சூரிய ஒளி குவிப்பு . 10 பைசாவில் அனைவருக்கும் தடையில்லா மின்சாரம்.

இரண்டாவது வழிமுறையான கான்சன்டிரேசனே சரியான வழிமுறையாகும்.
இதில் குழி ஆடிகள் , அல்லது பூத கண்ணடி போன்ற ஏதேனும் ஒன்றன் மூலம் சூரிய சக்தி  குவிக்கபடுகின்றது. சிறு வயதில் பூத கண்ணாடியில் சூரிய ஒளியை பேப்பரி குவித்து எரித்து விளையாடுவோமே… அதே உத்தி தான். ஆனால் மிக பெரிய அளவில்.
சூரிய ஒளியை குவித்து தண்ணிரையோ அல்லது வேறு திரவத்தையோ சூடாக்கினால் அந்த நீராவி ஆற்றலை  டைனமோவை இயக்க பயன்படுத்தலாம்.
இதை கடற்கரையில் நிறுவி சூரிய ஓளீயை கொண்டு கடல் நீரை நீராவியாக்கினால் தேவையான நீர் தட்டுப்படு இல்லாமல் கிடைக்கும்.
நீராவியை சேகரித்து குளிர்வித்தால் மின்சாரத்துடன் இலவசமாக் பல ஆயிரம் ஏன் லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும்.
இதில் முக்கியமான பிரச்சனை சூரிய வெளிச்சம் பகல் 12 மணி நேரம் இருந்தால் கூட இரவு 12 மணி நேறம் மின்சாரம் தயரிக்க முடியாது.
இதற்கு 2 முறையில் சரி செய்யலாம்.
1) சிறிய அளவிலான மின் உற்பத்தி திட்டங்களில் , நீரை சூடக்கி நீராவியை பெறுவதற்கு பதில் சூரிய சக்தியை கொண்டு காற்றை அழுத்தி சிலிண்டர்களீல் சேகரித்து வைத்து கொள்ளலாம்.
அழுத்தப்ப்ட்ட காற்றை  கொண்டு டைனமோவை இயங்க செய்து 24 மணி நேரமும் தங்குதடை இல்லாத மின் சக்தியை பெறலாம்.
1.1) இன்னொறு வழி அழுத்தப்பட்ட காற்றை  கொண்டு எஞ்சினை இயக்கலாம் இதனால் தற்போதய ஜெனரேட்டர்கள் அனைத்தயும் அப்படியே பயன்படுத்தலாம்.
1.2) பெட்ரோல் டீசல் அல்லது கேஸ்லிற்கு பதில் இந்த அழுத்தப்பட்ட காற்றை வாகனத்தில் நிரப்பினால் பைசா செலவில் பல கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம்.
2) மிக பெரிய அளவிலான 5 -6 மின்/நீர் உற்பத்தி நிலையங்களை பரந்த நிலப்பரம் குறைந்த மக்கள் தொகையும், பூமத்திய ரேகை அருகில் இருக்கும் ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா போன்ற கண்டங்களில் நிறுவினால் , எப்படியும் 2 -3 நிலையங்கள் பகல் ஒளியில் இருக்கும். எனவே அவற்றின் உற்பத்தியை கொண்டே உலகின் சக்தி தேவையை நிறைவு செய்யலாம்.
இவற்றிட்கு கடலடியில் தாற்போதய இண்டர் நெட் நெவெர்க் போல பவர் நேட்வோர்க் அமைக்கப்ட வேண்டும்.
மின்சாரத்தை கம்ப்யில்லாமல் அனுப்பும் முறை என்று பார்த்தல் மைக்ரோ வேவ் வாக அனுப்பலாம் , இந்த முறையில் மட்டும்  கொஞ்சம் நீண்ட ஆய்வு பணி தேவை.  மற்ற பணிகள் எல்லாம் தற்போதய தொழில் நுட்பத்துடந் செய்து விடலாம்.
கம்பியில்லா மின்சாரம் மட்டும் ஆய்வு தேவைப்படும் இடமாக உள்ளது. இதை சாத்தியமாக்கினால் அனைத்து சாதனங்களயும் கம்பியின்றி + பேட்டரி இன்றி இயக்குவது சாத்தியம் ஆகும்.
செல் போன் சிக்னல் கிடைப்பது போல் மின்சாரமும் கிடைத்தால்  பேட்டரிகளை மறந்துவிட்டு சாதனங்களை இயக்கலாம்.
இதயும் சற்று பெரிதாக்கினால் அனைத்து வாகனக்கள் ஏன் , கப்பல், விமானங்கள் அனைத்தயும், மின்சாரத்தால் இயங்க வைத்து , சூரிய ஒளீ மின் சாரத்தை பகிரும்போது சுற்றுபுர சூழல் மாசுபாடற்ற , ஒரு அருமையான உலகை நம் சந்ததிக்கு விட்டு செல்வோம்.

மூன்றாம் உலக போரே தண்ணிருக்காகத்தன் வரும் என பலரும கருதுகின்றனர். நம் திட்டம் செயல்பட ஆரம்ப்த்தால் தண்ணீர ஒரு பிரச்சனையாக இனி எப்போதும் இருக்காது.
சிறிய அளவில் திட்டமிட்டு…
முதலில் பயன்பாட்டில் இருக்கும் ஜெனரேட்டர்களை சூரிய சக்தி பயன்படுத்துமறு மாற்ற ஒரு யூனிட் தயார் செய்வோம் என்றால் ..
அதன் விற்பனை எப்படி இருக்கும் ?
சிறிய எடுத்துகாட்டு…refer. in 1999 alone 418,000 number of generators was imported in US alone.
1999 733,000 418.000
2000 288,000 164,000
2001 342,000 195,000
2002 357,000 203,000
கூகிள் விபரங்களின்படி அமரிக்கவில் 1999ம் ஆண்டு மட்டும் 4,18,000 ஜெனரேட்டர்கள் இறக்குமதி செய்ப்பட்டன. உள்ளுரில் தயரிக்கபட்ட ஜெனரேட்டர்கள் இதில் அடங்கா. அடுத்த வருடம் இறக்குமதி குறைகிறது எனவே வருடம் 2 லட்சம் என கொள்ளலாம்.
ஜெனரேட்டரின் ஆயூள் 5 வருடம் என கொண்டாலும் 10 லட்சம் ஜேனரேட்டர்கள் இயங்கு நிலையில் இருக்கலாம்
இதில் நாம் 50% சதம் சந்தையை கைப்பறிலாலும் 5 லட்சம் ஜெனரேட்டர்கள் உள்ளன.
பெட்ரோல் டீசல் செலவு இனி இல்லை என்பதை கருத்தில் கொண்டு நமது யூனிட்டை சுமார் 30,000 ரூபாய் விலையில் விற்றால் 15000000000. ரூபாய் வியாபரம் கிடைக்கும். 10 சதம் லாபம் என்றாலும் 150 கோடி லாபம்
மேலும்  வருட பராமரிப்பு ஒப்பந்தம் செய்து கொண்ட்டால் இதே 150 கோடி இன்னப் பல வருடங்கள் கிடைக்கும்.
உலக அளவில் மின் உபயோகம் 98022000000000 kilo watt of power
refer http://en.wikipedia.org/wiki/World_energy_consumption
இது 2008 ம் ஆண்டு கணக்கு.
நாம் இதில் 10% சந்தாதாரகளை பெற்று  அவர்களுக்கு வெறும் 10 பைசா செலவில் மின்சாரம் விற்றாலும் 9802200000000 ரூபாய் வருமானம் இதில் 10% நம் லாபம் என்றாலும் 980220000000 ரூபாய் லாபம்.
இதில் புதிய  2008கு பிறகு அதிகரித்த மின் உயயோகம் சேர்க்கப்டவில்லை. மேலும் நாம் முதலில் விவாதித்த கம்ப்யில்ல மின்சாரத்தல் அனைத்தும் மின்சாரத்தில் இயங்கினால் கிடைக்கும் வருவாய் சேர்க்கப்டவில்லை.
அனைத்தைதையும் சேர்த்து பார்த்தால் இதில் வானமே. எல்லை..
இல்லை இல்லை சூரியனே எல்லை..
முழுவிபரசுட்டிகளுடன் மும்பை ஐ ஐட்டி அனுப்பட்ட கட்டுரையின் ப்ரதி கிழே தரப்படுள்ளது…
இந்த திட்ட நகலுடன் மும்பை ஐஐடி யின் யுரேகா 12 , நாசா, கூகிள் போன்ற பல நிறுவனங்களை தொடர்பு கொண்டு இந்த திட்டத்தை முழுமையாக ஆய்வுக்கு நிதியுதவி கிடைக்குமா என முயன்று வருகிறென்.
உங்களுக்கு இதன் ஆய்வு பணிகள் நடைபெற ஏதேனும் வழிகள் தெரிந்தல் தயவு செய்து தெரிவித்து உதவுங்கள்.
ஆர்வமிருப்பவர் இணைந்து பணி செய்தலும் மகிழ்ச்சியே.
யாரரிவர்… உங்களால் இந்த திட்டம் முழுமையடய வேண்டும் என்பது இறைவனின் சித்தமாக கூட இருக்கலாம்.

நன்றி
தொடர்புக்கு…
வினோத்
glomoinc@gmail.com

Comments