தமிழ்நாட்டில் ஆடு, மாடு வளர்ப்பு கூட செல்லப்பிராணி வளர்ப்பு போலத்தான். அவை வருமானம் தரும் செல்லப்பிராணிகள். குழந்தைகளைப் போல நாள்தோறும் அவைகளை கவனிப்பதே ஆரோக்கியமான பொழுதுபோக்காக இருக்கும்
பசு, எருமை போன்ற கால்நடைகளில் வளர்க்க முடியாத சூழலில் கூட மிகக்குறைந்த செலவில் வெள்ளாடுகளை வளர்க்கின்றனர் விவசாயிகள். இதற்கு முதலீடு மிகவும் குறைவு. உலகில் மாட்டுப் பாலை விட சில இடங்களில் ஆட்டுப்பாலையே விரும்பி அருந்துகின்றனர். அது போல் ஆட்டு இறைச்சியும், ஒரு முக்கிய உணவாகும். ஆட்டு இறைச்சியில் பன்றி இறைச்சியை விட கொழுப்பு குறைவாகவே உள்ளது. மேலும் இது குளிர்ச்சியானதால் வெயில் காலங்களுக்கு மிகவும் ஏற்றது. வெள்ளாடு இனங்கள் மலபாரி, அட்டபாடி, சேனன் மலபாரி கலப்பு இனங்கள் அதிகம் காணப்படுகின்றன. வயது முதிர்ந்த ஆடுகள் வாங்கும் போது அதன் பால் உற்பத்தித் திறனை அறிந்த பின் வாங்குதல் நலம். அதேபோல் இளம் ஆடுகளை வாங்கும் போது அதன் குட்டி ஈனும் உற்பத்தி அளவைப் பார்த்து வாங்குதல் வேண்டும். அதோடு ஆடு எந்த ஒரு உடல் குறைபாடும் இன்றி இருக்கவேண்டும். இறைச்சித் தேவை வெள்ளாடுகள் இறைச்சி மற்றும் பால் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. நிலமற்ற மற்றும் குறுநில ஏழை விவசாயிகளுக்கு வாழ்வுக்கு சிறந்த வழிகாட்டியான ஆடுகள் அதிக ஊட்டச்சத்துள்ள பாலை வழங்குகின்றன. மேலும் வெள்ளாடுகள் மழை அளவு குறைவாக உள்ள வறண்ட நிலங்களில் கூட வளர்த்தல் எளிது. எனவே தான் வெள்ளாடுகளை “ஏழைகளின் பசு” என்று அழைக்கின்றனர். முதலீடு குறைவு நிலம் அதிகமாக இருக்குமெனில், செம்மறி ஆடுகளை மேயவிட்டும், வீட்டில் தொழுவத்தில் பராமரித்தும் வளர்க்கலாம்.இவை அளவில் சிறியதாக உள்ளதால் கொட்டகைப் பராமரிப்புச் செலவு குறைவு. ஆடுகள் மிக்குறைந்த காலத்தில் 10-12 மாதங்களில் பருவ வயதை அடைந்து விடும். இவை 16-17 மாதங்களில் குட்டி ஈன்று விடும். தீவனபராமரிப்பு செலவு ஆடுகள், பலவகைப்பட்ட பயிர்களையும் உண்பவை. இவை முட்புதர்கள், பூடுகள், வேளாண் பயிர்க்கழிவுகள் மேலும் வேளாண் உப விளைப்பொருட்கள் போன்ற அனைத்தையும் உண்பதால் தீவனப் பராமரிப்புக் குறைவு. வெள்ளாடுகள் ஆங்காங்கு இருக்கும் புதர்ச்செடிகளில் மேயும். அசாதாராணமான தட்பவெப்ப சூழ்நிலைகளையும் தாண்டி கிடைக்கும் புல் பூண்டுகளைக் கொண்டே உயிர் வாழக்கூடியது. வறட்சியான மற்றும் மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத்தில், செம்மறி ஆடு வளர்ப்பு ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. சிறு மற்றும் குறுநில விவசாயிகள், நிலமற்ற வேளாண் தொழிலாளிகள், குறைந்த முதலீடு செய்து நிறைய லாபம்பெறலாம். ஆடுகளை தாக்கும் நோய்கள் மழை நேரங்களில் மாடுகள் சரியாக மேய்ந்து இரை எடுக்காது. அதோடு புதிய புற்களோடு முளைத்திருக்கும் களைகளையும் சாப்பிடுவதால், கழிச்சல் நோயும் வரலாம். அந்த மாதிரி நேரங்களில் அவ்வப்போது மாடுகளுக்கு தானியங்களையும், அடர்தீவனங்களையும் கொடுத்து சமாளிக்கலாம். திடீரென்று, அடர்தீவனங்களைக் கொடுக்கும்போது செரிமானப் பிரச்னைகள் வந்து விடும். எனவே, முன்கூட்டியே கொஞ்சம் கொஞ்சமாக அடர்தீவனங்களையும் கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும். கொசு மூட்டம் ஆடுகளை அடைத்து வைத்துள்ள கொட்டில் பகுதியில் கொசுத் தொல்லை ஏற்படாமல் இருக்க மாலை நேரத்தில் மூட்டம் போடலாம். இரும்புச் சட்டியில் மணலைக் கொட்டி கட்டை, கரி மூலம் நெருப்பு உண்டாக்கி... நொச்சி, பலா, எருக்கு, தைல மர இலை என அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கக்கூடிய... ஆடு, மாடுகள் சாப்பிடாத மூலிகை இலைகளையும், சாம்பிராணியையும் போட்டு மூட்டம் போட்டால்... கொட்டகையில் கொசு தொல்லை இருக்காது. இதனால் பெரும்பாலான நோய்கள் பரவாமலும் தடுக்க முடியும்.
tks:tamil.boldsky.com

Comments
Post a Comment