Skip to main content

பியூச்சர் குழுமத்துடன் கூட்டு சேர்ந்தது பதஞ்சலி

பியூச்சர் குழுமம் பாபா ராம்தேவ் தொடங்கிய பதஞ்சலி (PATANJALI) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தது. இதன் மூலம் பியூச்சர் குழுமத்தின் கடைகள் மூலமாக பதஞ்சலி நிறுவனத்தின் ஆயூர்வேத பொருட்களை விற்பனை செய்ய இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.இரு நிறுவனங்களும் கூட்டாக இணைந்து நீண்ட கால அடிப் படையில் புதிய பிராண்டுகளை உருவாக்கத் திட்டமிட்டிருக்கின் றன.

எங்களது விற்பனையகங்களின் மூலம் இப்போதைக்கு மாதத்தில் 30 கோடி ரூபாய் முதல் 40 கோடி ரூபாய் வரை பதஞ்சலி நிறுவன பொருட்களின் விற்பனை இருக்கும். கூடிய விரைவில் இதனை 80 கோடி ரூபாயாக உயர்த்த விற்பனை இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று பியூச்சர் குழுமத்தின் தலைவர் கிஷோர் பியானி தெரிவித்தார்.
புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் யோகா குரு பாபா ராம்தேவ் (வலது) மற்றும் பியூச்சர் குழுமத்தின் தலைவர் கிஷோர் பியானி.
புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் யோகா குரு பாபா ராம்தேவ் (வலது) மற்றும் பியூச்சர் குழுமத்தின் தலைவர் கிஷோர் பியானி.


எங்களது கடைகளின் மூலம் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் விற்பனை ரூ.1,300 கோடி முதல் 1,400 கோடி ரூபாய் வரை நடக்கிறது. அதனால் பதஞ்சலி பொருட்களின் விற்பனை நாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்கும். பியூச்சர் குழுமத்தின் வருமானம் வளர்ச்சி தொடர்ந்து 20 முதல் 25 சதவீத அளவில் இருக்கும். நடப்பு நிதி ஆண்டில் குழுமத்தின் வருமானம் ரூ.22,000 கோடி முதல் 23,000 கோடி ரூபாய் வரை இருக்கும்.
தவிர பதஞ்சலி குழுமத்துடன் இணைந்து பொருள்களை உற்பத்தி செய்வது குறித்து பரிசீலனை செய்துவருகிறோம் என்றார்.
பாபா ராம்தேவ் கூறும் போது, பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டி போடும் விதமாக உள்நாட்டு பொருட்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறோம். எங்களுடைய நூடுல்ஸ் வரும் 15-ம் தேதி வெளியாக இருக்கிறது. இம்மாத இறுதியில் இந்தியாவின் அனைத்து பகுதியிலும் கிடைக்கும்.
நூடுல்ஸ் தவிர, பாஸ்தா, ஓட்ஸ், குளிர்பானங்கள் உள்ளிட்ட வற்றையும் விரைவில் அறிமுகப் படுத்தும் திட்டத்தில் இருக்கிறோம். நடப்பு நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டத் திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.
பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்களை விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் செய்வதற்கு ஹரித்துவாரில் அலுவலகம் ஒன்றை பியூச்சர் குழுமம் திறந்திருக்கிறது.

Comments