வியட்நாமில் டாங் டாவோ என்ற அரிய வகை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இவை மிகவும் பிரபலமானவை. மிக முக்கியமான நிகழ்ச்சிகளிலும் வசதியானவர்களின் இல்லங்களில் மட்டுமே இந்தக் கோழிகளை வைத்து உணவு தயாரிக்கிறார்கள். சாதாரண கோழிகளை விட உருவத்தில் இவை மிகவும் பெரியவை.இவற்றின் கால்கள் தடிமனாகவும் சதை முடிச்சுகளுடனும் காணப்படுகின்றன. பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தாலும்
டாங் நய் மாகாணத்தில் வு டுவான் என்பவரின் பண்ணையில் 400 ஜோடி கோழிகள் இருக்கின்றன. தினமும் நகரில் உள்ள முக்கிய உணவு விடுதிகளுக்காக 12 கோழிகள் இங்கிருந்து அனுப்பப்படுகின்றன. டாங் டாவோ கோழிகளுக்குத் தேவை இருக்கும் அளவுக்கு உற்பத்தி இல்லை. நல்ல வருமானம் கிடைக்கும் தொழில் என்றாலும், இந்தக் கோழிகளைப் பராமரிப்பது கடினம் என்பதால் மக்கள் வளர்க்க விரும்புவதில்லை.
வித்தியாசமான இனம்தான் டாங் டாவோ…
Comments
Post a Comment