தேனீயின் மகரந்தம் உலகம் முழுவதும் இயற்கை மருத்துவத்திற்கு சிறந்த மருந்தாகும்.
மகரந்தம்:
தேனீக்களின் மூலம் கிடைக்கும் மகரந்தமானது இளம் தேனீக்களுக்கு உணவாகவும் பயன்படுகிறது. தேனீக்களின் சேர்க்கையில் உருவாகும் மகரந்தத்தில் மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துகளும் இயற்கையாகவே கிடைக்கிறது. மனிதனை நோயிலிருந்து பாதுகாப்பதில் இயற்கை உணவான தேன் முதலிடம் வகிக்கிறது. தேனீயினால் சேகரிக்கப்படும் மகரந்தபொடியில் சுமார் 40 சதவீதம் புரதங்கள் கிடைக்கிறது.
அதனோடு சேர்ந்து அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், பி காம்ளக்ஸ், உள்ளிட்ட பல ஃபோலிக் அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. விலங்குகளிலிருந்து கிடைக்கும் புரதங்களை விட தேனீயில் இருந்து கிடைக்கும் மகரந்தம் மிக உயர்வானதாகும். மாட்டிறைச்சி, முட்டை, சீஸ்சை விட மிக அதிகமான அமினோ அமிலங்கள் தேனீயின் மகரந்தத்தில் உள்ளது. எளிமையாக உருவாக்கப்பட்ட அமினோ அமிலத்தில் பாதி அளவுகள் புரோட்டீன் உள்ளதால் நமது உடலில் அதை நேரடியாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒரு டீஸ்பூன் மகரந்தத்தை சேகரிக்க ஒரு தேனீயானது மாதம் முழுவதும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் செலவு செய்கிறது. ஆற்றல் மிக்க உணவாக தேனீயின் மகரந்தம் இருக்கிறது என டாக்டர் கேப்ரியல் ஆர்மிடேல் தெரிவித்துள்ளார். தேனீயின் மகரந்தத்தை உட்கொள்வதால் தோல் வியாதிகள், ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க முடியும்...
தினமும் உணவில் தேனீயின் மகரந்தத்தை சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் பயன்கள்
சக்கி அளிக்கிறது.
எண்ணிலடங்காத சத்துக்களை கொண்ட மகரந்தத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் இயற்கை முறையில் எனர்ஜி கிடைப்பதற்கு தேவையான கார்போஹைட்ரேட், புரதம், பி வைட்டமின்கள் போன்றவை கிடைக்கிறது. இதன் மூலம் உடல் உறுதியை அதிகரிக்கச் செய்வதுடன் சோர்வை விரட்டியடித்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.
சரும பாதுகாப்பு
தோலில் ஏற்படக்கூடிய அழற்சி, தோல் தடிப்பு அல்லது படை, தோல் எரிச்சல், ஆகியவற்றை தடுக்க தேவையான அமினோ அமிலங்கள், வைட்டமின்களை தேனீயின் மகரந்தம் கொண்டுள்ளதால்சருமப்பிரச்சனைகள் வராமல் பாதுகாப்பளிக்கிறது.
சுவாச அமைப்பு
தேனீயின் மகரந்தத்தில் அதிக அளவு ஆண்டியாக்ஸிடண்ட்கள் உள்ளதால் நுரையீரல் திசுக்களின் மூலமாக உருவாகும் ஆஸ்துமாவிலிருந்து பாதுகாக்கும் ஆற்றலை கொண்டது..
அலர்ஜி சிகிச்சை
பல்வேறு அலர்ஜிகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை மகரந்தம் குறைக்கிறது. அலர்ஜியின் அறிகுறி தெரிந்தவுடன் மகரந்தத்தை உட்கொண்டு முற்றிலும் இலவசமாக சிகிச்சை பெறலாம் என டாக்டர் லியோ கான்வே, டென்வர் கொலராடோ அறிவித்துள்ளனர். சுவாச நோய், அலர்ஜி என அனைத்திற்கும் எதிராக செயல்பட்டு நம்மை பிரச்சனையிலிருந்து பாதுகாக்கும்.
செரிமான அமைப்பு
தேனீயின் மகரந்தத்தில் ஆரோக்கியம் நிறைந்த வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரோட்டீன்கள் கூடுதலாக உள்ளது, மேலும் இதில் என்சைம்கள் இருப்பதால் செரிமானத்திற்கு மிகவும் உதவி புரிகிறது.
பல ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ள மகரந்த துகள்களை காய்கறி அல்லது பழ சாலட்கள் மீது தூவியோ, கேப்சூலாகவோ எடுத்துக் கொள்ளலாம். தாவரங்களில் இருந்து சேகரிக்கப்படும் மகரந்த துகள்கள் சுத்திகரிக்கப்பட்டு பாக்கெட்களில் அடைத்து பரவலாக விற்பனை செய்யப்படுகிறது. மனிதனின் ஆரோக்கியத்திற்கு உதவும் தேனீக்களை தொந்தரவு செய்யாமல் அவற்றை பாதுகாப்போம்.

thanks dinakaran.,
Comments
Post a Comment