கடலோர பகுதிகளில் உள்ள சீதோஷ்ண நிலைக்கேற்ப, கிளாடியோலஸ் மலர் சாகுபடி குறித்து, சிறப்புப் பயிற்சி அளிக்கிறார், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை வேளாண் விரிவாக்கத் துறை உதவி பேராசிரியர் தி. ராஜ் ப்ரவீண்.வெங்காய குடும்பத்தைச் சேர்ந்த இப்பூக்கள், வெள்ளை, சிவப்பு, மஞ்சள், ரோஜா... என வண்ணங்களில் ஒற்றைத் தண் டில் கொத்து கொத்தாக மலர்கின்றன. இவற்றை பசுமை குடிலில் வளர்ப்பது சற்றே செலவு பிடிக்கும் விஷயம். சாதாரண விவசாய முறையில் வளர்க்க
வேண்டுமெனில், சீதோஷ்ண நிலை ஓரளவு சரியாக இருக்க வேண்டும். 28 டிகிரி வெப்பநிலை முதல் 40 டிகிரி வரை தாங்கும். ஏற்கனவே மல்லிகை மற்றும் பிற மலர்கள் சாகுபடி செய்யும் இடத்தில், இவற்றை சாகுபடி செய்தால் குறுகிய காலத்தில் லாபம் பெறலாம்.இவற்றின் விதைகள் பெரிய வெங்காயம் போன்றிருக்கும். 90வது நாளில் அறுவடைக்கு வந்து விடும். செடிக்கு ஒருதண்டில் எட்டு முதல் 13 பூக்கள் கொத்தாக இருக்கும். அடிப்பகுதியில் முதல் பூ மலரும் போது வெட்டி எடுத்து விட வேண்டும். இவை 10 முதல் 15 நாட்கள் வரை வாடாமல் இருக்கும்.நவ., முதல் ஜன., வரை சீதோஷ்ணம் நன்றாக இருப்பதால், பூ உற்பத்தியும் அதிகமாக இருக்கும். ஊடுபயிராக நூல்கோல் நடலாம். இவற்றுக்கு சந்தையில் மதிப்பு அதிகம். ஒற்றை கொத்துப் பூ எட்டு முதல் 15 வரை ரூபாய் வரை விற்பனையாகும். ஜன., முதல் திருவிழாக்கள் அதிகம் இருப்பதால், இவற்றை வாங்குவோரும் அதிகம். பிப்., ல் "காதல் பூக்கள்' என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.பயிற்சி பெற விரும்புபவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். 94863 85423.எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை.
நன்றி தினமலர்

Comments
Post a Comment