வெறிநாய் கடி நோய்.,

இது ஒரு வைரஸ் நோயாகும்.
இது வெறிநாய் நோய் தாக்கிய நாய் கடிப்பதன் மூலம் மற்ற விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பரவக்கூடியது.
நரம்பு மண்டலத்தை பாதிக்க கூடியதால், இந்த நோய் அறிகுறி தெரிந்த பிறகு குணப்படுத்த முடிவதில்லை.



வெறிநாயை கண்டிபிடிப்பது எப்படி?

தனியாக இலக்கு இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்.
வாயிலிருந்து எச்சில் ஒழுது கொண்டிருக்கும்.


மற்ற நாய் கடியிலிருந்து எப்படி வேறு படுத்துவது?

இது தனியாக அலைய கூடியது.
சின்ன கன்று குட்டிகளை பொதுவாக பின்புற பகுதிகளிலும் பெரிய மாடு எருமைகளை முன்புற முகத்திலோ அல்லது அதன் அருகிலோ கடி இருக்கும்.
குழுவாக வந்து நாய்கள் கடித்தால் அது வெறிநாயாக இருக்க வாய்ப்பு மிகவும் குறைவு.

கடிப்பட்ட மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கான மருத்துவம்.

உடனே கடிப்பட்ட இடத்தை நல்ல கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும்.
பிறகு அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி தடுப்பு மருந்துகளை குறிப்பிடும் 5 தடவை தவறாமல் போட்டு கொள்ளவேண்டும்.

வெறிநாய் கடி நோய் வராமல் தடுப்பது எப்படி?

வீட்டில் வளர்க்கும் பசு, எருமை , வெள்ளாடு , செம்மறியாடு மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு முதல் 3 மாத வயதில் வெறிநாய் கடி நோய் தடுப்பு மருந்துகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி போட்டுக் கொள்ளவேண்டும்.
இந்த தடுப்பு மருந்தினை ஒவ்வொரு வருடமும் ஒரு முறை திரும்ப திரும்ப போட்டு கொள்ளவேண்டும்.

Comments