இலாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு.,

மனிதன் முதன் முதலில் வீடுகளில் வளர்க்கத் துவங்கிய பிராணி ஆடு ஆகும். இது ஏழைகளின் பசு என்று அழைக்கப்படுகிறது. 

ஏனென்றால் ஆட்டின் இறைச்சி மிருதுவானதாகவும், குறைவான கொழுப்புச் சத்தையும் கொண்டுள்ளது.
எனவே இது எல்லோராலும் விரும்பி உண்ணப்படுகிறது. ஆட்டிறைச்சியின் விலை உயர்வாக இருந்தாலும் அதன் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.பண்ணை அமைத்து தீனி போட்டு வளர்த்தால் அதிக லாபத்தை ஈட்ட முடியும்.

ஆடுகள் விரைவில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. இரண்டிரண்டாகவோ, மூன்று மூன்றாகவோ குட்டிகளை ஈனும் தன்மை படைத்தவை.

ஆடுகளை வாங்கி பண்ணைகளை அமைப்பதற்கு குறைவான முதலீடு போதுமானதாகும். .

ஆடுகளையும், அதன் குட்டிகளையும் எந்த நேரத்திலும் விற்று பணமாக மாற்றிவிட முடியும்.

ஆடுகள் குறுகிய கர்ப்ப காலம் கொண்டவை. (குறுகிய கருத்தங்கல் காலம்)

நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் குறைவு. பண்ணை உணவு முறையைக் கொண்டுள்ளதால் மருத்துவத்திற்கும், மருந்திற்கும் மிகக் குறைவாகவே செலவாகும்.

60 சதவீத ஆடுகள் ஆண்டு தோறும் அறுக்கப்படுகிறது. இருந்தாலும் அதன் இனப்பெருக்கம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இறைச்சி, பால், உரம், தோல் & பளபளக்கும் மிருதுவான முடி போன்றவைகளுக்காக ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.

உயிருள்ள ஆடுகள், அறுக்கப்பட்ட ஆடுகள், ஆட்டிறைச்சி, தோல் போன்றவைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டமுடியும். பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி விவசாயம் செய்வதால் நிலங்கள் தரிசாக மாறிப்போகின்றன. நகரங்களும், கிராமங்களும் வேகமாக விரிவடைந்து வருகின்றன. இதனால் மேய்ச்சல் நிலங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. எனவே பண்ணைகளை அமைத்து ஆடுகளை இனப்பெருக்கம் செய்யவேண்டியதன் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஆடுகள் உயிர் வாழும் காலம் = 15 ஆண்டுகள். 

முறையான பராமரிப்பின் மூலம் இறப்பு விகிதத்தை  2 சதவீதமாக குறைக்க முடியும். நோயிலிருந்து காக்கவும், வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றவும் சரியான காலக்கெடுவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய ஆட்டிறைச்சி உலகம் முழுவதும் விரும்பி உண்ணப்படுகிறது.

ஆட்டுப்பண்ணை வளம் கொழிக்கும் ஒருங்கிணைந்த விவசாயம்:
பண்ணையில் தீவனம் உண்ணும் ஆடுகள் "செறிவுள்ள ஒருங்கிணைந்த விவசாய முறை (Intensive Integrated Farming System - IIFS)"யின் கீழ் வருகின்றன. ஆடு போன்ற சிறிய பிராணிகளைக்கொண்டு சிரமமின்றி பண்ணைகளை பராமரிக்க முடியும். அவைகள் பயிர்களின் எச்சங்களை உண்டு தரமான இயற்கை உரங்களை வெளியேற்றுகின்றன. ஏராளமான விவசாயிகள் ஆட்டுப் பண்ணைகள் அமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். செறிவுள்ள ஒருங்கிணைந்த விவசாய முயற்சி வளம் கொழிக்கும் இலாபகரமான தொழிலாகும்.

ஆடுகள் சத்தான தானியங்களின் எச்சங்களையும், தாவரங்களின் தண்டுகளையும் விரும்பி உண்கின்றன. அதிலும் குறிப்பாக, அவைகளை புல் போன்ற பசுமையான தீவனங்களுடன் கலந்து கொடுத்தால் அதன் உண்ணும்கம்பு மற்றும் புண்ணாக்கு கலந்து தயாரிக்கப்படுகிறது. தீவனத்திற்கு ஆகும் செலவு மற்றும் ஆடிடையன் (பணியாள்) மேய்ப்பு, தீவனமிடுதல், அது சார்ந்த பிற வேலைகளையும் கவனித்துக் கொள்வதால் ஆடு வளர்ப்பின் அசல் தொகை மிகக் குறைவாகும். ஆட்டின் வளமான உரம் (கழிவு) மீன் பண்ணைகளுக்கும், மற்ற விவசாயப் பயிர்களுக்கும் மிகச் சிறந்ததாகும். மண்புழு உரம் தயாரிக்க மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆர்வம் இன்னும் அதிகரிக்கும். சிறப்பு ஆட்டுத் தீவனங்கள் 

. சிறிய பண்ணை அமைத்து ஆடுகளை பராமரிக்க முடியும். ஒரு முதிர்ந்த ஆட்டுக்கு ஒரு சதுர மீட்டர் இடம் போதுமானதாகும். விவசாய நிலம் இல்லாதவர்களும், சிறு மற்றும் குறுந்தொழில் மட்டுமே செய்ய முடியும் என்று நினைப்பவர்களும் இதனை தாராளமாக தொடங்கலாம். முறையான தீனியும், பராமரிப்பும் உள்ள பால் கறக்கும் ஆட்டிலிருந்து தினமும் தோராயமாக .7 - 1.5 லிட்டர் வரை பால் தரும். பெண் ஆடு ஒவ்வொரு முறை குட்டிகளை ஈனும் பொழுதும் 1-2-4 குட்டிகளை ஈனும். (கருத்தங்கள் காலம் குறைவான 150 நாட்கள் மட்டுமே)

 உயர் ரக இந்திய ஆடுகளின் மூலம் கலப்பினப் பெருக்க முறையில் புதிய ரகங்களை உருவாக்க முடியும். சோஜத் , சிரோஹி, ஜம்னாபாரி, சுர்டி, தெல்லிச்சேரி, பீட்டல், மலபாரி, பார்பாரி, குஜராத்தி போன்றவைகள் புகழ் பெற்ற இந்திய ராகங்களாகும்.

ஒரு சிறிய பண்ணை அமைப்பதற்கு நல்ல காற்றோட்டமுள்ள ஒரு சிறிய கொட்டகை (Shed) போதுமானதாகும். நெல்லின் உமியும், நிலக்கடலையின் ஓடுகளையும் கலந்து பரப்பிவைத்த தரை பரப்பு ஆடு வளர்ப்புக்கு உகந்தது. இக்கலவையின் உயிரியல் செயல்பாடு கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் மித வெப்பமாகவும் தரைப் பரப்பை வைத்திருக்கும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை இக்கலவையை மாற்றினால் போதும்.

தரைக் கலவையை தினமும் கிளறி விடுவதால் துர்நாற்றத்தை போக்க முடியும்.

தரைக் கலவையில் சாணமும், மூத்திரமும் நன்கு கலந்து செறிவூட்டப்பட்ட இயற்கை உரமாக மாறும். முதிர்ந்த ஆடுகளின் வருடம் கூட கூட சாணத்தின் தரமும் கூடும்.

ஆடு ஆரோக்கியமான பிராணியாகவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளதாக இருந்தாலும் பாதங்களிலும், வாயிலும் நோய் தோற்று வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். வருடத்திற்கு இரு முறை வயிற்றுப் புழு வராமலிருக்கவும், ஆரோக்கியத்தை காக்கவும் வேப்பிலையை அரைத்துக் கொடுக்க வேண்டும்.

ஆட்டுப்பன்னையை கோழிப்பண்ணையை பராமரிப்பது போன்று எளிதாக பராமரிக்கலாம். இது சிக்கனமானது. 

தண்ணீர் ஆட்டிற்கு விலை மலிவான உணவாகும். ஆனால் பெரும்பாலும் கொடுக்கப்படுவது இல்லை. இது தவறாகும்.

ஆடு வளர்க்க விரும்புவோர் அணுகலாம்.
திரு .வெங்கடாசலம் 
கைபேசி :9790656467.,
(எங்களிடம்சோஜத் மற்றும் சோஜத் + போயர் கலப்பின ஆடுகள் விற்பனைக்கு உள்ளன )

Comments