துல்லிய பண்ணையம்,

துல்லிய பண்ணையம் என்றால் என்ன?
  • துல்லிய பண்ணையம் என்பது புதிய தொழில் நுட்பங்களையும், சேகரிக்கப்பட்ட வேளாண் தகவல்களையும் உரிய முறையில், உரிய இடத்தில், உரிய நேரத்தில் பயன்படுத்துவதாகும்.  பயிர்களின் எண்ணிக்கையை கணக்கிடவும், உரம் மற்றும் ஏனைய இடுபொருட்களின் தேவைகளை கண்டறியவும், சேகரிக்கப்பட்ட தகவல்கள் பயன்படுகிறது.  மேலும் பயரின் மகசூலை துல்லியமாக கணிக்கவும் முடிகிறது.
  • பயிர் சாகுபடியின் போது மேற்கொள்ளப்படும் தேவையற்ற சாகுபடி முறைகளை தவிர்க்க முடிகிறது.  ஆட்களின் செலவு, தண்ணீர், உரம், பூச்சி மற்றும் பூஞ்சானக் கொல்லிகள் ஆகியவற்றின் செலவு குறைவேதாடு நல்ல தரமான உற்பத்தி பொருள் கிடைக்கிறது.
தமிழ்நாடு துல்லிய பண்ணைத் திட்டம்
திட்டம் பற்றி
  • துல்லிய பண்ணைத்திட்டம் 2004 - 05 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் துவங்கப்பட்டது.  இத்திட்டம், 2004-05-ல் 250 ஏக்கரிலும், 2005-06 ல் 500 ஏக்கரிலும், 2006-07ல் 250 ஏக்கரிலும் செயல்படுத்தப்பட்டது.  தமிழக அரசின் இத்திட்டத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அமல்படுத்தியது.
  • ரூ.75000 சொட்டு நீர் பாசனத்திற்கும், ரூ.40000 சாகுபடி செலவுகளுக்கும் மானியமாக வழங்கப்பட்டது.  முதற்பயிரை வேளாண் விஞ்ஞானிகளின் முழு பரிந்துரையின் படி விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அடுத்த 3 வருடத்தில் 5 பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
  • 2002 ஆம் ஆண்டிலிருந்து 4 வருடங்களாக விவசாயிகள் சந்தித்த வறட்சியின் காரணமாக, இத்திட்டத்தில் சேர தயக்கம் காட்டினர்.  இத்திட்டத்தில் சேர்ந்து வெற்றியடைந்த 100 விவசாயிகளைக் கண்டும், இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை விலையைப் பார்த்தும், இரண்டாம் வருடத்திலும் (90% மானியம்) மூன்றாம் வருடத்திலும் (80% மானியம்) அதிக அளவில் விவசாயிகள் சேர்ந்தனர்.
                   
தொழில் நுட்பங்கள்
1. தொலை உணர்வுக் கோள்கள் மூலம் மண் வரைபடம்:
 மண் வரைபட தொழில் நுட்பத்தின் வாயிலாக, ஒரு குறிப்பிட்ட பகுதியின் மண் வளத்தை அறிய முடியும்.
2. உளிக்கலப்பை மூலம் உழுதல்:
பல ஆண்டுகளாக, இயந்திர கலப்பை பயன்படுத்தி நடை நீர் பாசனம் செய்ததால், மண்ணின் மேற்பரப்பு அதாவது 45 செ.மீ ஆழம் வரை கடினமாகி மண்ணின் வடிகால் தன்மையையும், காற்றோட்டத்தையும் பாதிக்கிறது. உளிக்கலப்பை பயன்படுத்தி வருடத்திற்கு இரண்டு முறை உழுவதன் மூலம் இந்த குறைபாடுகளை சீர்படுத்த முடிகிறது.
                 
3. சொட்டு நீர் பாசனம்
  • 1.5 x 1.6 மீ இடைவெளியில் சொட்டு நீர் பாசனம் அளிக்கப்பட்டது.  இதனால் பல நன்மைகள் உண்டு.
  • ஒரு ஏக்கரில், குறைந்த அளவு தண்ணீரும், உரமும் செலவாகிறது.
  • மண்ணின் மேற்பரப்பு உலர்ந்து கிடப்பதால், அதிகமாக களை வருவதில்லை.
  • மண்ணின் ஈரப்பதமும், காற்றோட்டமும் நன்கு பராமரிக்கப்படுவதால், மலர்கள் மற்றும் பழங்கள் உதிர்வது குறைகிறது.
  • காற்று ஈரப்பதம் 60%க்கு குறைவாக இருப்பதால் பூச்சி மற்றும் நோய்த்     தாக்கம் குறைகிறது.
  • மண்ணின் காற்றோட்டம் 40% கூடுவதால் வேர் வளர்ச்சி அதிகரிக்கிறது.

          
       
4. சமுதாய நாற்றங்கால் :
100% வளமான காய்கறி நாற்றுகளை உற்பத்தி செய்ய, துல்லிய பண்ணைத் திட்ட விவசாயிகள், வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் வழிகாட்டுதலோடு சமுதாய நாற்றங்கால் முறையை பின்பற்றினர்.

          community nursery_2.gif
5. பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாடு :
பருவ நிலையைக் கணித்து, நோய் மற்றும் பூச்சி தாக்கம் வரும் முன்னதாக கட்டுப்பாடு முறைகளை மேற்கொண்டதன் மூலம் மூன்றின் ஒரு பங்கு செலவு குறைக்கப்பட்டது.
துல்லிய பண்ணைய விவசாயிகள் கூட்டமைப்பு
  • 25-30 பயனாளி விவசாயிகள் இணைந்து துல்லிய பண்ணைய விவசாயிகள் சங்கம்" என பதிவு செய்துள்ளனர்.  இச்சங்கம் கீழ்கண்ட செயல்களை மேற்கொண்டுள்ளது.
  • மொத்தமாக இடுபொருட்கள் வாங்க பேரம் பேசுவது
  • ஒப்பந்த முறையில் காய்கறிகளை விற்பனை செய்வது பற்றி விவாதிப்பது
  • பல்வேறு சந்தைகளுக்குச் சென்று, சந்தை நிலவரம் பற்றி அறிவது
  • துல்லிய பண்ணையத்தின் அனுபவங்களை பிற விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்வது
  • தமிழ்நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து வரும் விவசாயிகளுடன் துல்லிய பண்ணைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல்
சந்தைப்படுத்துதல்
  • விளை பொருட்களை அதிக விலையில் விற்க வேளாண் விஞ்ஞானிகள் உதவினர்.  சந்தை நிலவரப்படி அதிகபடியாகத் தேவைப்படும் பயிர் உரிய நேரத்தில் சாகுபடி செய்யப்படுகிறது.
  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வல்லுனர்களின் துணேயோடு, துல்லிய பண்ணைய விளைபொருட்களுக்கென தனி முத்திரை உருவாக்கப்பட்டுள்ளது. 
  • இத்திட்டம் செயல்படும் பகுதியிலிருந்து வரும் விளைபொருட்களின் உயரிய தரத்தால் சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது.
இத்திட்டம் பற்றிய மேலும் விபரங்களுக்கு கீழே க்ளிக் செய்யவும்
  தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
முதன்மை அலுவலர்
தமிழ்நாடு துல்லிய பண்ணைத் திட்டம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்,
கோயம்முத்தூர் - 641 003
தொலை பேசி - 0422 6611233

Comments