ரசிக்கும் அழகுகள்.,

கட்டி வைத்தாலும்
கலைந்து தொங்கும் கூந்தல்

இமை தட்டா விழிகள்

வந்து போகும்

சுவாசம் உணராத நாசிகள்



முத்தப் பசையின்றி
பிளந்து எரியும் உதடுகள்

அலங்காரமில்லாமல் நீ
ரசிக்கும் அழகுகள்

ஆடை கலையா
குங்குமங்கள்

என எல்லாம்..
உன் நினைவின் ஆளுமையில்
என்னுள் ஆழிப் பேரலையாய்

காத்திருப்பின் பிரியங்கள்
அனைத்தும்

வசந்த நேசம்..எதிர்நோக்கும்
வறண்ட தவிப்புகளோ..தலைவா

சுவைக்காமல் பார்த்து
பசியாறி பரிமாற

எப்போது நீ வருவாய்
என்னில் பாதியே...
..
 — with Sundari Kathir. this copy from FB.,

Comments