகள் முழுக்க நிரம்பியதும், அடைகளை அப்படியே கத்தியால் செதுக்கி எடுத்து, கைகளாலே பிழிந்து வடிகட்டலாம். எவ்வித கலப்படமும் இல்லாத இயற்கையான தேன் கிடைப்பதால், சிலர் பொழுது போக்கிற்காகவும், பலர், வர்த்தக நோக்கிற்காகவும் வளர்க்கின்றனர். தேனீக்களின் பெட்டிகள், மழை நேரங்களில் தண்ணீ ரில் நனைய கூடாது. ஏனெனில், பூஞ்சைகளால் தொற்று ஏற்பட்டு, தேனீக்கள் இறந்துவிடும். மற்ற படி எவ்வித பராமரிப்பும் தேவையில்லை. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் தான், தேனீக்களின் இனப்பெருக்க காலம். ராணி தேனீ, ஒரே சமயத்தில், 800 முட்டை கள் இடும். அது, நான்கு நாட்களில் 15 முதல் 17 நாட்களில் தேனீக்களாக மாறிவிடும். இதன் வாழ்நாள், 40 முதல் 45 நாட்களே. தான் சாகும் காலம் முன்னரே தெரிவதால், எந்த தேனீக்களும் கூட்டில் இறக்காமல், வெளியே சென்று விடும்.

Comments