பசுமைக்குடில் மட்டுமல்லாமல் சாகுபடி செய்யும் பயிர்களைப் பதப்படுத்தி சரியான நேரத்தில் விற்க குளிர்ப்பதனக் கிடங்குகளையும் தன்னுடைய இந்திய தோட்டக்கலை மற்றும் உணவு பதனிடுதல் சேவை மையம் அமைப்பின் மூலமாகவே செய்து வருகிறார்.
விவசாயத்தில் ஏற்படக்கூடிய புதுப்புது தொழில்நுட்பங்கள் பற்றி இந்தியாவின் கடைக்கோடி விவசாயிக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் அமைப்பின் நோக்கம். அடுத்தகட்ட முயற்சியாக மண்ணில்லா விவசாய முறையை (ஹைட்ரோ ஃபோனிக்ஸ் டெக்னாலஜி ) விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொடுக்க விவசாயிகளுக்கு எந்நேரத்திலும் உதவத் தயாராக இருக்கிறேன்” என்கிறார் புஷ்பக்குமார்
புஷ்பக்குமார்
செல்பேசி எண்: 94877 28648
நன்றி புதியதலைமுறை & www.pannaiyar.com
ரோஜா, பெர்பெரி போன்ற பூ வகைகளையும் சாகுபடி செய்ய பயிற்சியைத் தருவதோடு பசுமைக்குடில் அமைக்க விவசாயிகளுக்கு அரசிடம் இருந்து கடனுதவியையும் மானியத்தையும் பெற உதவியும் செய்து வருகிறேன். முன்னாடி குளிர்ப்பகுதியில மட்டும்தான் இந்த முறையில் சாகுபடி பண்ணமுடியும்ன்னு ஒரு நிலை இருந்துச்சு. இதையே ஒரு சேலஞ்ச்சா எடுத்துக்கிட்டு வெயில் அதிகமாவே அடிக்கக்கூடிய திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், நாமக்கல், சேலம் போன்ற 15 மாவட்டங்களில் விவசாயிகளுக்குப் பயிற்சி தந்து பசுமைக்குடிலில் சாகுபடி பண்ண வெச்சு வெற்றிகரமா அதிக மகசூலை எடுக்க வெச்சிருக்கேன். ஓசூர்ல மட்டும் 60 விவசாயிகளுக்கு பசுமைக்குடிலை போட்டுக் கொடுத்திருக்கேன். இதன் மூலம் என்னுடைய விவசாயிகள் ஹாலந்து, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் என்று 10-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தரமான காய்கறி மற்றும் மலர் ஏற்றுமதி செய்து லாபமடைவதற்கு என் பயிற்சிதான் காரணம்னு நினைக்கும்போது ரொம்பப் பெருமையா இருக்கு” என்கிறார் பூரிப்புடன்.