வெள்ளாடுகளுக்கு செயற்கை கருவூட்டல்.,

        ""வெள்ளாடுகளுக்கான செயற்கை முறை கருவூட்டல் சோதனை முதன்முறையாக கோவையில் நடத்தப்பட்டு, முயற்சியில் முன்னேற்றமும் காணப்பட்டுள்ளது,'' என, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் தியாகவிஜயன் பேசினார்.கால்நடை பராமரிப்பு துறை இதுவரை மாடு, எருமைகளுக்கு மட்டும் செயற்கை முறை கருவூட்டல் செய்து வந்தது.

தற்போது, அவினாசிலிங்கம் அறிவியல் நிலையத்துடன் இணைந்து சோதனை அடிப்படையில் வெள்ளாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்து வருகிறது. தென்னாப்பிரிக்க போயர் இன வெள்ளாட்டு கிடாவின் உயிரணுவை கொண்டு மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் 100 வெள்ளாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் செய்யப்பட்டது. இதில், 80 ஆடுகள் சினை பிடித்து தலா 2 முதல் 4 குட்டிகளை ஈன்றுள்ளன. இந்த ஆடுகளுக்கும், குட்டிகளுக்கும் குடல்பழு நீக்கம், தடுப்பூசி போடும் முகாம் காரமடை கால்நடை மருத்துவமனையில் நடந்தது.முகாமுக்கு அவிநாசி கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் சண்முகம் தலைமை வகித்தார்.


கோவை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் தியாக விஜயன் பேசுகையில், ""செயற்கை முறை கருவூட்டல் பசு மற்றும் எருமைகளுக்கு மட்டுமே உள்ளது. தற்போது, சோதனை முறையில் முதன் முறையாக 100 வெள்ளாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்யப்பட்டது. இதில், 80 ஆடுகள் குட்டி போட்டுள்ளன. குட்டிகளின் எடை 2.5 முதல் 3.5 கிலோ வரை உள்ளன. நல்ல ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் குட்டிகள் உள்ளன. இந்த செயற்கை கருவூட்டல் முறையை, துறை ரீதியாக தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்த, பரிசோதனை முறை ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது,'' என்றார். முகாமில், காரமடை கால்நடை டாக்டர் சுரேஷ்குமார் வரவேற்றார். கால்நடை உதவியாளர்கள் சுகுமார், பன்னீர்செல்வம்.




ஆடுகளை வளர்த்து வருகிறேன். மாடுகளைப் போல, ஆடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்ய முடியுமா?'' கோ. கோவிந்தராஜ், கைலாசபுரம்.

ஆடு வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த பண்ணையாளர் அரச்சலூர், குமாரசாமி பதில் சொல்கிறார். ''ஆடுகளுக்கும் செயற்கைக் கருவூட்டல் செய்ய முடியும். ஆங்காங்கே இந்த முறை பின்பற்றப்படுகிறது.
( என்றாலும், மாடுகளுக்குச் செய்வதைப் போல இது எளிதான விஷயம் அல்ல. கத்துதல், கோழை அடித்தல், பாலுக்கு நிற்காமல் இருத்தல், மற்ற மாடுகளைக் கண்டால் தாவுதல்... போன்ற அறிகுறிகள் மூலம் மாடுகள் பருவத்துக்கு வந்து விட்டதைக் கண்டுபிடித்து விடலாம். ஆனால், ஆடுகள் இப்படிப்பட்ட அறிகுறிகளைக் காட்டுவதில்லை. நாம்தான் உன்னிப்பாக கவனித்து, கண்டுபிடிக்க வேண்டும். நூற்றுக்கணக்கான ஆடுகள் வளர்க்கும்போது, ஒவ்வொரு ஆட்டையும் கவனித்துப் பார்த்து கண்டுபிடிப்பது சாத்தியமில்லாதது. அதனால், கிடா மூலம் இனச்சேர்க்கை செய்வதுதான் எளிதான விஷயம்.)


செயற்கை கருவூட்டல் முறையில், ஐந்து குட்டிகளை ஆடு ஈன்றுள்ளது. இரண்டாம் முறையாக அதிக குட்டிகளை ஈன்றதால், அதன் பாரம்பரிய மரபணுக்களை ஆராய்ச்சி செய்ய, கால்நடை மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.புதுச்சேரி அடுத்த வில்லியனுர் உத்திரவாகிணிபேட்டையைச் சேர்ந்தவர் திருமுருகன்,53; விவசாயி. இவருக்கு சொந்தமான ஆட்டுப் பண்ணையில் நேற்று முன்தினம் இரவு, நாட்டு இன பெண் ஆடு, ஐந்து குட்டிகளை ஒன்றன்பின் ஒன்றாக ஈன்றது. அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டுச் சென்றனர்.

ஐந்து குட்டிகளை ஈன்ற ஆட்டை, ராஜிவ்காந்தி கால்நடை அறிவியல் நிலைய பயிற்சி மருத்துவர்கள், நேற்று பார்வையிட்டனர் .வியப்புஆட்டை பார்வையிட்ட வில்லியனூர் கால்நடை மருத்துவர் குமாரவேல் கூறுகையில், "பொதுவாக நாட்டு இன ஆடு, ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை ஈனும். அதிகபட்சமாக, சில சமயங்களில் மூன்று குட்டிகள் வரை ஈனும். ஆனால், இந்த நாட்டின ஆடு, ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது வியப்பாக உள்ளது.செயற்கை கருவூட்டல்நன்றாக பால் கொடுக்கும், மலபாரி இன ஆடுகளின் வீரியமான விந்தணுக்கள் செயற்கை கருவூட்டல் முறையில் செலுத்தப்பட்டதே, இதற்கு முக்கிய காரணம். தாயும், அதனுடைய ஐந்து குட்டிகளும் சராசரி எடையுடன் நல்ல ஆரோக்கியமாக கொழு கொழுவென உள்ளன.ஐந்து குட்டிகளை ஈன்றுள்ள நாட்டு இன ஆடு, கடந்தாண்டு இதேபோன்று செயற்கை கருவூட்டல் முறையில், நான்கு குட்டிகளை ஈன்றது. இந்த நாட்டு இன ஆடு தொடர்ந்து அதிக குட்டிகளை ஈன்று வருவதற்கு, அதனுடைய பாரம்பரிய மரபணு கூட ஒரு வகையில் காரணமாக இருக்கலாம் என கருதுகிறோம்.இதுகுறித்து, விரிவாக அறிவியல் முறையில் ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டுள்ளோம். ஆராய்ச்சியில் பாரம்பரிய மரபணு தான் காரணம் என கண்டறிந்தால், அதன் மூலம் வீரியமான அதிக குட்டிகளை ஈனும் புதிய ரக ஆடுகளை உருவாக்க முடியும் என்றார்.

Comments