கால்நடைகளின் நாட்டு மருந்து.,

உயர் அதிகாரி ஆடு
கால்படி அளவு சூபாபுல் (சவண்டல்) விதையை, 24 மணி நேரம் தண்ணியில ஊற வெச்சு, அதுல இருந்து 50 மில்லி தண்ணிய எடுத்து ஆட்டுக்குக் கொடுத்தா போதும். குடல்புழு வெளிய வந்துடும்.

உயர் அதிகாரி ஆடு
காய்ச்சல் வந்த ஆடுகளுக்கு, 3 சின்ன வெங்காயம், 5 மிளகு, ஒரு வெற்றிலையை ஒண்ணா வெச்சு கொடுத்தா... சரியாகிடும்.

உயர் அதிகாரி ஆடு
ஜீரண கோளாறு வந்தா, 200 மில்லி தேங்காய் எண்ணெய் கொடுத்தா சரியாகிடும்.
உயர் அதிகாரி ஆடு
நல்லெண்ணெயும், மஞ்சளும் கலந்து தடவுனா கழலை போயிடும்
உயர் அதிகாரி ஆடு
சீதாப்பழ மர இலை அல்லது சோற்று கற்றாளை ஆடுக மேல தேய்ச்சி விட்டா பேன் எல்லாம் ஓடிடும்.

உயர் அதிகாரி ஆடு

10 மில்லி வீதம் நெய்யை மூணு நாளைக்குக் கொடுத்துட்டு வந்தால் தொண்டை அடைப்பான் சரியாகிடும்.

விவசாயம் சேலம் கொழிஞ்சியை அரைச்சி ஒரு கொய்யாப்பழ அளவுக்குக் கொடுத்தா... விஷக்கடி சரியாகிடும்.
விவசாயம் சேலம் வேப்பிலை, மஞ்சள், துளசி இது மூணையும் சம அளவு எடுத்து அரைச்சி, நெல்லிக்காய் அளவு கொடுத்தா... வாய்ப்புண் ஆறிடும்.

விவசாயம் சேலம் ஆடுகளுக்கு வர்ற பெரிய பிரச்னை கழிச்சல். இதுக்கு ஐந்து கத்திரிக்காயைச் சுட்டு தின்னக் கொடுத்தா போதும். கழிசல் போயிடும்.
விவசாயம் சேலம் கண்டங்கத்திரிப் பழத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, வெள்ளாட்டுக் கோமியத்துல 24 மணி நேரம் ஊறவெச்சு, சாறு எடுத்து, மூணு சொட்டு மூக்குல விட்டா மூக்கடைப்பு, சளி எல்லாம் சரியாகிடும்.
உயர் அதிகாரி கோமாரி நோய் மருந்து

ஜீரகம், வெந்தயம்,மிளகு மூன்றும் இரண்டிரண்டு ஸ்பூன் எடுத்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து பின் மஞ்சள் 2 ஸ்பூன் , பூண்டு 4 பல்லு, நாட்டு சர்க்கரை 100 கிராம், தேங்காய் பூ 1 மூடி அத்தனையையும் அரைத்து சட்டினியாக்கி ஒரு வேளை க்கு ஊட்டிவிடவும். இப்படி 3 நாள் 3 வேளை செய்யின் பசு தெளியும்.

மேலும் ஒரு லிட்டர் நல்லண்ணையில் பூண்டு, மஞ்சள், வேப்பிலை,துளசி, மருதாணி, குப்பைமேனி இவைகளை சேர் ததுக் காய்ச்சி ஆரவைத்து நான்கு கால்களிலும் தடவவும்.

Comments