ஆண் - பெண் இருவரிடையே, தங்களைப் பற்றிய எண்ணம் யாருக்கு அதிகம்?

உடல் சிறிது பாதிக்கப்பட்டாலும் அதை பெரிதுபடுத்துவதிலும், ஆர்ப்பாட்டம் செய்வதிலும் ஆண்களை மிஞ்சுபவர் பெண்கள். இது உண்மையா?
உண்மை... 'என் கணவருக்கு ஜலதோஷம் பிடிக்கும் போது, அவரை பார்க்க வேண்டுமே...' என்று, அங்கலாய்க்கும் பெண்களை, ஆண்கள் மிஞ்ச முடியாது.
பெண்களை விட ஆண்களுக்குத்தான் எப்போதும் தங்களைப் பற்றிய எண்ணம்...


தவறு. பெண்களுக்கு தங்களைப் பற்றிய பிரச்னைகளே பெரிதாகத் தெரியும்; வெளி விஷயங்களில் அவர்களுக்கு அதிகம் அக்கறை கிடையாது.
பெண்களைப் பற்றி ஆண்கள் பேசுவதை விட, ஆண்களைப் பற்றி பெண்கள் தான் அதிகம் பேசி விவாதிப்பர்.


உண்மை; பல்கலைக் கழக ஆராய்ச்சிகள் மூலம், தங்கள் நேரத்தில் பெருமளவு ஆண்களை பற்றிய விவாதத்தில் பெண்கள் ஈடுபடுகின்றனர் என, தெரிய வந்துள்ளது. ஆண்களைப் பற்றிய விஷயங்கள் மற்றும் மற்ற பெண்களின் வம்புப் பேச்சுக்களைத் தவிர, வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை. 

ஆண்கள் பெரும்பாலும் பிசினஸ், பணம், மற்ற ஆண்கள், கடைசியில் தான் பெண்களைப் பற்றி பேசுகின்றனர்.

பெண்களை விட ஆண்கள் நேர்மையானவர்கள்; உண்மையா?


தத்துவ ஆராய்ச்சியின்படி, விஷயங்களை மறைத்துப் பேசுவதில், ஆண்களை விட பெண்கள் தேர்ந்தவர்கள்; ஆனால், பச்சையாக, அப்பட்டமான பொய்களைச் சொல்லும் சாமர்த்தியத்தில், ஆண்களே வல்லவர்.
ஆண்களை விட நேரத்தைக் கழிக்க சிரமப்படுவர் பெண்கள். அலுப்பு சீக்கிரமே தோன்றி விடும்; இது சரியா?


ஆண்களுக்குத் தான் வெகு எளிதில் போரடிக்கத் தொடங்கும்; தொடர்ந்து ஒரு வேலை செய்தால், அசதி அதிகம் ஏற்படும். ஒரே வேலையை, அலுக்காமல் பெண்கள் தொடர்ந்து செய்ய முடிவதன் காரணம், பகற்கனவு காண்பதும், வாய்ப் பேச்சும் தான்!

ஆண்களை விட அதிகம் மகிழும் சுபாவமும், தன்னம்பிக்கையும் பெண்களுக்கு உண்டு.தவறு. மனத்தளர்ச்சியோ, மனச்சோர்வோ, எதுவானாலும் பெண்களுக்கு சீக்கிரமே ஏற்படும். வாழ்க்கையின் மேடு, பள்ளங்களைத் தாங்கும் சக்தி குறைவு.

மனைவியை, கணவன் புரிந்து கொள்வதை விட, கணவனை, மனைவி நன்கு புரிந்து கொள்வாள். இது சரியா?


தவறு; சில தத்துவ நிபுணர்கள் ஒரு ஆராய்ச்சி நடத்தினர். திருமணமான பல ஜோடிகளை அழைத்தனர். முதலில், கணவன்மார்களைத் தனியே கூப்பிட்டு, அவரவர் மனைவியைப் பற்றிய அபிப்ராயங்களைச் சொல்லச் செய்தனர். முடிவில் தெரிந்தது... கணவனே, தன் மனைவியை நன்கு புரிந்து கொண்டிருக்கிறான் என்று! எந்தெந்த நேரத்தில் எப்படி எப்படி மனம் மாறுவாள் என்பதை, கணவனால் நன்கு யூகிக்க முடிகிறது என்பதை கண்டறிந்தனர்.


துன்பங்களும், இடையூறுகளும் வரும்போது, பெண்கள் அதிகம் மனம் உடைந்து போவர். இது சரியா?


தவறு; சிறு தொல்லைகள் வரும் போது கலங்கினாலும், பெரிய இடையூறுகள் நெருங்கும் போது, சராசரி ஆண்களை விட பெண்களே உறுதியுடன் இருப்பர். இது, மனோத்தத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த உண்மை.


ஆபத்து வரும் சமயத்தில், பெண்களை காட்டிலும் ஆண்கள் உஷாரானவர்கள்; இது சரியா?


சரி; ஆபத்து எதிர்நோக்கி வருவதை குறிப்பால் உணர்ந்து கொள்வதிலும், அதற்காக தன்னைத் தயார்படுத்திக் கொள்வதிலும், பெண்களை மிஞ்சியவர்கள் ஆண்கள். இது, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த உண்மை.


பேச்சுத் திறனில் பெண்களே வல்லவர்கள்; உண்மையா?
பால பருவம் தாண்டியதுமே, ஆண்களின் பேசும் சக்தியை விட, அதிக சக்தியைப் பெற்று, விரைவில் சுலபமாகவும், வேகமாகவும் நீண்ட நேரமும் பேசும் தனித் தன்மையை பெண்கள் பெற்று விடுகின்றனர். ஆனாலும், மற்றவர்கள் பேசுவதை கிரகிக்கும் தன்மை, ஆண்களைவிட பெண்களுக்குச் சற்று குறைவு தான்.



நன்றி: 'ரீடர்ஸ் டைஜஸ்ட்'

Comments