ஆடுகளுக்கான மூலிகை வைத்தியம்

கழிசலுக்கு கத்திரி... சளிக்கு கண்டங்கத்திரி!

ஆடுகளுக்கான மூலிகை வைத்தியம் சித்த மருத்துவர்: ராஜமாணிக்கம்,

 ''ஆடுகளுக்குச் சரியான நேரத்துல குடல்புழு நீக்கலனாமெலிஞ்சு போயிடும். கால்படி அளவு சூபாபுல் (சவண்டல்) விதையை, 24 மணி நேரம் தண்ணியில ஊற வெச்சுஅதுல இருந்து 50 மில்லி தண்ணிய எடுத்து ஆட்டுக்குக் கொடுத்தா போதும். குடல்புழு வெளிய வந்துடும்.

வேப்பிலைமஞ்சள்துளசி இது மூணையும் சம அளவு எடுத்து அரைச்சி,நெல்லிக்காய் அளவு கொடுத்தா... வாய்ப்புண் ஆறிடும்.

காய்ச்சல் வந்த ஆடுகளுக்கு, 3 சின்ன வெங்காயம், 5 மிளகுஒரு வெற்றிலையை ஒண்ணா வெச்சு கொடுத்தா... சரியாகிடும்.

50 மில்லி நெய்யை மூணு நாளைக்குக் கொடுத்துட்டு வந்தா... தொண்டை அடைப்பான் சரியாகிடும்.

கொழிஞ்சியை அரைச்சி ஒரு கொய்யாப்பழ அளவுக்குக் கொடுத்தா... விஷக்கடி சரியாகிடும்.
ஆடுகளுக்கு வர்ற பெரிய பிரச்னை கழிச்சல். இதுக்கு ரொம்ப கஷ்டப்பட வேணாம்.கத்திரிக்காயைச் சுட்டு தின்னக் கொடுத்தா போதும். கழிசல் காணாம போயிடும்.

கண்டங்கத்திரிப் பழத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்துவெள்ளாட்டுக் கோமியத்துல24 மணி நேரம் ஊறவெச்சுசாறு எடுத்துமூணு சொட்டு மூக்குல விட்டா மூக்கடைப்புசளி எல்லாம் சரியாகிடும்.

சீதாப்பழ மர இலையை ஆடுக மேல தேய்ச்சி விட்டா பேன் எல்லாம் ஓடிடும்.

ஜீரண கோளாறு வந்தா, 300 மில்லி தேங்காய் எண்ணெய் கொடுத்தா சரியாகிடும். நல்லெண்ணெயும்மஞ்சளும் கலந்து தடவுனா கழலை போயிடும்'' என்று வரிசையாக பட்டியலிட்டுவிட்டு,

''ஆடுகளுக்குத் தேவையான கை வைத்தியத்தைத் தெரிஞ்சு வெச்சுகிட்டா... அவசரத்துக்கு டாக்டரைத் தேடி அலையாமநீங்களே ஆடுகள காப்பாத்திடலாம்''என்று நம்பிக்கையூட்டினார்.



நன்றி: சித்த மருத்துவர்: ராஜமாணிக்கம்,  9943265061

Comments

  1. நற்தகவல் ஐயா நன்றி

    ReplyDelete
  2. ஆடு அரிசி தின்று விட்டது நிற்க்க முடியவில்லை

    ReplyDelete
  3. ஆடுகள் இ௫மல் சலி இரண்டையும் எப்படி குணப்படுத்த முடியும்

    ReplyDelete
  4. இ௫மல் சலி இரண்டையும் சேர்த்து குணப்படுத்த என்ன ம௫ந்து கொடுத்தா குணப்படுத்த முடியும்

    ReplyDelete
  5. ஆடு அரிசி நின்றுவிட்டால் என்ன கை வைத்தியம் செய்வது?

    ReplyDelete

Post a Comment