நாளொன்றுக்கு 40 லிட்டர் வரையிலும் பால் கொடுப்பதால் ஜெர்ஸி, சிந்து, எச்.எஃப். போன்ற கலப்பினப் பசுக்களை வாரி அணைத்துக் கொண்டவர்கள், 4 லிட்டர் மட்டுமே பால் தரும் நாட்டு மாடுகளை நிர்க்கதியாக்கி விட்டனர். நாட்டு மாடுகளிலிருந்து பால் உற்பத்தி பெரிதளவில் இல்லையெனினும், இம்மாடுகளின் மூலம் அன்றாட பயன்பாட்டுப் பொருட்களை இயற்கை முறையில் தயாரித்து லாபம் ஈட்டி வருகிறார் திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள மேட்டுக்கடையைச் சேர்ந்த ஈஸ்வரி.நாட்டு மாட்டின் சாணம் மற்றும் கோமியத்தை பிரதானமாகக் கொண்டு அர்க், ஷாம்பு, ஹேர் ஆயில், சோப்பு, சாம்பிராணி, ஃபேஷியல் பவுடர், பல்பொடி, டிஸ்வாஷ் பவுடர், விபூதி, வலி நிவாரணி என ஈஸ்வரி தயாரிக்கும் சிறுதொழில் பொருட்களுக்கு நல்ல விலை கொடுத்து வாங்கிச் செல்ல வாடிக்கையாளர் பலர் இருக்கின்றனர். “விவசாயம்தான் எங்களுக்கு முக்கியத்தொழில், இந்தப் பொருட்களையெல்லாம் ஆரம்பத்துல எங்க பயன்பாட்டுக்குத்தான் தயாரிச்சேன். எந்த கெமிக்கலும் இல்லாம இயற்கை முறையில தயாரிக்கிறதால, நிறைய பேர் எங்களுக்கும் வேணும்னு கேட்க ஆரம்பிச்சாங்க, அப்புறம்தான் தொழிலை விரிவுபடுத்தினேன்” என்று தொடங்குகிறார் ஈஸ்வரி.
“11 ஏக்கர் நிலத்துல குமுளு, காயா, வேம்பு, மலை வேம்பு, ஈட்டி, தீ மரம், வாகை, சப்போட்டா, நெல்லி மரங்களை நட்டிருக்கோம். விவசாயத்துக்காக 11 நாட்டு மாடுகளை வளர்த்துட்டு வர்றோம். நானும் என் கணவர் முத்துச்சாமியும்தான் இதையெல்லாம் கவனிச்சுக்குறோம். உப்பு உரம் பயன்படுத்துறதில்லை, ஜீவாமிர்தம் தயாரிச்சு ஊத்தி இயற்கை விவசாயம்தான் பண்ணிக்கிட்டிருக்கோம். ஒரு முறை இங்கே வந்த நம்மாழ்வார் அய்யா, எங்க விவசாய முறையை பார்த்துட்டு பாராட்டினார். சேலம் பக்கத்துல நாகமலைல சுனில் மான்சிங்னு நாக்பூரை சேர்ந்த வேளாண் அறிஞரோட பயிற்சி முகாம்ல கலந்துகிட்டப்பதான் இந்தத் தயாரிப்பு முறைகளை கத்துக்கிட்டேன். எனக்கு ரொம்ப நாளா மூட்டுவலி இருந்துச்சு, நானே ‘அர்க்’ தயாரிச்சு குடிச்ச பிறகு நல்லாயிடுச்சு.
அதுக்கப்புறம்தான் இதோட மகத்துவம் எனக்கு புரிய ஆரம்பிச்சுது” என்றவர் இப்பொருட்களின் செய்முறைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்தும் பேசுகிறார். “காலையில மூன்றரை மணிக்கு கோமியம் பிடிச்சு, பானையில ஊத்தி காய்ச்சினோம்னா, அது கொதிச்சு ஆவியா மேலெழும்பும். அந்த ஆவி குளிர்ந்து நீரா மாறுவதுதான் அர்க். இதைக் குடிச்சா சளியிலிருந்து பல நோய்கள் குணமாகுது. சீவக்காய், ஊச்சக்கொட்டையை ஊறவெச்சு அரைச்சு அதை கோமியத்துல கலந்து காய்ச்சினா ஷாம்பு தயாராகிடும். இதைப் பயன்படுத்தினா இளநரை, முடி உதிர்வு, பொடுகு இருக்காது. நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெயோட நாட்டு மாட்டுப்பால், வேம்பாலம்பட்டை, கார்போகரிசல், செடாமனஸ் சேர்த்து 4 மணி நேரம் காய்ச்சி ஹேர் ஆயில் தயாரிக்கிறேன்.
இது முடியை நல்லா கருப்பாக்கிடும். பஞ்சகாவ்யா சோப் பயன்படுத்தினா தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். முல்தானிமெட்டி, சாணப்பவுடர், நல்லெண்ணெய், வேப்பிலையை காய்ச்சி அச்சில் ஊத்தி காய வெச்சு பஞ்சகாவ்யா சோப் தயாரிக்கிறேன். சாணப்பவுடர், குங்கிலியம், கம்ப்யூட்டர் சாம்பிராணி, நெய், பச்சரிசி மாவை அச்சில் ஊத்தி எடுத்து காய வெச்சு சாம்பிராணி தயாரிக்கிறேன். கொசுவர்த்திகளால் அதன் புகையை சுவாசிக்கும் நமக்கு நிறைய பாதிப்புகள் ஏற்படுது. அதுக்காக மூலிகை கொசு விரட்டி தயாரிக்கிறேன். சாணப் பவுடர், நொச்சி இலை, வேப்பிலை, துளசியை பொடிப்பண்ணி காய்ச்சி அச்சில் ஊத்தி எடுக்கணும்.
மாசு, மருக்கள் போய் முகம் பளபளப்பாகுறதுக்காக ஃபேஷியல் பண்றாங்க. முல்தானிமெட்டி, கோரக்கிழங்கு, பூலாங்கிழங்கு, வசம்பு, பூங்காதியை அரைச்சா ஃபேஷியல் பவுடர் தயாராகிடும். இதைப் பன்னீர் அல்லது பாலில் கலந்து முகத்தில் பூசிக்கலாம். பல்பொடிக்கு மாட்டுச் சாணத்தை எரிச்சு, தைமால், கற்பூரம் கலந்து ஒரு வாரம் உலர வைச்சு பேக் பண்ணிடறேன். இதைப் பயன்படுத்தும்போது பல் சொத்தை, நாற்றம் எதுவும் இருக்காது. பாத்திரம் துலக்க முன்னால ஓடை மண், சாம்பலைப் பயன்படுத்துனாங்க. இப்ப ரசாயனம் கலந்த டிஸ்வாஷ் பவுடர்! இதுக்கு மாற்றா வரட்டியை எரிச்சு சாம்பல் பண்ணி, அதுக்குள்ள இலுப்பைத்தூள், ஆரஞ்சுத் தோலைப் போட்டு அரைச்சு டிஸ்வாஷ் தயாரிக்கிறேன்.
மூட்டுவலி, தசைப்பிடிப்பு வலிகளுக்கு நிவாரணியா மாலிஷ் ஆயில் தயார் பண்றேன். நல்லெண்ணெய், சாணிப்பால், கோமியத்தை காய்ச்சி எடுக்குற எண்ணெயில் தைமால், கற்பூரத்தை கலந்தா அதுதான் மூலிகை மாலிஷ் ஆயில்” என்கிறவர், விற்பனை குறித்துப் பேசுகிறார்...
“அர்க் ஒரு லிட்டர் 205 ரூபாய், ஷாம்பு 110 மில்லி 85 ரூபாய், 60 கிராம் சோப் 30 ரூபாய், 18 சாம்பிராணி, கொசுவர்த்தி துண்டுகள் 25 ரூபாய், 60 கிராம் ஃபேஷியல் பவுடர் 50 ரூபாய், 60 கிராம் பல்பொடி 40 ரூபாய், டிஸ்வாஷ் பவுடர் கிலோ 40 ரூபாய், 100 மில்லி மாலிஷ் ஆயில் 120 ரூபாய்க்கு விற்பனை செய்றேன். வெள்ளக்கோவில், பொள்ளாச்சி, காரைக்கால், பெருந்துறை, ஈரோடுல இயற்கை அங்காடிகளுக்கு விற்பனைக்கு அனுப்புறேன். முத்தூர் சுத்துவட்டாரத்துல பல ஊர்கள்ல இருந்து எங்க தோட்டத்துக்கே வந்து வாங்கிட்டுப் போறாங்க.
நான் விவசாய வேலைகளைக் கவனிக்கிறதோட, இந்தத் தயாரிப்பிலும் ஈடுபடுறதால கூடுதல் வருவாய் கிடைக்குது. ரசாயனங்களே இல்லாம எல்லாப் பொருட்களையும் இயற்கை வழியிலேயே தயாரிக்க முடியும். இயற்கை முறையிலான தயாரிப்புப் பொருட்களை தேடி வர்றவங்க இப்ப அதிகரிச்சுட்டு வர்றாங்க. சிறுதொழில் செய்யணும்னு நினைக்குற யார் வேணும்னாலும் இதை செய்யலாம். வருவாய் கிடைக்குதுங்கிறது மட்டுமில்லாம, எந்தக் கேடும் இல்லாத பொருட்களை மத்தவங்களுக்குக் கொடுக்கிறோம்கிற மனநிறைவும் இருக்கு” என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஈஸ்வரி!.
ஈஸ்வரி! (9965929098)
thanks Dinakaran.

Comments
Post a Comment