1982ல் அப்போதைய பிரதமர் இந்திரா, 'தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை' என்ற அமைப்பை ஏற்படுத்தி முயற்சிகளை எடுத்தார்; அவை சாத்தியப்படவில்லை. வடமாநிலங்களில் ெவள்ளமும், தென்மாநிலங்களில் வறட்சிக் கொடுமையும் தொடர்ந்து கொண்டே இருந்தது.இதைத் தவிர்க்க முடியாமல் திண்டாடிய மத்திய அரசு, புதிய திட்டம் ஒன்றை எதிர்நோக்கியது.
இந்நிலையில் தான் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பொறியாளர் ஏ.சி.காமராஜ், 'கங்கா- குமரி தேசிய நீர்வழிச்சாலை திட்டத்தை' அறிமுகம் செய்தார். இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியே திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன. மாநில நீர்வழிச்சாலைகளை இணைத்துக் கொள்ள இதில் வழி உண்டு.மூன்று கட்டமாக இத்திட்டத்தை செயல்படுத்தலாம்.
அதன் விபரம்:இமயமலை நீர்வழிச்சாலை கடல் மட்டத்தில் இருந்து 500 மீட்டர் உயரம், நீளம் 4500கி.மீ., இது கங்கை, பிரம்மபுத்ரா நதிகளின் அனைத்து கிளைகளையும் ஒன்றிணைக்கும்.
மத்திய நீர்வழிச்சாலைகடல் மட்டத்தில் இருந்து 250 மீட்டர் உயரம். நீளம் 5750 கி.மீ., மகாநதி, நர்மதா, தபதி நதிகளின் அனைத்து கிளைகளையும் இணைக்கும்.தெற்கு நீர்வழிச்சாலைகடல் மட்டத்தில் இருந்து 250 மீட்டர் உயரம். நீளம் 4650கி.மீ., கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் அனைத்து நதிகளையும் இணைக்கும்.இந்த மூன்று அமைப்புகளின் மொத்த நீளம் 15,000 கி.மீ., அகலம் 120 மீட்டர்; ஆழம் 10 மீட்டர். நீரேற்றம் இன்றி சமச்சீர் கால்வாய் மூலம் கங்கையில் இருந்து தாமிரபரணி வரை நதி நீரை இணைக்க முடியும்.
பாதிப்பு இல்லை:நதிப்படுகைகளில் நீரை சேமித்தல், பகிர்ந்தளித்தல் போன்ற பணிகள் நீர்வழிச்சாலையில் நடக்கும். எந்த மாநிலத்தவரின் தண்ணீர் தேவைக்கும் பங்கம் ஏற்படாமல், உபரி நீரை மற்ற இடங்களுக்கு திருப்பிவிட்டு வறட்சிப் பகுதிகளையும் வளம் பெறச் செய்யும்.
திட்டத்தின் பயன்கள்* ெவள்ளச் சேதம் தவிர்க்கப்பட்டு வறட்சிப்பகுதிகளுக்கும் பாசன வசதி.
* ஆண்டு முழுதும் தடையின்றி குடிநீர்.
* உணவு உற்பத்தியில் தன்னிறைவு.
* 25 கோடி பேருக்கு
தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு.
* 15 கோடி ஏக்கர் நிலங்களில் கூடுதலாக பாசன வசதி.
* 60 ஆயிரம் மெகாவாட் நீர் மின் உற்பத்தி.
* நீர்வழிச்சாலையின் இருபுறமும் காடுகள் உருவாகும்.
* எரிபொருட்கள்
இறக்குமதி குறைந்து ஆண்டுக்கு ஒரு
லட்சத்து ௫௦ ஆயிரம் கோடி ரூபாய் செலவு குறையும்.
* அரசுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் வருமானம்.
வறட்சி நீங்கும்
இத்திட்டம் செயலுக்கு வந்தால் ெவள்ளம், வறட்சி கொடுமைகள் நீங்கும். அதற்காக செலவிடப்படும் நிதியை வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கலாம். பிரதமராக வாஜ்பாய் இருந்த போது 'நதிகள் இணைப்பு செயலாக்கக் குழு' அமைக்கப்பட்டு, ௨௧ திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன; இதில் 'கங்கா - குமரி தேசிய நீர்வழிச்சாலை திட்டத்திற்கு' செயலாக்கக்குழு தலைவர் சுரேஷ்பிரபு சான்றளித்தார்.இதில் முடிவு எடுக்கப்பட இருந்த நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, செயலாக்கக்குழு கலைக்கப்பட்டது; பின், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தற்போது, நதிகள் இணைப்பில் பிரதமர் மோடி ஆர்வம் காட்டுகிறார். 'இந்த ஆட்சியிலாவது
நீர்வழிச்சாலை திட்டம் நிறைவேறுமா?' என்ற ஏக்கம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்த இதுவே பொன்னான தருணம்.-
Comments
Post a Comment