தமிழகத்தில் தேனீ வளர்ப்பை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் தொன்று தொட்டு ஈடுபட்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் தேனீ வளர்ப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இவ்வாரியத்தை மைய அரசு தெரிவு செய்திருந்தது. தமிழ்நாடு 1991-1992 ஆம் ஆண்டில் தேன் உற்பத்தியில் முதலிடம் வகித்தது. அதன் பின்னர் தேனீக் கூட்டங்களைத் தாக்கிய ஒரு வைரஸ் நோயால் தேனீ வளர்ப்பு பெரிதும் நலிவுற்றது. குமரி மாவட்டத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்ட 1000 தேனீ வளர்ப்பாளர்களுக்கு பத்து இலட்சம் ரூபாயை இவ்வாரியம் இழப்புத் தொகையாக வழங்கியது.
- குறிப்பாக குமரி மாவட்டத்தில் தேனீ வளர்ப்பு விரிவாக்கத்தில் தேனீ வயலர்கள் முக்கிய பங்கு ஆற்றுகின்றனர்
- பேட்டை மற்றும் திருப்பூரில் இவ்வாரியத்தின் கீழ் செயல்படும் கொல்லு பட்டறைகளில் செய்யப்பட்டு தேனீ வளர்ப்பவர்களுக்கு விற்கப்படுகின்றன
- மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள தேனீப் பெட்டிகள் மற்றும் தேனீ வளர்ப்பு சாதனங்களை இவ்வாரியம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இலவசமாக பழங்குடியினருக்கு வழங்கியுள்ளது
- அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளுடன் இணைந்து தேனீ வளர்ப்புக்காக நிதி உதவி செய்கின்றது
- தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கங்கள் துவங்குவதற்கு இவ்வாரியம் நிதி உதவி அளிக்கின்றது. மேலும் இச்சங்க உறுப்பினர்கள் உற்பத்தி செய்த தேனை விற்பனை செய்வதிலும் உதவுகின்றது
- அம்சி என்ற இடத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள தேன் பதனிடும் தொழிற்சாலை குறைந்த அளவு நீர் உள்ள அதிகத் தரமான தேன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது
- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து அறிமுக தேனீ வளர்ப்பு பயிற்சிகள் மற்றும் தேன் காட்சி நடத்தி தேனீ வளர்ப்புக்கு உதவியுள்ளது
- தேன் பற்றி மக்களிடம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேன் விற்பனையை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய நகரங்களில் தேன் திருவிழா நடக்கின்றது
- சென்னையில் இவ்வாரியத்தின் தலைமையகத்தில் உள்ள தேன் ஆய்வு நிலையம் தேனின் தரத்தை ஆய்வு செய்து அறிவதில் பெரும் பங்கு வகிக்கின்றது
- கடந்த ஐந்து ஆண்டுகளில் (1997-2002) 2.48 கோடி ரூபாய் மதிப்புள்ள தேனை தேனீ வளர்ப்பவர்களிடமிருந்து வாங்கி 3.43 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது
- இவ்வாரியத்தின் கீழ் செயல்படும் மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் இந்தியாவிலுள்ள மிகப் பெரிய தேனீ வளர்ப்போர் சங்கங்களில் ஒன்றாகும்.
Comments
Post a Comment