பட்டுக்கன்னம் தொட்டு கொள்ள ஒட்டிக்கொள்ளும்.,!


இந்த மிக்கி மவுஸ் படத்த பாருங்களேன் , இது ஒன்னும் பெரிய மோனலிசா ஓவியம் அல்ல ,


சில கோடுகளினால் வரையப்பட்ட ஒரு சிம்பிளான கேலிசித்திரம் --- பெரிய கண்கள் , உப்பிய கன்னங்கள் தவிர பெரிதாக இதில்ஒன்றுமில்லை .

பின்ன எப்புடி இந்த கேலிசித்திரம் இவ்ளோ பெரிய ஹிட் ஆச்சு ?

இதில் ஒரு பெரிய பரிணாம உண்மை ஒளிந்துள்ளது ....

இது நமது தாய்மை உணர்வை ( instinct ) தூண்டி விடுகிறது .

எந்த விலங்கோ , படமோ , எதுவோவாக இருக்கட்டும் ,

உப்பிய கன்னங்கள் , களங்கம் இல்லாத பெரிய கரு விழிகள் , நமது தாயுணர்வை தூண்டி விட்டு ,
அதன் மேல் ஒரு இனம்புரியாதபாசத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவை .

இந்த கள்ளம் இல்லா கண்களை பார்த்தால் , கொலைகாரனுக்கும் பாசஉணர்ச்சி  வராதா
இல்லையா ?

------------------------------------------------------------------------------------------------
     எப்படி வால்ட் டிஸ்னீ ,பாச உணர்ச்சியை  காட்டி காசு பார்த்தாரோ , அது போல நாய்
 இன ப்ரீடர்கள்பொம்மை இனநாய்களை உருவாக்கி , அதன் மேல் ஒரு பாச உணர்வை
ஏற்படுத்தி செம்மையா கல்லா கட்டினார்கள் .

இந்த படத்தில் , அந்த பாரிஸ் பாப்பாவை பார்க்காமல் , அவள் கையில் இருக்கும்  நாயை மட்டும்
 பாருங்கள் ,



அதை நீங்கள் நாய்க்குட்டி என நினைப்பீர்கள் , ஆனால் அது பல குட்டி நாய்களை ஈன
வைக்கக்கூடிய திறமை பெற்ற வயதுக்குவந்த chihuahua இன  ஆண் நாய் .

இது எப்படி சாத்தியம் ? எப்படி ஒரு வயதுக்கு வந்த நாய் , குட்டி போல தோற்றம் அளிக்கிறது ?
-----------------------------------------------------------------------------------------
pedogenesis (paedogenesis) ,Neoteny என்றால் என்ன , இரு வரிகளுக்கு மிகாமல் விளக்கு   ?

pedogenesis : முன்பு குழந்தைக்கு மட்டுமே காணப்பட்ட பண்புகள் , வயதுக்கு வந்த பின்பும் 
காணப்படுவது .
Neoteny :வளர்ச்சி  மெதுவாக நடை பெறுதல் .

---------------------------------------------------------------------------------------------
நான் போன பதிவில் "பிறந்த சிம்பன்சி குரங்குக்கும் சரிமனித குழந்தைக்கும் சரி , பிறக்கும் 
போது  மண்டையில் மட்டும் தான்முடியோடு   இருக்கும் .அது neoteny மூலமாக தாமதம் ஆனால்
 கிட்டத்தட்ட மனிதன் போலவே  தோற்றம் அளிக்கும் ."
என்று கூறியிருந்தேன் .
இப்படிதான் pedogenesis (paedogenesis)  மற்றும் Neoteny  மூலமாக குரங்கில் இருந்த முடி மனிதனுக்கு
 இல்லாமல் போனது  என்பது பல அறிவியல் அறிஞர்களின் கருத்து.

இருப்பினும் சில இடங்களில் மிச்சம் முடி இருந்தது ஏன் என்று போன பதிவிலேயே பார்த்தோம் .

இதை நான் பொசுக்கென்று கூறிவிட்டேன் , இதற்கு ஆதரவான  பல கருத்துக்களை
 ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர் ,அதைவிக்கிபீடியாவிலேயே எளிதாக விளக்கி உள்ளனர்
 (Neotenous traits in humans :
These are neotenous traits in humans: flattened face,[2] broadened face,[10] large brain,[2] hairless body,[2] hairless face,[11] small nose,[11] reduction of brow ridge,[2] small teeth,[2] small upper jaw (maxilla),[2] small lower jaw (mandible),[2] thinness of skull bones,[10] limbs proportionately short compared to torso length,[10] longer leg than arm length,[12] larger eyes,[13] and upright stance.[14][7] ).
----------------------------------------------------------------------------------------------
    
       குதிரை , கழுதை , வரிக்குதிரை எல்லாமே equidae family ,( குதிரை
 குடும்பம் ), எல்லாமே ஒரே போல தோற்றம் அளித்தாலும் , 
மூக்கு வெளுத்தால் கழுதை , வரி இருந்தால் வரிக்குதிரை என 
அவைகளுக்குள் அடையாளம் கண்டு கொள்ளும் .




       வரிக்குதிரயிலேயே மூன்று இனங்கள் உண்டு ( the plains zebra, the
 Grévy's zebra and the mountain zebra ), அதை எப்படி அவைகள் சரியாக பகுத்து 
அறியும் ,


ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு வகையான வரி ,




 வரிக்கு வரி வரிக்குதிரையின் இனத்திற்கு ஏற்ப மாறுபடும் .
--------------------------------------------------------------------------------------------------------
இது போல தான் குரங்குகளில் பல இனம் , இனத்திற்கு இனம் உடம்பில்
 hairless patches ( முடிகளற்ற இடம் ) மாறுபடும் ,








சேவிங் செய்த தோற்றம் தான்  மற்ற குரங்குகளிடம் இருந்து நம்மை 
தனித்துக்காட்டும் மனித சமுதாயத்தின்  அடையாளம் ,




அதிலும் மனித சமுதாயத்தில் பல இனங்கள் அவற்றில் பல வித்யாசங்கள்  உண்டு .

எடுத்து காட்டு :

சீனர்களுக்கு என்ன தான் நெஞ்சில் மஞ்சா சோறு இருந்தாலும் நெஞ்சில் 
மயிர் கம்மிதான் , 



அதுவும் மீசையும் தாடியும் வித்யாசமாக வளரும் , பார்த்த உடன்
 கூறிவிடலாம் இவன் சீனன் என்று .

மேற்சொன்ன கருத்து நிறைய ஆராய்ச்சியாளர்களால் ஏற்று கொள்ளப்பட்டது ..

------------------------------------------------------------------------------------------------------------
இன்னும் பல தியரிகள்  உண்டு ...

1 ) பிணந்தின்னி கழுகுகள் உண்ணுவதை பார்த்திருக்கிறீர்களா ?


      பிணத்தினுள் முகத்தை கழுத்து வரை புதைத்து உண்ணும் .

    

  இதனால் கழுத்து முழுவதும் ரத்தம் படிந்து , கிருமிகள் அதில் வளர்த்து 
அதன் மண்டை கழுத்து வரை சொட்டயாகிவிட்டதாய் சொல்கிறார்கள் .

அதுபோல தான் நம் முன்னோர்கள் வேட்டையாடி உடலில் இரத்தம் படிந்த
 தோலை உடுதியதால் மயிர் போய்விட்டதாக ஒரு கருத்து .

2 ) பேன் தொல்லை (?)

3 )உடல் சூடு ( இது ஒரு நல்ல விளக்கம் கொண்ட கருத்து , தேவை 
பட்டால் விவாதிக்கலாம் ) etc etc ...
------------------------------------------------------------------------------------------------

         சரி neanderthal , H . erectus இவற்றில் இருந்து மனிதர்கள் வந்த 
கதையை ( உண்மையை ) பற்றியும் அதில் உள்ள சில சந்தேககங்களை
 பற்றி விளக்கமாக ஆஷிக் அண்ணன் விளக்கி உள்ளார் , அதை படித்து 
வைத்திருங்கள் , அடுத்த பதிவில் அவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலை
 பார்க்கலாம் .

பின்குறிப்பு : இந்த சீரிஸில் வரும் பதிவுகள் பல இடங்களில் நான் படித்த
 கருத்துக்களை வைத்து எழுதப்பட்டது  , எதுவும் டுபாக்கூர் அல்ல,   
referance தேவைபட்டால் தயங்காமல் கேளுங்கள் , குறிப்பிடுகிறேன் .
( அனைத்து  referance சையும் சைட் செய்வதற்குள் எனது மண்டை காய்ந்து
 விடும் , அதனால் தான் .



Comments