வெற்றி பெற எளிய வழிகள் !.!

1. முதலில் பெரிதாகக் கனவு காணுங்கள்.

2. வழி நடத்தும் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். எப்படிச் செய்ய விரும்புகிறீர்கள். அந்த லட்சியக் கனவு நிறைவேறுவதற்கான வழிவகை என்ன? என்பதை நன்கு தீர்மானித்துச் செயல்படுங்கள். ஒரு வருடத்தில் நீங்கள் அடைய வேண்டிய பத்து லட்சியங்களைக் குறித்து வைத்துக்கொண்டு, அதனை ஒவ்வொன்றாக நிறைவேற்ற முயலுங்கள்.


3. நீங்கள் உங்களைச் சுயதொழில் முனைவோராக நினைத்துக் கொள்ளுங்கள்.

4. நீங்கள் செய்யும் வேலையைப் பெரிதும் நேசியுங்கள். உங்களுக்குப் பிடித்தமான வேலை எது என்பதைத் தீர்மானித்து, அதில் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

5. எந்த வேலையையும் மிகவும் நேர்த்தியாக, சிறப்பாகச் செய்ய முயலுங்கள். தொழில்நுட்பம் பற்றிச் சிந்தித்தால் இன்னும் வளர்ச்சியைக் காண்பீர்கள்.

6. கடின உழைப்பே உங்கள் உயிர்மூச்சாக இருக்கட்டும். முன்னேறும் வரை சோர்வுக்குச் சற்றேனும் இடம் தராதீர்கள்.

7. தொடர்ந்து முன்னேற்றத்தின் ஏணிப்படிக்கட்டுகளில் ஏறிச்செல்லுங்கள். மேன்மேலும் அந்தத் தொழிலை எப்படித் திறம்பட வளர்த்துக் கொள்வது என்பதை அறிந்து செயல்படுங்கள். மேன்மேலும் கற்றுக்கொள்பவராக, அதில் முழுமையாக உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். தினமும் ஒருமணி நேரமாவது உங்கள் துறை சம்பந்தப்பட்டவரைப் பற்றி படியுங்கள். அது சம்பந்தமான பலப்பல விஷயங்களையும், யுக்திகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

8. உங்களது ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒன்று முதல் இரண்டு சதவிகிதம் சேமியுங்கள்.

9. உங்களது தொழில் அல்லது வியாபாரத்தின் முழுநுணுக்கங்களையும் நன்கு தெரிந்து கொள்ளுங்கள். இதுபோட்டிகள் நிறைந்த உலகம். போட்டியைச் சமாளிப்பதற்கேற்ப உங்கள் தொழில் அல்லது வியாபார யுக்தியை அவ்வப்போது அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள்.

10. மற்றவர்களுக்குச் சேவை செய்ய முயலுங்கள். வாடிக்கையாளர்களது தேவை பற்றிய கவனம் என்பது மிகமிக அவசியம். வாடிக்கையாளர் திருப்தி தான் உங்களுக்கு வரப்பிரசாதம். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த இன்னும் ஏதேனும் செய்ய முடியுமா என்பதைக் கவனித்துச் செயல்படுங்கள். இதுவே உங்கள் வளர்ச்சியின் தாரக மந்திரம்.

11. உங்களது தொழில் வளர்ச்சியில் தூய்மையும், நேர்மையும், தனித்தன்மையும் என்றும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

12. உங்களைப்போல மற்றவர்களையும் உயர்வாக எண்ணுங்கள். எல்லோரிடமும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள்.

13. ஒரு உயரத்திலிருந்து அடுத்த உயரத்திற்குச் செல்ல உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். சுழற்சியையும், போக்கையும், மாற்றங்களையும் அடையாளம் காணக் கற்றுக்கொள்ளுங்கள்.

14. உடன் பிறந்த கற்பனைத் திறனை ஒருபோதும் பூட்டி வைக்காதீர்கள். எந்த ஒரு பிரச்னையையும் எப்படி சரி செய்வது, இடையூறுகளை எப்படிச் சமாளிப்பது என்பதைத் தீர்க்கமாக ஆராய்ந்து செயல்படக் கற்றுக்கொள்ளுங்கள்.

15. எப்போதும் உங்களைச் சுற்றிலும் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பவர்கள் சூழ வாழுங்கள். உங்கள் வாழ்க்கையை ஒவ்வொரு படியிலும் வெற்றியாளர் சூழ வாழுங்கள்.

16. உடல் நலமுடன் இருந்தால்தானே உங்களால் எதையும் சாதிக்க முடியும். ஆகவே, உங்கள் உடல் நலனில், ஆரோக்கியத்தைப் பேணுவதில் அக்கறை செலுத்துங்கள்.

17. பயத்தை எப்படி வெற்றி கொள்வது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். வீணான அச்சத்திற்கு ஒருபோதும் இடம் தராதீர்கள். கவலையும், அச்சமும் தான் ஒரு மனிதனை முன்னேறவிடாமல் கீழே பிடித்துத் தள்ளுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த முறைகளை நீங்கள் சரியாகப் பின்பற்றினால் உங்கள் வெற்றி நிச்சயம்.

TKS:DINAKARAN. 

Comments