மலர்கள் மற்றும் தாவரத்தின் மற்ற பாகங்கள்
- கோழிக் கொண்டை, மல்லிகை கீரை வகைகள், பாக்கு மற்றும் தென்னை இலைகள், வெட்டப்பட்ட மலர்கள் அனைத்தும் இப்பட்டியலைச் சார்ந்ததாகும், இதனுடன் உலர்ந்த இலைகள் மற்றும் கிளைகள் ஆகியவையும் சேர்க்கப்படுகிறது.
- கடந்த 20 வருடங்களாக இந்தியா இவ்வகையான பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
பாட்பொரி
- இவ்வகையான மணமூட்டப்பட்ட மலர்கள் பிளாஸ்டிக் பைகளில வைக்கப்படுகிறது.
- பொதுவாக இவை அலமாரி, டிராயர் மற்றும் குளியலறைகளில் வைக்கப்படும்.
- சுமார் 300க்கும் மேலான தாவர வகைகள் இம்முறைக்கு பயன்படுத்தப்படுகிறது.
- இந்தியாவில், பேச்சிலர் பட்டன், கோழிக் கொண்டை, மல்லிகைப் பூ, ரோஜா இதழ்கள், காகிதப் பூ, வேப்ப மர இலைகள் மற்றும் பழக் கொட்டைகள் ஆகியவை பாட்பொரி செய்யப்பயன்படுகிறது.
- இங்கிலாந்து, இவ்வகை தயாரிப்புக்கு, நமது மிக முக்கிய வாடிக்கையாளர்.
உலர் மலர் தொட்டி
- உலர்ந்த தண்டு மற்றும் சிறு கிளைகள் பயன்படுத்தப்படுகிறது.
- இதற்க்கு கிராக்கி மிகவும் அதிகமில்லை என்றாலும் அதிக விலைக்குப் போகக்கூடியது, மேலும் உயர்தர வர்க்கத்தினரால் மிக அதிகமாக விரும்பப்படக்கூடியது.
- பொதுவாக உலர்ந்த பருத்தியின் கூடு, பைன் மலர்கள், காய்ந்த மிளகாய், மற்றும் சுரைக்காய், புல், மர மல்லிகை, அஸ்பராகஸ் இலைகள், பெரணி இலைகளை, மரப்பட்டைகள் மற்றும் சிறு குச்சிகள் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.
உலர்மலர் கைவினைப் பொருட்கள்
- இவ்வகை பொருட்கள், உலர் மலர் வர்த்தகத்தில் தற்சமயம் மிக அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது.
- வாழ்த்து அட்டைகள், கவர்கள், மெழுகு தாங்கி, கண்ணாடி கிண்ணங்கள் ஆகியவை பல வகை நிறமுள்ள உலர் மலர்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
தகவல்
முனைவர் ஸி. ஸ்வர்ணபிரியா மற்றும் முனைவர் வி. ஜெயேசேகர், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் (கே.வி.கே), பேச்சிப்பாறை, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு.
|
Comments
Post a Comment