கோழி மற்றும் ஆடு மாடு வளர்ப்பில் ஈடுபடுவர்கள் கவனத்திற்க்கு.

பொருமையுடன் நிதானமாக நல்ல ரகங்களை தேர்வு செய்து வளர்ப்பிற்க்கு பயன்படுத்துங்கள்
நாம் வளர்ப்பது கோழி அல்லது ஆடு அது என்னவாக இருந்தாலும் சரி அவற்றுடன் அன்பாக பழகிப்பாருங்கள் அது நிச்சியமாக உங்களுக்கு நல்ல இலாபத்தினை கொடுப்பது மட்டுமல்லாது உங்களுக்கு நல்ல மனஅமைதியையும் கொடுக்கும்

நீங்கள் இவைகளுடன் பாசமாக நடந்துகொள்ளும் போது ஒரு குருப்பிட்ட நாளுக்கு பிறகு உங்களுடைய கட்டளைகளை ஏற்று அதன்படி புரிந்து நடக்கும்
கோழிகள் வளர்ப்பவர்கள் தங்களுடைய கோழிகளுக்கு உணவு கொடுக்கும் போது சிலர் இரையை அதாவது கம்பையோ சோளத்தையோ தரையில் போட்டு விடுகிறார்கள் அந்த இரையை கோழிகள் கொத்தித்திண்ணும் போது மிகவும் சிரம்மப்படும் எனெனில் இன்றைய நிலையில் நிறைய பேர் வீட்டு வாசல் சிமென்ட் வாசலாக உள்ளது அல்லது நன்றாக இறுகி உள்ளபடி இருக்கும் இப்படிப்பட்ட கெட்டியான மேல்பரப்பில் இரையை ஒவ்வொன்றாக கொத்தித்திங்கும் போது அது அதன் மூக்கில் வலியை ஏற்படுத்தும் எனவே சில கோழிகள் பாதி வயிற்றிலேயே இரையை திங்காமல் சென்றுவிடும்
இரை வைப்பதற்க்கு சாப்பாடு தட்டு போன்ற பாத்திரத்தினை பயன்படுத்தவும்
அதே போல் சிலர் கோழிகளுக்கும் தண்ணீர் வைப்பதே இல்லை அது பாவம் தண்ணீரைத்தேடி தொட்டியாக ஏறி தண்ணீர் குடிக்கும் அப்படி பெரிய கோழிகள் தண்ணீர் குடிப்பதைப் பார்த்து சிறிய குஞ்சுகள் அந்த முயற்சியின் போது தவருதலாக பெரிய தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்துவிடுகிறது அப்படியே சிலர் தண்ணீர் வைத்தாலும் சுத்தமாக இருக்காது அல்லது தண்ணீரை ஒரு முறை வைத்தால் அந்த தண்ணீர் தீரும் வரை ஒரு வாரம் ஆனாலும் தண்ணீரை மாற்றுவதில்லை
நன்றாக யோசனை செய்து பாருங்கள் நாம் எத்தனை எத்தனை பிரியமாக வளர்க்க வாங்கி வந்தது இந்த உயிரனம் நல்ல தண்ணீரை அதற்கு கொடுங்கள் அப்படி செய்தால் தான் சில சந்தர்பவாத நோய்கள் நம்முடைய வீட்டு விலங்குகளை தாக்காமல் இருக்கும்
தற்போது நம்ம ஊரில் பரவலாக மழை பெயது வருகிறது என்பதால் உங்களுடைய வீட்டு விலங்குகளை மழையில் நினைய விடாமல் அதற்காக உங்களால் முடிந்தவகையில் ஒரு சிறிய அளவிலாவது கூடாரம் அமைத்து வைத்து வளர்த்தால் நன்றாக இருக்கும்
அதே போல் நாய் நரி போன்ற மற்ற விலங்களிடமிருந்து உங்கள் ஆடு கோழியை பாதுகாப்பான முறையில் வளர்ப்பது உங்கள் கடமை
பனி காலங்களில் கோழி குஞ்சுகளையும் ஆட்டுக் குட்டிகளையும் வெட்ட வெழியில் அடைக்காமல் பனியின் தாக்கம் குறைந்த பகுதியில் அதாவது வெதுவெதுப்பான அறையில் இறவு நேரத்தில் அடைத்து வைத்து வளர்த்தால் நல்ல ஆரோக்கியமாக இவைகள் வளரும்

நல்லது செய்வோம் நல்லதே நடக்கும் நமக்கு
நீங்கள் அன்பாக பழகிப் பாருங்கள் தெரியும் நாம் காட்டிய அன்பை விட வீட்டு விலங்குகளோ பறவைகளோ காட்டும் விசுவாசம் அதிகமென்று
பிரகாஷ் integrated farm
Kovilur
Dindigul
9894037539

Comments