கால்நடை வளர்ப்பு: மூன்று மாத அஞ்சல் வழி பயிற்சி

சென்னை: கால்நடை வளர்ப்பு குறித்த மூன்று மாத அஞ்சல் வழி பயிற்சி திட்டத்தை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இது குறித்து, அந்த பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்குனர் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கால்நடை சார்ந்த தொழில்களில் அதிக லாபம் பெற தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்வது அவசியம். நேரடி பயிற்சியில் பங்கேற்க இயலாதவர்களுக்கு அஞ்சல் வழி பயிற்சித் திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளோம்.

இதில் சேர, கால்நடை வளர்ப்பில் அனுபவமுள்ளோர், எழுத படிக்கத் தெரிந்திருந்தால் போதும். மற்றவர்கள், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்" என்றார்.

திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு வரும் 30ம் தேதி சென்னை மாதவரம் பால் பண்ணையில் உள்ள உழவர் இல்லத்தில் நடக்க உள்ளது.


முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு 044 - 2555 4411, 98841 36148 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Comments