இயற்கை நோக்குதல் 3...ஊரு விட்டு ஊரு வந்து .
ஒரு சின்ன கதை .
ஒரு ராஜா ஒரு தீவுல பல வகை கூட்டத்தினரை கொண்டு போய் விட்டார் , ஒவ்வொரு கூட்டத்தினருக்கும் ஒவ்வொரு திறமை .சிலர் நீச்சலில் வல்லவர்கள் , சிலர் புஜ பராக்கிரமசாலிகள் , சிலர் பல அடி தூரம் தாவ வல்லவர்கள் , இப்படி பலர் .
போட்டி என்னன்னா , எந்த கூட்டத்தினர் தீவை கட்டுக்குள் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு தீவு சொந்தம்.
ஒவ்வொரு கூட்டத்தினரும் தீவை கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக சண்டையிட்டனர்.
இதில் ஒரு particular கூட்டத்தினருக்கு மட்டும் கால் ஊனம் , நகர முடியாது , அவர்களால் சண்டை இட முடியாத காரணத்தால் மற்ற அனைத்து கூட்டத்தினருக்கும் சமைத்து போடும் வேலையை செய்து வந்தனர் .
போட்டி கடுமையாக இருந்தது , பல தலைமுறைகள் கடந்தது ...... வெற்றி யாருக்கும் நிலையாக வாய்க்கவில்லை. போட்டியின் தீவிரத்தில் சில கூட்டத்தினர் அழிந்தே கூட போயினர் .தீவின் அதிகாரம் ஒவ்வொரு கையாக மாறிகொண்டே இருந்தது .....
கடைசியாக இந்த போட்டியில் வெற்றி பெற்றது யாரு ?
......................................................................
அனைவரையும் ஜெயித்து அதிகாரம் செலுத்தியது தான் வெற்றி என்றால் , கிட்டத்தட்ட அனைவருமே ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் வெற்றி பெற்றவர்களாகக்கருத வேண்டியுள்ளது .
ஆனால் உண்மையான வெற்றி ,
கால் ஊனமடைந்தவர்களுக்கே...
எப்படி?
-> கால் ஊனமடைந்தவர்கள் தீவுக்கே சமைத்து போடும் வேலையை எடுத்துக்கொண்டதினால் மற்ற அனைவரும் சமைத்து உண்ணவே இல்லை, அனைவரும் சண்டையிலே தீவிரமாக இருந்தார்கள் .
->இதை பயன்படுத்திக்கொண்ட கால் ஊனமடைந்தவர்கள், அனைவரையும் தன்னை சார்ந்து இருக்குமாறு ஒரு நிலையை ஏற்படுத்தினர் .
->எத்தனையோ கூட்டத்தினர் போரில் அழிந்தாலும், இவர்கள் மட்டும் தலைமுறைகள் பல கடந்து நிலைத்து நின்றனர் .
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்களுக்கு ஒரு நல்ல செய்தி , ஒரு கெட்ட செய்தி ...
நல்ல செய்தி என்னன்னா ?
pollution'னால் உலகமே அழிஞ்சிடும்ன்னு நம்ம மக்கள் எல்லாரையும் பயமுறுத்திகிட்டு இருக்காங்களே , அது உண்மை இல்ல . உலகம் அழியாது :)
ஆனா கெட்ட செய்தி என்னன்னா ? .... அத பாக்குறதுக்கு நாம யாரும் உசுரோட இருக்க மாட்டோம் :(
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா ?
இந்த உலகத்துல pollution நடக்குறது இது மொதோ தடவை இல்ல ...
................................................
சூரிய குடும்பத்திலுள்ள அனைத்து கோள்களின் வாயுமண்டலமும் கிட்டத்தட்ட ஒன்று போலவே அமையபெற்றுள்ளது . Co2, methane , ammonia வாயுக்களே அனைத்து கோள்களிலும் நிறைந்துள்ளன .
ஆனால் பூமியில் மட்டும் எப்படி நைட்ரஜனும் ஆக்சிஜனும் வளிமண்டலத்தில் பெரும்பான்மை சதவிகிதத்தை ஆக்கிரமித்துள்ளன ?
இது கால் ஊனமடைந்தவர்கள் செய்த தந்திரம் ...
உலகின் முதல் pollution அவர்களாலே ஏற்பட்டது ...
.......................................................................................................................................................
சூரியனிலிருந்து பிரிந்த நெருப்புக்கோளம் குளிர்ந்து பூமியாக மாறிய பின்னர் , எரிமலைகள் உமிழ்ந்த Co2, methane , ammonia , நீராவி போன்ற வாயுக்களால் பூமியின் வளிமண்டலம் உருவானது .தகுந்த காரணிகள் பூமியில் இருந்த காரணத்தினால் நீராவி குளிர்ந்து கடல் உருவாகியது


பூமியின் ஆரம்ப கால வளிமண்டலத்தில் Carbondioxide நிறைய இருந்தது போலவே வீனஸ் கிரகத்திலும் Carbondioxide நிறைய இருக்கிறது , அதன் காரணமாக வீனுசின் வளியில் நுழைந்த சூரியக்கதிர்கள் வெளியேறாமல் அந்த கிரகத்தை கததப்பாக வைத்துள்ளன . அதனால் அதன் வெப்பநிலை 467 °C.

வீனசை போலவே அடுப்பில் வைத்த இரும்புச்சட்டி கணக்காய் இருந்திருக்க வேண்டிய நமது பூமியின் வளிமண்டலத்தில் கொதிக்க கொதிக்க இருந்திருக்க வேண்டிய பூமியில் இருந்து Co 2'ஐ உறிஞ்சிக்கொண்டு நைட்ரஜனையும் ஆக்சிஜனையும் வெளியேற்றி , முதல் pollution 'ஐ உருவாக்கிய குற்றவாளி யாரு ???
..............................
உலகில் முதல் உயிர்கள் கடலில் ஆழத்தில் தோன்றின , பரிணாமம் அடைந்த அவ்வுயிர்கள் யாவும் நிலத்தை நோக்கிவர பயப்பட்டன .
காரணம் ஓசோன் படலம் அப்போது உருவாகியிருக்கவில்லை , UV கதிர்கள் தாக்குதலுக்கு ஆளாக யாரும் தயாராய் இல்லை .
அந்த காலகட்டத்தில் உணவுக்கான ஒரே - வழி அடுத்தவனை உண்பது .
இந்த சண்டையில் நாட்டமில்லா சில காந்திய வாதிகள், தங்களுக்கான உணவை தானே உற்பத்தி செய்ய தலைப்பட்டனர்.
இதுல முக்கியமான பாயிண்ட் என்னன்னா ....
சாப்பிடுவது எதற்காக ?
உடல் இயங்குவதற்காக தேவையான சக்தியை பெறுவதற்காக .
........................................
உணவின் நோக்கம் உடலுக்கு சக்தி .
அளப்பறியா சக்தி சூரிய ஒளியாக பூமியில் இருக்கும் போது, அடுத்தவனின் உடலை எதற்காக ஆட்டயபோடனும் ???
அடித்துக்கொண்டு வீணா போவதைகாட்டிலும் , தானா தின்னு ஜோரா வாழலாம் என்று சிலர் முடிவெடுத்தனர் .
சமையல் தொடங்கியது !!!
ரெசிப்பி ரொம்ப சிம்பிள் .
-அன்றைய கால காத்துல CO2 அதிகம் ,
-வாழும் இடமனைத்தும் நீர் சூழ் உலகு ,
சூரிய ஒளியின் சக்தியை குளுகோசினுள் பதுக்கி , சக்தி தேவையான சமயத்தில் குளுகோஸை எரித்துகொள்வதின் மூலம் உடல் இயக்கத்திற்கான ஆற்றலை அகிம்சை முறையில் பெரும் ஒரு அற்புத உபாயம் .

(இதைப்பற்றி விரிவாக அறிய இங்கே செல்லவும் )
ஆனால் இந்த சமையலின் முடிவில் வெளியேறிய வாயு ஆக்சிஜன்,
oxygen+ ammonia = Nitrogen .
....................
வளியில் உள்ள Co 2 உறுஞ்சி சர்க்கரை போன்ற மூலக்கூறுகளாக மாற்றப்பட்டு சேமிக்கப்பட்டன,
வெளித்தள்ளப்பட்ட ஆக்சிஜனும் Nitrogenனும் காற்றுமண்டலத்தை வியாப்பிக்கத்தொடங்கின .
தொடங்கியது உலகின் முதல் pollution !!!

தற்போதைய வளிமண்டலம்
-------------------------------------------------------------------------
மற்ற உயிரினங்கள் கடலின் ஆழத்தில் சண்டையிட்டுக்கொண்டிருக்க, ஒரு செல் தாவரங்கள் CO2 மற்றும் சூரிய ஒளிக்காக கடல் மேல்பரப்புக்கு வந்தனர் , அவைகள் பரிணாமமடைந்து பல செல்தாவரங்களாக பெருக்கினர் .
அடுத்த பிரச்சனை- இடப்பற்றாக்குறை ...
தீர்வு ???
யாருமே சொந்தம்கொண்டாடாத நிலப்பரப்பு ....
விருந்துக்கு வந்த மருமகன் ; சோறு கண்ட இடமே சொர்க்கம் என மாமியார் வீட்டிலேயே டேரா போட்டது போல , இருக்கும் இடத்திலேயே உணவு கிடைப்பதால் , நகரும் அவசியமற்று ஒரே இடத்திலேயே தாவரங்கள் வேரூன்றி விட்டன .
kodiyakkarai
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
இப்போது மனிதர்களால் நடைபெறும் pollution 'னில் CO2 நிறைய வெளியேற்றப்படுகிறது ,
CO2 மரங்களின் சமையலில் முக்கியமான ரெசிப்பி ,
நியாயமாக மரங்களுக்கு இது நற்செய்தி தான் , ஆனால் நாம் மரங்களையும் வெட்டி விடுவதால் ,இந்த pollution பல உயிர்களின் அழிவுக்கு வித்திடும்/ வித்திட்டுகொண்டு இருக்கிறது .
இப்புடியே போச்சுன்னா , கொஞ்ச நாளில் வீனசை போல ஆயிறும் நமது பூமி .
இது போல் அல்லாமல் , முதலாம் pollution'னில் வெளித்தள்ளப்பட்ட ஆக்சிஜன் உயிர்களின் தேவையாக இருந்தது .
-Anaerobic metabolism'த்தை காட்டிலும் Aerobic Metabolism / ஆக்சிஜன் கொண்டு நடத்தப்படும் Metabolismமூலம் அதிக ஆற்றல் பெறப்பட்டது .
-அதுவரை நீரிலிருந்தே ஆக்சிஜனை உயிர்கள் பெற்றன , இப்போது காற்றிலும் அது அபரிமிதம்...
-மேலும் ஆக்சிஜன் மூலக்கூறுகளின் மூலம் ஒசோனும் உருவாக்கப்பட்டது , அதனால் புற உதாக்கதிர் பயமும் இப்போது இல்லை ...

-மேலும் உணவை சமைக்கும் தாவரங்களின் இருப்பு ...
இவை அனைத்தும் ஆக்சிஜன் விரும்பிகளை நிலத்தை நோக்கி சுண்டியிழுத்தன .
.......................................................................................
உயிர்களின் பாதம் பட்ட முதல் நிலம் நெய்தல் ...
கடலில் இருந்து கடற்கரை மணற்பரப்பு வழியாக அசால்ட்டாக தாவரங்களும் விலங்கினங்களும் நிலப்பரப்புக்குள் நுழைந்து விடவில்லை .
நிலத்தில் தாவரங்களுக்கான முக்கிமான சவால் சூரிய ஒளிக்கு மேல் நோக்கி செல்ல வேண்டும் , தண்ணீருக்கும் , உணவுச்சத்துக்கும் கீழ் நோக்கி போக வேண்டும் .ஆகவே நீர்நிலைகளுக்கு அருகே அவை பல்கிப்பெருகின , வறட்சி காலத்தில் நீர்நிலைகளின் நீர் அளவு குறைபாட்டை தாக்குபிடித்து வளர்ந்த தாவரங்கள் natural selection மூலம் தேர்வு செய்யப்பட்டு நிலப்பரப்பு முழுதும் ஆக்கிரமித்தன .
தாவரங்களைத்தொடர்ந்து தாவர உண்ணிகளும் , அவர்களை வேட்டையாடும் வேட்டை விலங்குகளுமாய் நிலத்தில் உயிரினங்களின் ஆட்டம் தொடங்கி இன்று வரை நீடித்து வருகின்றது .
உண்மையில் நிலத்திலுள்ள அனைத்து உயிர்களும் தாவரத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் சார்த்து வாழ வேண்டிய கட்டாயத்திலுள்ளன .
சுருங்கக்கூறின் நாம் அனைவரும் தாவரத்தின் ஒட்டுண்ணிகள் .
......................................................................................................................................................................
உயிர்களின் பாதம்(?) முதலில் பட்ட அந்த இடம் அலைகள் அற்ற , ஆழம் குறைவான ஒரு சதுப்புநிலமாக இருந்திருக்க சாத்தியங்கள் அதிகம் .
இங்கிருந்தே நீரிலிருந்து நிலத்தை நோக்கி உயிர்கள் வரத்தொடங்கின .அந்த இடங்களும் அவை விட்டுச்சென்ற தடங்களும், இன்னும் நம்ம நாட்டில் இருக்கின்றன :)

mudskipper
நாம இப்போ செல்ல இருப்பது அலையாத்தி காடுகள்
பிச்சாவரம்
முத்துபேட்டை

சுந்தரவனக்காடுகள்
{இதில் பிச்சாவரம் (சிதம்பரம் பக்கத்துல இருக்கு ) மற்றும் முத்துபேட்டை(நாகப்பட்டினம் ) ஆகிய இரண்டு இடங்களையும் நானும் எனது நண்பர்களும் நோக்கியது , சுந்தரவனக்காடுகள் எனது சீனியர் ஆனந்த் சார் நோக்கியது }
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சதுப்பு நில அலையாத்திக்காடுகள் கடலுக்கும் நிலத்திற்கும் இடையில் ஒரு பாலமாக விளங்குகின்றது . ஆர்ப்பரித்து வரும் அலைகளை அவை ஆத்தி அடக்கி வைக்கின்றது .
இவை எல்லா இடங்களிலும் இருப்பதில்லை , சில tropical நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன . இந்த காடுகளில் 39 வகை மரவகைகள் உள்ளனவாம் , நான் பார்த்தது 7 வகை மட்டுமே .
ஒரு இடத்தில் இயற்கை நோக்க ஆரம்பிக்கும் முன் அந்த இடத்தின் bottom most level of food chain ஐ அறிந்து வைப்பதன் மூலம் ,மற்ற அனைத்து உறுப்பினர்களையும் எளிதில் நோக்கலாம் என பழைய பகுதிகளில் பார்த்தோம் .
இந்த இடங்களில் இவ்வகை மரங்களே அனைத்துக்கும் அடித்தளம் .
இவற்றிக்கு மற்ற மரங்களைக்காட்டிலும் சில சிறப்பியல்புகள் உள்ளன , அதற்கு காரணம் அவை இங்கு சந்திக்கும் சவால்கள்...
சவால்1:->கலங்கலான சகதி நீர் மற்றும் சகதி நீரில் குறைந்த அளவே உள்ள பிராண வாயு .
தீர்வு : Aerial roots
ஆலமரம் போன்று கிளைகளில் இருந்து இறங்கும் வேர்கள் , ஒரு வலைப்பின்னலைபோல் நிலத்தில் பதிந்து , சல்லடை போல கலங்கள் நீரிலிருந்து நல்ல நீரை வடிகட்டுகின்றன , மேலும் வேர்களின் மூலம் அவை சுவாசிக்கின்றன .
சவால் 2-> ஏறி இறங்கும் நீர்மட்டத்தில் விதைகள் மூழ்கி செத்துபோகும் அபாயம் .
தீர்வு :கூறிய ஈட்டி போன்ற வால் முளைத்த விதைகள் , இதைகள் விழுந்தவுடன் கூர் முனை கொண்ட வால் மண்ணில் நங்கூரமிட்டுவிடும் . விதை, நீரின் மேலே இருக்குமாறு ஒரு அமைப்பு .
பின்னர் மேல் உள்ள ஓடு கழன்று செடி முளைக்க ஆரம்பிக்கும் , இது அவிசென்னா வகையில் உள்ள சிறப்பு .

மேலும் சில வகை செடிகள் குறிப்பிட்ட அளவுவரை செடிகளை தாய்செடியிலேயே வளர விட்டு,
நீர் மட்டத்திற்கு வெளியே மண்டையை நீட்டி வளரும் அளவுக்கு பெரிய பையனானதும் , அவற்றை நீரில் வளர அனுமதிக்கும் , அதாவது இது குட்டி போடும் வகை தாவர இனம் .
சவால் 3:-> அதிகப்படியான உப்பு நீர்
தீர்வு :அதிகப்படியான உப்பு நீரை சில இலைகளில் தேக்கி அவற்றை பழுத்து விழச்செய்கின்றன .
அந்த இலைகள் மக்கி , ஒரு organic சூழ்நிலையை அந்த இடத்தை சுற்றி உருவாக்குகின்றன , அவை சின்னஞ்சிறிய உயிரினங்களை வசீகரிக்கின்றன .
------------------------------------------------------------------------------------------------------------
கடலின் நுரையீரலாக கருதப்படுவன coral reefs (பவளப்பாறைகள் ) ,நாம் வெளியேற்றும் கரியமில வாயுவில் 30% பவளப்பாறைகளால் உறிஞ்சப்படுகின்றன . மேலும் கடலில் உள்ள உயிரினங்களில் கால் பங்கு இங்கு தான் வசிக்கின்றன ,

பல வகை உயிரினங்கள் இங்கு வசிப்பதால் பல வகை வேட்டையாடும் உயிரினங்கள் இங்கு உலாவும் ,
இரை தேடும் curlew
அவற்றிலிருந்து தப்பிக்க மீன் குஞ்சுகள் அருகிலிருக்கும் அலையாதிக்காடுகளில் தஞ்சம் புகும் , இங்கே அவை கிட்டத்தட்ட ஏழு மடங்கு பெரிதாக ஆன பின்னர் பவளப்பாறைகளுக்கு திரும்பும்.
யாரும் நெருங்க முடியா வலைபின்னல் வேர்களுக்குள் மீன்குஞ்சுகள்
மக்கிகொண்டிருக்கும் இலைகளால் ஒரு ஆரோக்கியமான organic சூழலில் மீன் குஞ்சுகள்
அலையாத்திகாடுகள் இருக்குமிடத்தில் அருகிலுள்ள பவளப்பாறைகளின் வளர்ச்சியும் அதை சார்ந்த உயிரினங்களின் வளர்ச்சியும் அபரிமிதமாக இருக்கும் .
----------------------------------------------------------------------------------------------------------------------இந்த இடங்களில் எங்கள் கேமராக்கண்ணில் சிக்கிய சிலரை , உணவுச்சங்கிலி வரிசைப்பிரகாரம் அடுக்கியுள்ளேன் .பாத்து என்சாய் பண்ணுங்க :)

Water Strider
Hermit Crab

Fiddler Crab

தவளையார்
Mangrove Heron
painted stork
River Tern

whiskered Tern

Little Egret

Paddy field pipit

Spot billed Pelican
Curlew
Dove
Brahminy Kite- Juvenile
Brahminy Kite- Adult
Some carnivore

முதலை

உடும்பு

The King
பாத்து முடிச்சாச்சா ?
இவற்றின் மூலம் , இந்த இடங்கள் எந்த அளவுக்கு BIODIVERSITY கொண்டுள்ளது என்று நமக்கு விளங்குது .
அப்படியே இதுக்கு பக்கத்துல உள்ள கடற்கரைக்கு போய் பாத்தா இதே வகை உயிரிங்கள் இருக்காது ,அப்படியே இருந்தாலும் அதல் உடலமைப்பு அந்த இடத்துக்கு தக்கவாறு இருக்கும்
கடல் கரையிலுள்ள நண்டு

மலைப்பாறையில் ஓர் வெட்டுக்கிளி

புல் வெளியில் Hoope
மலைப்பாறையில் Rock Agama
புல் வெளியில் Ashy Prinia

புல் வெளியில் Fracolin
கடலில் இருந்து நிலத்திற்கு இடம் பெயர்ந்த உயிர்கள் கொஞ்ச கொஞ்சமாக அடர் காடுகள் , சமவெளிகள் ,பாலை நிலங்கள் , மலை மேடுகள் என செட்டில் ஆனதும் , அந்த இடத்தின் ஓர் அங்கமாவே அவை மாறி விட்டதை குறிக்கும் வகையில் தங்களது அங்கங்களையும் அந்த இடத்திற்கு தக்கவாறு மாற்றி விட்டன .
புலிகள் பாலைவனத்தில் வேட்டையாடுவதில்லை , ஒட்டகங்கள் சதுப்பு நிலக்காடுகளில் மேய்வதில்லை ,
உயிரினங்கள் அனைத்தும் தங்கள் எல்லையை அறிந்து கொண்டு அடுத்தவன் இடத்திற்கு ஆசைப்படாமல் அவற்றின் வாழ்விடங்களில் வாழ்ந்து வந்தன .
எல்லாம் நல்லா போயிகிட்டு இருந்த போது , பரிணாம வளர்ச்சியில் தோன்றிய மனித இனம் , அனைத்து இடங்களையும் ஆக்கிரமிக்கத்தொடங்கியது .
நாகரீகம் என்ன அழைக்கப்படும் ஒரு வஸ்து உருவாவதற்கு முன்னர் மனித இனம் இவ்வாறு கோக்குமாக்கு செய்ய வில்லை .
ஆனால்...........................
மனிதர்களில் ஒருவகை சமூகத்தினர் வரலாற்றின் உச்ச நாகரீகத்தை அடைத்த போதிலும் , தாம் வாழும் இடங்களை போற்றிபாதுகாக்க வேண்டி , அவற்றை முறையாகப்பிரித்து , அந்த நிலங்களுக்கு ஏற்ற தொழில்களையும் அதற்கேற்ற ஓர் மக்கள் பிரிவையும் , அந்த நிலங்களுக்கு ஆதாரமான இயற்கை வளத்திற்கென ஓர் கடவுளையும் வைத்து வழிபட்டனர் .
அந்த சமூகம் .... நம் தமிழ்ச்சமூகம் ,
ஐவகை நிலம் , அதற்கேற்ற தொழில் , அதற்கான இயற்கை சக்தி வழி பாடு ...என நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு..... வந்தேறிகள் வராத வரை .
அவை பின்னர் ஜாதியாகவும் மதமாகவும் மாறியது ஒரு சோகக்கதை .
ஆனா நாம அதையெல்லாம் பாக்க போறதில்ல , அந்த ஆட்களுடன் சண்டை போடுவதற்கு எனக்கு தெம்பு பத்தாத காரணத்தால் ,அந்த ஐவகை நிலங்களின் தற்போதைய நிலைமையை பற்றி மட்டும் வரும் பதிவுகளில் இயற்கை நோக்கலாம் .
ஒரு final கருத்து :
யானை மேயிற இடத்த பிளாட்டு போட்டு வித்துபுட்டு , ஊருக்குள்ள யான வந்துருச்சுன்னு அத வெரட்டுரது , இருக்குற மரத்த எல்லாம் வெட்டி பேப்பர் செஞ்சு , அதுல நடிகை படம் போட்டு புக்கு விக்கிறது ... போன்ற செயல்களின் மூலம் இயற்கையின் ரூல்சுக்கு எதிரா விளையாடிகிட்டு இருக்கோம் .
நீங்க எல்லாம் கள்ளாட்டம் ஆடுரீங்கன்னு, ஒரு நாள் இயற்கை எல்லா கோட்டையும் அழிச்சுட்டு , புது வெளையாட்ட துவங்கிரும் .
அப்புறம் அத வெளைடுரதுக்கு நீங்களும் நானும் இருக்க மாட்டோம் ,எல்லாருக்கும் பிம்பிளிக்கி பிளாப்பி தான் .
---------------------------------
நன்றி : Dr.Anandh
Comments
Post a Comment