அமெரிக்காவின் கலிப்போர்னியா மாகாணத்தில், மனிதனுக்கு அப்பாற்ப்பட்ட சக்தியுடனும், உடல் மொழியுடனும், மனிதர்களோடு மனிதனாக வாழ்வதாக ஹாலிவுட் சினிமாக்களால் வர்ணிக்கப்பட்ட ஏலியன்ஸ், இந்தியாவில் இருந்ததாகச் சொல்கிறது மேலை நாட்டு மீடியாக்கள்.
ஆனால், அவர்கள் ஏலியன்ஸ் என்று கைகாட்டுவது குப்பனையோ, சுப்பனையோ அல்ல.. நாம் வணங்கும் கடவுள்களை. அதற்கு ஆதாரமாக அவர்கள் சமர்பிப்பது நமது புராணங்களை...அதாவது, இந்து புராணங்களின்படி, கடவுள் என்பவர் மனித ரூபத்திலேயே இருந்ததில்லை. ஆறு முகங்கள், நாலைந்து கைகள், நீல நிற உடல் என மனிதர்களிடம் இருந்து வேறுபட்டே காணப்பட்டனர். அவர்கள் மந்திரங்கள் சொல்லி சாதாரண வில்லை எடுத்துவிட்டால் கூட வானில் மின்னல்கள் எழும்பின.
இன்று நாசா எந்த எரிபொருளும் இல்லாமல் பறக்கும் இயந்திரம் கண்டுப்பிடிக்க, அது விமானங்கள் என்ற பெயரில் இந்து கடவுள்களிடம் அப்போதே இருந்தது. அதைத்தான், ‘ஏலியன்ஸின் பறக்கும்தட்டு’ என்கிறோம்.
இப்படி, இன்றைய அறிவியலின் மூலம் மனிதன் கண்டுப்பிடித்த சாதனங்கள் பல ஆயிரம் வருடங்கள் முன்பே அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். அவர்கள் மழையை வர வைத்தார்கள், மலையைக் கையால் தூக்கினார்கள், தூர தேசத்தில் நடப்பவற்றை, இருந்த இடத்திலேயே பார்த்தார்கள். என்பவர்கள் ஒரு படி மேலே போய், அவர்கள் அணு ஆயுதத்தைவிட மேம்பட்ட ஆயுதத்தைப் பயன்படுத்தினார்கள் என்கிறார்கள்.
ராமாயணத்தில், ராவணன் வாழ்ந்ததாகச் சொல்லப்படுவது, கடல் மட்டத்தில் இருந்து 600-அடிக்கு மேல் இருக்கும் சிஜிரியா மலையில். இதை இலங்கை அரசு சுற்றுலாத் தளமாக அறிவித்துள்ளது. இந்த மலையில் உள்ள ஒவியங்களில்பெண்கள் சிலர் அரை நிர்வாணத்துடன், மேகங்களிடையே பறப்பது போல் உள்ளன. இதை, பத்துத் தலைக்கொண்ட ராவணன் விண்ணுலகத்துக்கும், பூவுலகத்துக்கும் பிறர் வந்து செல்ல துறைமுகமாக இருக்க நினைத்து எழுப்பியதாகச் சொல்கிறார்கள். மகாபாரதத்துக்குப் பல யுகங்களுக்கு முன்னால் நடந்த ராமயணத்தில் சீதையைக் கடத்த, ராவணன் பறக்கும் விமானத்தையே பயண்படுத்தியாகப் புராணங்கள் எடுத்துரைக்கிறது. தமிழகத்தில் உள்ள பல கோவில்கள், ‘அரசரின் கனவில் இறைவன் கோயில் எழுப்பச் சொன்னார், அரசர் வைத்த போட்டிகளில் பங்கேற்றார்’ என்பது போன்ற குறிப்புகள் உள்ளன.
- கு. அஸ்வின்
Tks விகடன்.,

பழங்கால அரசருடன் கடவுள்கள் தொடர்பு வைத்தாகவே நம்பப்படுகிறது. அந்த வகையில் தமிழகக் கோயில்கள் கடவுளின் வழிகாட்டுதலின் பெயரிலேயே கட்டப்பட்டுள்ளதாகக் கருதுக்கின்றனர். இந்து கடவுள்களை மட்டுமல்லாமல்... இயேசு, புத்தர், டாவின்சி, போப் எனச் சகலரையும் இந்த விஷயத்தில் இழுக்கிறார்கள். இயேசுவை சித்தரிக்கும் பல பழமைவாய்ந்த ஒவியங்களில் பறக்கும் தட்டுக் காட்சியளிக்கிறது.
‘வாடிகன் சிட்டியில் ஏலியன்ஸின் பிணங்கள் உள்ளன, புத்தர் ஆற்றின் மேல் நடந்தது ஏலியன்ஸூடன் வைத்த தொடர்பால்தான், டாவின்சி வரைந்த ஒவியங்கள் நாம் இன்று உபயோகிக்கும் ஆயுதங்களைப் பற்றியுள்ளன’ என்று ஒவ்வொன்றும் இருக்கிறது. ஆனால் இவர்களை எல்லாம் ஏலியன்ஸுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் லிஸ்டில் சேர்த்து, இந்து கடவுள்களை மட்டும் ஏலியன்ஸ் என்கிறார்கள். இப்படிக் கடவுள்களை ஏலியன்ஸாக வரையறுப்பதை இந்தியாவில் பலர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
‘அவர்களிடம் பறக்கும் தட்டு இருந்தும் அவர்கள் ஏன் இந்தியாவைவிட்டு மற்ற நாட்டுக்கு செல்லவில்லை? அவர்கள், இப்போது எங்கு இருக்கிறார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? மீண்டும் வருவார்களா? வந்தால் எப்போது வருவார்கள்? இப்போது அவர்களிடம் இன்னும் மேம்பட்ட அதி நவீன ஆயுதங்கள் இருக்கக்கூடுமா, அவர்கள் வேறு எதையாவது விட்டு சென்றிருக்கிறார்களா, அவர்களுக்கு என்று ஒரு கிரகம் இருக்கிறதா, அவர்கள் ஏன் நம்முடன் தொடர்பு வைத்துக்கொள்ள ஆசைப்பட்டார்கள்’ இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் நம்மால் எந்தச் சார்ப்பு நிலைக்கும் வர முடியாது.
இப்போதே இந்துக்களின் புராணங்களான வேதங்களை அமெரிக்காவின் நாசா ரகசியமாக ஆராய்ச்சி செய்வதாகச் சிலர் இணையதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். எது எப்படியோ இன்னும் சில வருடங்களில் ஏலியனைதான் கடவுள் என்கிறோம் என்று சைன்ஸ் ஃபிக்ஷன் படங்கள் வெளிவர தொடங்கிவிடும். நியூயார்க்கில் ஏலியன்ஸுடன் சண்டைப்போட்டுக் கொண்டிருந்த ‘வில் ஸ்மித்தும், டாம் க்ரூஸும்’, இந்தியாவில் உள்ள ஏலியன்ஸுக்கு எதிராகத் துப்பாக்கி தூக்குவார்கள் என்பது மட்டும் நிச்சயம்!
‘‘2001-ல் ‘கல்ப் ஆப் கம்பாட்’ பகுதியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுப்பட்டபோது கடலுக்குள் ஒரு பெரிய நகரத்தைக் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்தனர். கண்டுப்பிடிக்கப்பட்ட அந்த நகரமானது, பெரிய துறைமுகமாகச் செயல்பட்டிருக்க வேண்டும். சிதைந்து கிடக்கும் அந்த நகரத்தின் மீது பல வான் வழி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அங்குச் சிதைக்கப்பட்டிருக்கும் கட்டடங்கள், நம்மைவிட டெக்னாலஜியில் மேம்பட்டவர்களால் கட்டப்பட்டுள்ளது. அந்த டெக்னாலஜியை, மனிதன் கண்டுப்பிடிக்க இன்னும் பல ஆயிரம் வருடங்கள் பிடிக்கும்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அந்த நகரம்.. துவாரகை மைந்தன் கிருஷ்ணன் ஆண்ட துவாரகா! இன்று நாம் துவாரகை என்று அழைக்கும் நகரத்துக்கும் கிருஷ்ணர் ஆண்ட தூவாரகைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பது கூடுதல் செய்தி. உலகப்போரில்தான் மனிதன் வான் வழி தாக்குதலில் ஈடுபட்டான். ஆனால், அதற்குப் பல கோடி வருடங்கள் முன்னரே, இது நடந்தது என்றால் அது ஏலியன் டெக்னாலஜி மூலமே சாத்தியமாகும் என்றும் சொல்கின்றனர்.