நூதன பிச்சைக்காரர்கள் – பாவம் ! பிச்சைப்போடுங்கள்.

கட்டுரை ஆக்கம் : தமிழ் மநீ “
பிச்சைக்காரர்கள் நேரடியாக வந்து பிச்சை எடுப்பதை , கேட்பதை பார்த்திருக்கிறோம், ஆனால் தற்சமயம் ஹைடெக் லெவலில் பிச்சை
கேட்கின்றனர் யார் தெரியுமா ?

தொலைத்தொடர்பு துறையில் உள்ள சில நிறுவனங்கள் தான் இந்த பிச்சையை கேட்கின்றனர் , நமக்கு சிம் கார்டு வழங்கும் தமிழகத்தின் ஒரு சில முன்னனி நிறுவனங்கள் தான் இப்படியும் பிச்சை கேட்கின்றனர், தொலைதொடர்பு சேவையில் குறைபாடு என்று புகார் செய்யலாம் என்று இலவச எண்ணை நீங்கள் எந்த நேரம் நீங்கள் தொடர்பு கொண்டாலும் , “ எங்கள் நிறுவனத்தின் அத்தனை அதிகாரிகளும் தற்சமயம் பிஸியாக இருக்கின்றனர் “ என்று சொல்லிவிட்டு உடனடியாக நீங்கள் பேச வேண்டும் என்றால் இந்த குறிப்பிட்ட எண்ணை அழுத்துங்கள் இதற்கு கட்டணமாக நிமிடத்திற்கு இவ்வளவு வசூலிப்பார்கள் ”என்று சொல்கின்றனர். நாமும் அவர்கள் பேச்சைக் கேட்டு அழுத்தினால் உடனடியாக சேவை அதிகாரி வருவார் ( இப்ப மட்டும் எப்படி தான் பிரியாக இருப்பாரோ ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம் )
மிகவும் நிதானமாக பேசுவார், உங்கள் அலைபேசி எண் என்ன என்பதில் தொடங்கி , அட்ரஸ் , கடைசியாக ரீஜார்ச் செய்த தொகை என்ன என்பது வரை கேட்ட பின் தான் , நம்மிடம் கேள்வியை கேட்பார் இதற்குள் 5 ரூபாய் அபேஸ், சரி கேள்வி கேட்டதும் “ சார் காத்திருக்க முடியுமா என்பார் “ 3 நிமிடத்திலிருந்து 5 நிமிடம் வரை எடுத்துக்கொண்டு “ காத்திருந்தற்கு நன்றி “ என்று சொல்லிவிட்டு ஏற்கனவே அப்படி இப்படி என்று நேரத்தை கடத்துவதில் தான் குறியாக இருப்பார்கள்.
விடாப்பிடியாக கேள்விகளை கேட்டால் உங்கள் புகார் பதிவு செய்யலாமா என்று கேட்பார்கள் சரி என்றால் மறுபடியும் காத்திருக்க வைப்பார்கள். சிறிது நேரம் கழித்து 10 இலக்கத்தில் ஒரு புகார் எண்ணை சொல்வார்கள் சார் இதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் புகார் 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்பார்கள் ,48 நாட்கள் ஆனாலும் பதில் வராது,  இரண்டு நாட்களுக்குள் உங்களுக்குள் பதில் கிடைக்கவில்லை என்றால் மறுபடியும் இந்தப்புகார் எண்ணை நீங்கள் சொல்லி கேட்கலாம் என்பார்கள்.
சரி என்று போனை கட் பண்ணியவுடன் டொய்ங் டொய்ங் – 20 ரூபாய் காலி, நம்ம கோபால் விபரமாக கேட்டான் நம்மிடம் தான் புகார் எண் இருகிறதே இது எதற்கு என்று , நாம் சொன்னோம் “ மாப்பிள்ளை ஒரு அடிமை நமக்கு சிக்கிட்டான் இவன் எப்ப கால் பண்ணினாலும் குறைந்த பட்சம் 20ரூபாய் புடிங்கிடலாம் என்பதற்காகத்தான் புகார் எண் என்று “ மனம் நொந்து கோபால் கூறினான் ஹைடெக் பிச்சைக்காரர்கள் இதற்கு பிச்சை என்று கேட்டாலே போடுவோமே என்று !

Comments