“அசோலா தீவனம் அளிப்பதால், கால்நடைகளின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்’ என, பல்லுயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் தெரிவிக்கப்பட்டது.
மத்திய சுற்றுப்புற அமைச்சகம் மற்றும் அமைதி அறக்கட்டளை சார்பில், பல்லுயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் கரூர் மாவட்டம் செவந்திபாளையம் புதூரில் நடந்தது. இதில், தொண்டு நிறுவன இயக்குனர் ராமஜெயம் பேசியதாவது:
மத்திய சுற்றுப்புற அமைச்சகம் மற்றும் அமைதி அறக்கட்டளை சார்பில், பல்லுயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் கரூர் மாவட்டம் செவந்திபாளையம் புதூரில் நடந்தது. இதில், தொண்டு நிறுவன இயக்குனர் ராமஜெயம் பேசியதாவது:
§ கால்நடைகள், விலங்குகள், பறவைகளுக்கு வி.கே., நார்டெப் முறையில் அசோலா பயிர் வளர்த்து தீவனத்தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் செயல்படுத்தலாம்.
§ காடுகள் வளர்ப்புத்திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு உணவளித்துகொண்டிருந்த நிலங்களில் யூகலிப்டஸ் போன்ற மரவகைகளை பயிரிட்டதே தீவன தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம்.
§ பெரிய வகை தீவனப்பயிர்களுக்கு, அதிகளவு தண்ணீர், ரசாயன உரங்கள் தேவைப்படுகிறது. ஏழை விவசாயிகளால் இதை செய்ய முடியாது.
§ எல்லோராலும் மிக எளிதாக வளர்க்கக்கூடிய புரதச்சத்து மிக்க தீவனமாக அசோலா தீவனப்பயிர் உள்ளது.
§ அசோலா கால்நடைகளுக்கும், கோழிகளுக்கும், ஒன்றுக்கு ஒன்று என்ற வகிதத்தில் கலந்துகொடுக்கலாம்.
§ கால்நடைகளின் ஆராக்கியம், வாழ்நாள் நீடித்து பாலின் அளவு, தர ம் மேம்பட்டு, 10முதல் 15சதவீதம் பால் உற்பத்தி அதிகரிக்கும்.
§ அசோலா தீவன பயிரினம் கொடுக்கப்பட்ட கோழியின் எடை அதிகரித்துள்ளது.
§ இறப்புவிகிதம் குறைந்து இறைச்சி நல்ல நிறம், சுவை மிகுந்ததாக இருக்கும்.
§ முட்டை எண்ணிக்கை அதிகரிக்கும்.
§ ஆடு பிற விலங்குகள் முயல், பன்றி, காடை, மீன் போன்றவற்றுக்கும் உணவாக கொடுக்கலாம்.
§ நெல்வயல்களுக்கு நுண்ணுயிர் உரமாக பயன்படுத்தலாம்.
§ ஓர்ஏக்கர் நிலத்தில், 200 கிலோ அசோலாவை இடவேண்டும்.
§ இது, 20 முதல், 25 நாட்களில் நன்கு வளர்ந்து, ஓர் ஏக்கர் நிலம் முழுவதும் பரவிவிடும்.
§ நுண்ணுயிர் உரமாக பயன்படுத்துவதால், 20 முதல், 30 சதவீதம் உரச்செலவை குறைக்கலாம்.
§ வயலில் களைகள் வளர்வது கட்டுப்படுத்தப்படும்.
§ நீர் ஆவியாதல் கட்டுப்படுத்தப்பட்டு, 20முதல் 25சதவீதம் அதிகமாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி: தினமலர்
Comments
Post a Comment