ஆடு வளர்ப்பு கேள்வி? & பதில்-01

·         உயர் அதிகாரி முதல் கேள்வி,

ஆடுகள் யார் வளர்க்கலாம்?
·          
Ashok Kumar ஆக்கப்பூர்வ நடவடிக்கை. என் மனமார்ந்த நன்றி...
·          
உயர் அதிகாரி பதில்,

ஒருங்கிணைந்த குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே சாதிக்க முடியும்.

குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பு இல்லாமல், உங்களால் இந்த தொழிலில் முன்னேற்றம் அடைய முடியாது.


·          
Ashok Kumar ஆடுகளுக்கான காப்பீடு திட்டம் பற்றி விரிவாக்ச் சொல்லுங்கள்..
·          
உயர் அதிகாரி அரசியல் + ஆட்டுப்பண்ணை = 0
·          
உயர் அதிகாரி Mr.Ashok Kumar,
இதுவரை நம் தமிழ் நாட்டில் சரியான முறையில் இயங்கி வரும் ஆடுகளுக்கான காப்பீடு திட்ட நிறுவனங்கள் கிடையாது.
·          
உயர் அதிகாரி இதற்கான முழு முயற்சியை நம்முடைய அரசு எடுக்க வில்லை.
·          
உயர் அதிகாரி ஒரு சில காப்பீடு நிறுவனங்கள் இயங்கி வந்தாலும், அவர்களின் திட்டப்படி லோன் (கடன்) முறையில் அவர்கள் கூறும் நிறுவனங்களிடம் கடன் பெற்று ஆட்டுப்பண்ணை துவங்க வேண்டும்.
·          
உயர் அதிகாரி நாம் கேட்கும் தொகை அவர்களிடம் இருந்து கிடைப்பது கிடையாது.
·          
Parimala Devi போயர் ஆடுகள் தமிழ்நாட்டு வெயிலுக்கு சரிப்பட்டு வருமா.?
·          
உயர் அதிகாரி அவ்வாறு காப்பீடு திட்டத்தில் இணைந்து துவக்கபட்ட பண்ணையில், நாம் மேலும் பண்ணையை விரிவாக்க நினைத்து காப்பீடு பெறாத ஆடுகளை கலப்பு செய்தால், நம்முடைய காப்பீடு ரத்து செய்யப்படும்
·          
உயர் அதிகாரி Parimala Devi, கலப்பின ஆடுகள் எதுவும் நம் மாநில வெப்ப நிலைக்கு ஏற்று அல்ல.
·          
Abdul Rahim sivagangai , ramnad dist ke etra inangal ethu, ange ena theevnapaier seri varum
·          
உயர் அதிகாரி கலப்பின ஆடுகள் வளர்க்கும் முயற்சி வேண்டாம் ஏன்?

புரட்டாசி
ஐப்பசி
கார்த்திகை
மார்கழி
தை
இந்த 5 மாதங்களில் கலப்பின ஆடுகள் குட்டிகள் ஈன்ற பின்னர், அந்த குட்டிகள் குளிர் காரணமாக இறந்து விடும்.
·          
உயர் அதிகாரி Abdul Rahim,கருப்பு வெள்ளை ஆடுகள் மட்டுமே நம் மாநிலத்தில் நன்கு வளரும்.
·          
Thanga Selva Sir nagapattinam areala enna goat valarkalam
·          
உயர் அதிகாரி எந்த புல் வகைகளையும் தின்னும் இனம் தான் கருப்பு நிற வெள்ளை ஆடுகள். ஆனால் BT விதைகளை மட்டும் ஆட்டிற்கு தீவனமாக தரவேண்டாம். அப்படி அதன் மூலம் பெறப்படும் தீவனத்தை ஆடுகள் தின்னக்கூடிய நிலை ஏற்பட்டால், ஆடுகளுக்கு சினை பிடிப்பது சிரமம்.
·          
உயர் அதிகாரி Thanga Selva,sir நம் மாநிலம் முழுவதும் கருப்பு நிற வெள்ளை ஆடுகள் மட்டுமே ஏற்றது.
·          
உயர் அதிகாரி அதிக எடை வரும் என்று நினைத்து, கலப்பின வகை ஆடுகளை வளர்த்து, வெகு விரைவில் பண்ணையை மூடிய கதை உங்கள் கண் முன் கண்டிருப்பீர்கள்.
·          
Thanga Selva Sir thalachery goat nalla erukuma
·          
Mani Poultry Farm ஆடு , கோழி, மாடுஎன்று எதை வேண்டுமென்றாலும் வளருங்கள் ஆனால் விற்பனை நீங்களே நேரடியாக சந்தை படுத்துங்கள் , தரகர்களை வைத்து சந்தை படுத்தினால் லாபம் அவர்களுகே செல்லும்

·          
Mani Poultry Farm முதலில் உள்ளூர் ரக கால்நடைகளையும் உள்ளூர் சந்தைபடுதலையும் தெளிவாக தெரிந்துகொண்டு தொழில்செயுங்கள் கம்ப்யூட்டர் கணக்கு கால்நடை வளர்ப்பில் கைகொடுக்காது
·          
Thanga Selva Sir engal areala katti pottu than valarka mudium varu idea unda sir
·          
உயர் அதிகாரி சேலம் கருப்பு(selam karuppu)
·          
உயர் அதிகாரி கட்டி போட்டு வளர்க்கலாம்Thanga Selva,sir
·          
Thanga Selva Salam karuppu enna goat enku kidaikum sir
·          
உயர் அதிகாரி Thanga Selva, சேலம் ஆடுகள் அதிகமாக தமிழ்நாட்டில் காணப்படுகின்றன இவைகள் அனைத்து வகையான மர வகைகளையும் செடி மற்றும் கொடிகளையும் உண்டு வளரும்.இவை பிற கால்நடைகளை விட அதிக வெப்பத்தையும் வரட்சியான சூழ்நிலைகளையும் தாங்கி விரைவாக வளரக்கூடிய ஆட்டு இனங்களில் ஒன்று இவை தமிழ்நாட்டில் அதிகமாக
1-
ஓமலூர் (சேலம்)
2-
தாரமங்கலம் (சேலம்)
3-
கொளத்தூர் (சேலம்)
4-
பெண்ணாகரம் (தருமபுரி)
5-
பாலக்கோடு (தருமபுரி)
6-
மொரப்பூர் (தருமபுரி)
7-
அரூர்
8-
கிருஷ்ணகிரி
9-
ஈரோடு
10-
இராசிபுரம் (நாமக்கல்)
11-
கரூர்
ஆகிய மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.

இவை பொதுவாக கருமை நிறத்துடன் தோற்றமளிக்கும் இவ்வகை ஆடுகளின் உயரம் சுமார் 80செ.மீ,இவற்றின்
நீளம் 72செ.மீ,இதன் பருமன் பொதுவாக 75செ.மீ ஆகும்.

சேலம் கருப்பு பெட்டை ஆடுகளின் எடை 25-30 வரையும் கிடா ஆடுகளின் எடை சுமார் 30-35 வரை இருக்கும்

·          
·          
உயர் அதிகாரி தமிழக வெப்பநிலைக்கு ஏற்ற ஆடு வகைகள் மொத்தம் 4 தான்.
2தூத்துக்குடி மதன் குமார்.ரா ஆட்டின் தீவன வளர்ப்பில் பரவலாக உள்ள BT ரகங்கள் என்னென்ன.... sir ?
·          
Thanga Selva Sir thank you very much
·          
·          
Sundaravadivel UN Nanbarey na form start pana poran ana ipo paran podama kambi veli potu tharela valakalanu irukanga tharela valartha daily clean panita onum problem varathulanga
·          
Sundaravadivel UN Na thalaseri valakalanu irukanga thalaseri valakalama ila vera breed valakalamanga
·          
உயர் அதிகாரி Sundaravadivel UN,தரையில் வளர்ப்பதை விடச் சிறந்தது பரண் மேல் வளர்ப்பு, ஆனால் எந்த முறையில் வளர்த்தாலும் தினமும் கண்டிப்பாக, கண்டிப்பா, கண்டிப்பாக ஆடுகளின் சாணம் சுத்தம் செய்ய வேண்டும்.
·          
உயர் அதிகாரி Sundaravadivel UN முதல் முறையாக வளர்ப்பில் ஈடுபட்டால் சேலம் கருப்பு ஆடுகளை தேர்வு செய்யுங்கள்
·          
Sundaravadivel UN Daily clean panita oru problem ilelanga
·          
Saravana Kumar I finis work on goat shed ..how can i select the goat? How can i get the loan ? Im in Virdhunagar district sattur
·          
Saravana Kumar Madurai near where can i purchase the salem karupu breed.. This the 1st time in giat breed..
·          
தூத்துக்குடி மதன் குமார்.ரா BT வேண்டாம் என்பதே என்னுடைய நிலைப்பாடும். புதிதாக தீவண உற்பத்தியில் இறங்கும் பொழுது நான் மற்றும் நண்பர்கள் கவனமுடன் இருக்கவே கேட்டேன் Sir.
·          
உயர் அதிகாரி பாரம்பரிய தேன்சிட்டு விதை அங்காடி நமக்கு நல்ல தீவன விதைகள் தருவார்கள்.
·          
உயர் அதிகாரி Saravana Kumar,sir மதுரையில் ஆட்டுச் சந்தை இல்லையா கண்டிப்பாக இருக்கும், முன்னோர்களை கேளுங்கள்,
·          
உயர் அதிகாரி சேலம் கருப்பு ஆடுகளை எல்லா மாவட்டங்களிலும் வாங்கலாம்.
·          
Saravana Kumar Thank u.. Sir.. Paramparia Thencittu seeds i need for thevanam where can i get sir
·          
உயர் அதிகாரி கீரம்பூர் வேல் முருகன்,ஐயாவை தொடர்பு கொள்ளுங்கள் விதை பற்றி விளக்கம் தருவார்Saravana Kumar
·          
உயர் அதிகாரி கன்னி ஆடுகள்(kanni goats), சேலம் கருப்பு ஆட்டிற்கு அடுத்து நம் மாநிலத்தில் வசிக்கும் ஒரு ஆடு இனம்.
·          
உயர் அதிகாரி கருமை நிரமுடனும்,காதுகளில் வெள்ளை அல்லது பழுப்பு நிறத்துடன் காணப்படும்.அதன் அடிவயிறு,வால்பகுதி,தொடைபகுதி மற்றும் கால்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிறமுடன் காணப்படும்.
கருப்பு நிற கோடு உள்ள ஆடுகளை பால் கன்னி என்று கூறுவர்.பழுப்பு நிறம் கொண்ட ஆடுகளை செங்கன்னி
என்று கூறுவர்.இந்த ஆடுகள் உயரமாக மற்றும் திடமாகவும் காணப்படும்.இவை கூட்டமாக நடக்கும் போது
அனைவரின் கவனத்தை ஈர்க்கும்.இவை 2 அல்லது 3 குட்டிகளை ஈனும்.இவ்வகை ஆடுகள் குட்டிகளை மிகவும்
நன்றாக பாதுகாக்கும்.கிடா ஆடுகள் 30 கிலோ எடை இருக்கும்.பெட்டை ஆடுகள் 25-27 கிலோ எடை இருக்கும்.
உயரம் 82 செ.மீ,நீளம் 72 செ.மீ,பருமன் 70 செ.மீ ஆகும்.இவை பொதுவாக
1.
சாத்தூர் (விருதுநகர்)
2.
வேம்பகோட்டை (விருதுநகர்)
3
ராஜபாளையம் (விருதுநகர்)
4.
புதூர் (தூத்துக்குடி)
5.
கயத்தார் (தூத்துக்குடி)
6.
கோவில்பட்டி (தூத்துக்குடி)
7.
குருவி குளம்
8.
சங்கரன்கோவில்
9.
வாசுதேவநல்லூர் ஆகிய இடங்களில் இவ்வகை ஆடுகள் காணப்படுகின்றன.
·          

உயர் அதிகாரி சேலம் கருப்பு, கன்னி ஆடுகள், 3 வதாக நமது வெப்பநிலைக்கு ஏற்ற ஆடு இனம். பள்ளை ஆடு(pallai goats)

மொத்த நான்கு பகுதிகளும் முகநூல் பக்கத்தில் இருந்து  பகிரப்பட்டது., பங்குகொண்ட அனைவருக்கும்  நன்றி. (எண்ணமும் ஆக்கமும்:உயர் அதிகாரி ) 

Comments

  1. தலைச்சேரி ஆடு என்ன விலை ஜயா

    ReplyDelete
  2. தலைச்சேரி ஆடு குட்டி என்ன விலை ஜயா

    நான் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எனக்கு
    உதவுங்கள்

    ReplyDelete

Post a Comment