மக்காச்சோளம் சாகுபடியில் மகசூல் அதிகம் பெற!

நிலத்தை நன்றாக 4 முதல் 5 உழவுகள் வரை போட்டு கடேசி உழவில் தொழுவுரம் அல்லது மண்புழு உரம் 2 டன் போட்டு உழவு செய்யனும்
க்காச்சோளம் விதைக்க ஆடிஇ புரட்டாசி மற்றும் தை பட்டம் சிறந்தது பூச்சி நோய் தாக்காது மகசூல் அதிகரிக்கும் எனவே இப்பட்டத்தில் பயிர் நடவு செய்து அதிக மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

மக்காச்சோளம் நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு விதையளவு 8 கிலோ தேவைப்படும்
இடைவெளி வரிசைக்கு வரிசை 2 அடியும் செடிக்கு செடி ஒரு அடியும் இடைவெளி விடனும். பயிர் எண்ணிக்கை பராமரிப்பது மிக மிக முக்கியம்.
நுண்ணூட்டம் பற்றாக்குறை போக்க பயிர் நடவு செய்த 5வது நாள் ஒரு ஏக்கருக்கு சிறு தானிய நுண்ணுரம் 5 கிலோவை 25 கிலோ மணலுடன் கலந்து தூவிவிட வேண்டும்.
மக்காச்சோளம் நடவு செய்து 30ஆம் நாள் களையை வெட்டி ஒரு ஏக்கருக்கு 100 கிலோ மண்புழு எருவில் 2 கிலோ அசோஸ்பைரில்லம்இ 2 கிலோ பாஸ்போ பாக்டீரியாஇ 2 கிலோ பொட்டாஷ் பாக்டீரியாவை மண்புழு எருவில் கொட்டி சிறிது தண்ணீர் தெளித்து ஒரு வாரம் வரை மூடிவைத்து பிறகு எடுத்து வைத்து மண் அணைக்க வேண்டும். இவ்வாறு செய்தாள் சோளத்தின் எடை அதிகரிக்கும் நல்ல நிறத்துடனும் சொட்டைக்கருதுகள் வராமலும் இருக்கும் ஏதாவது பூச்சி நோய் தென்பட்டால் தாவர இலைச்சாறு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி என்ற விகிதத்தில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
வரப்பு பயிராக ஆமணக்கு இ தட்டப்பயறு போன்றவை சாகுபடி செய்து பூச்சி தாக்குதலை குறைக்கலாம்
நான்கு தண்ணீர் விட்டால் போதுமானது ஒருமுறை உரம் போடனும் என்று நினைத்தால் 100 லிட்டர் தண்ணீருக்கு 5 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து தண்ணீர் பாயும் போது ஊற்றி விடலாம் அல்லது கேனில் குழாய் வைத்து திருகி விடலாம் மேலும் விவரங்கள் தெரிய L3ftn.com என்ற வலைதளத்தை பார்க்கவும்

Comments