தவறான உணவு முறை பற்றியது. மிகவும் தெளிவாக எழுதியுள்ளார்கள். எல்லோரும் கவனிக்க வேண்டியது.
இப்பொழுது பலரைக் கேட்டாலும் காலையில் ஓட்ஸ் சாப்பிட்டேன், கோர்ன் பிளேன், அல்லது சீரியல் பார் சாப்பிட்டேன் என்கிறார்கள்.
அல்லது புரோடினெக்ஸ் குடித்தேன், ரிசோஸ், அக்சன், பீடியா புரோ குடித்தேன் என எண்ணிலடங்கா துரித உணவுகள், food supplements மற்றும் மாப்பொருட்களின் பெயர்களைக் கூறுகிறார்கள்.
மருந்தகங்களில் சுடச்சுட வியாபாரமாகிற பொருட்கள் இவை.
இவற்றின் விலைகள் பெரும்பாலும் ஆயிரத்தைக் கடந்துவிடும்
"வேண்டும்" என சில நோயாளிகள் நச்சரிக்கும்போது மருத்துவர்களாகிய நாங்களும் எழுதிக் கொடுக்காமலும் இல்லை.
ஆனால் இவை தேவைதானா?
எமது பாரம்பரிய உணவுகள் எந்தவிதத்தில் போசாக்கில் குறைந்தவை.
கடலை பயறு, கெளபீ, சோயா போன்ற அவரை இன உணவுகள் புரதமும் நார்ச்சத்தும் மிகுந்தவை.
அரிசி, அரிசிமா, குரக்கன், உளுந்து, ரவை போன்றவற்றிலும் மாச்சத்துடன் நார்ப்பொருளும் உள்ளது.
கீரை, பொன்னாங்காணி, முருங்கை இலை, அகத்தி, தூதுவளை, வல்லாரை என எண்ணில் அடங்காத இலைவகைகள் மலிவாகக் கிடைக்கினறன. இவை விற்றமின், இரும்புச் சத்து, கல்சியம், நார்ப்பொருள் செறிவாகக் கொண்டவை.
வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி, கொய்யா, திராட்சை, தோடை, எலுமிச்சை, எண்ணிலடங்கா நிறங்களிலும் வகைகளிலும் பழ வகைகள். விற்றமின் மற்றும் நார்ப் பொருட்களை வேண்டியளவு கொண்டுள்ளன.
இவற்றை எல்லாம் கைவிட்டு எக்கச்சக்கமான செலவில் இறக்குமதியாகும் திடீர் தயாரிப்பு உணவுப் பொருட்களும், food supplements ம் தேவைதானா?
அல்லது இவை எல்லாம் தமது சமூக அந்தஸ்தை எடுத்துக் காட்டும் அடையாளங்களாக மாறிவிட்டனவா.,

நன்றி DR.Muruganandan M.K.
Comments
Post a Comment