கைகொடுக்கும் வான்கோழி!

காத்திருக்கு லாபம்...
கைகொடுக்கும் வான்கோழி!

‘ஆயிரங்காலத்துக்கு முன்னாடியே, கான மயிலாட, கண்டிருந்த வான்கோழியும் சிறகை விரித்து ஆடியது போலனு நம்ம அவ்வையார் பாடி வெச்சிருக்காங்க. வான்கோழிங்கறது பல்லாயிரக்கணக்கான வருஷமா நம்ம நாட்டுல வாழ்ந்துக்கிட்டிருக்கற ஒரு இனம்கிறது இதிலிருந்தே உறுதியாகுது.

ஆனா, இது வெளிநாட்டிலிருந்து வந்தது. நம்ம தட்ப வெப்ப நிலைக்குச் சரியா வளராதுÕ அப்படினு ஒரு செய்தியைப் சிலர் பரப்பி விட்டுட்டாங்க. ஆனா, அவங்க மட்டும் இந்தக் கோழியை வளர்த்து, பெரிய அளவுல பணம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. வான்கோழி வளர்ப்பு தொடர்பான விஷயங்கள வேற யாருக்கும் சொல்லிக் கொடுக்காம, ரகசியமாவே வெச்சிக்கிட்டாங்க. இன்னும் சிலரோ... அரைகுறையா சொல்லிக் கொடுத்து, வான்கோழி வளர்ப்புங்கறதையே நாசமாக்கிட்டாங்க. அதனாலதான் வான்கோழி மேல நம்ம விவசாயிங்களுக்கு பெரிசா ஆர்வம் இல்லாம போயிடுச்சி.

வான்கோழி வளர்ப்பைப் பொறுத்தவரை எனக்கு நிறைய அனுபவம் இருக்கு. என்னோட அனுபவத்துல... வான்கோழி மூலமா நிச்சயமா லாபத்தை ஈட்ட முடியும்’’ என்கிறார் வான்கோழி வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த திருச்சி மாவட்டம், காட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலு .

-பசுமை விகடன் ஜனவரி 10,2009.
L

Comments