நல்ல பால் தரும் ‪‎நாட்டு‬ ‪மாடுகள்‬.

பழங்காலத்தில் காடுகளில் இயற்கையாக மேய்ந்து, திரிந்து இனப்பெருக்கம் செய்து, தன்னிச்சையாய் வாழ்ந்துகொண்டிருந்த காட்டின விலங்கான ‘காட்டுமாடை’ நமது மூதாதையர் வீட்டு பிராணிகளாக்கினர். இந்த காட்டுமாட்டில் காளை மாட்டை ஏர் உழவும், ஏற்றம் இறைக்கவும், வண்டி மாடாகவும் பழக்கி பயன்படுத்தினர். பெண் பசுக்களை சானத்திற்காகவும் சிறிதளவு பாலுக்காகவும் வளர்த்தனர். பெண் பசுக்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத காலம். நாட்டுப் பசுக்களையும், வேலைக்கு தேவையில்லாத இதர காளை மாடுகளையும் மழைக்காலங்களில், விவசாய நிலங்களில் சாகுபடி செய்யும் பருவத்தில் மலைக்கு ஓட்டிச் சென்று மேய்ச்சலுக்கு விடும் பழக்கம் தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்துவரும் பழக்கம். மலையில் சில மாதங்கள் மேய்ந்துவிட்டு விவசாய நிலத்தில் வெள்ளாமை முடிந்தபின்னர் கீழே கொண்டு வருவர்.


பயிர் செய்யப்படாத காலங்களில் விவசாய நிலத்தில் இந்த மலைமாடுகள் அல்லது கிடை மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவர். மலை மாடுகள் மூலம் கிடை அமர்த்தி விவசாய நிலத்திற்கு எரு அளிக்கப்படுகின்றது. மலையில் மேயும் சமயம் மலைச்சரிவுகளில் ஏறி, இறங்கி பழக்கப்பட்ட உடல்கூறு சற்று எடை குறைவாக அதே சமயம் காட்டு மிருகங்களை எதிர்கொள்ளும் துணிச்சலும் திறனும் பெற்று விறுவிறுப்பாக எதிரியை நோக்கி பாயும் திறனும், மோப்பம் பிடிக்கும் திறனும், வலுவான உடல்கட்டும் உள்ளதால் ஜல்லிக்கட்டு மாட்டிற்காக பழக்கப்படுத்தவும், ரேக்ளா வண்டி பந்தயத்திற்கும் மலைமாடுகளின் காளங்கன்றுகளே தேர்வு செய்யப்படுகின்றன.
மலைமாடுகள் வெயில், மழை, பனி போன்ற பருவ சூழலுக்கு தாக்குபிடித்து மேற்கூரையின்றி வெட்டவெளியில் வாழ்ந்துவரும் தன்மை உடையது. காணை நோய், குந்துக் காய்ச்சல் போன்றவை பெரும்பாலும் வருவதில்லை. இயற்கையாக மேய்ந்து வருவதால் மலைமாடுகளின் பால் ருசிமிக்கதாக கொழுப்பு சத்துடன் திகழும். இதனை குழந்தைகளுக்கு தரும் சமயம் நல்ல உடல் வளர்ச்சி கிட்டும்.

இந்த மலைமாடுகளின் பாலை காய்ச்சும் போதே நல்ல மணம் தெரியும். கூடுதலான அளவு வெண்ணெய்யும் கிடைக்கும்.
கூடுதல் பால் உற்பத்தி எனும் ஒரே காரணத்திற்காக மேல்நாடுகளில் இருந்து ஜெர்ஸி, ஹோல்ஸ்டைன், ப்ரீசியன், ரெட்டேன் எனும் கால்நடை இனங்கள் வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்டது.
வெண்மைப் புரட்சி என பெயர் சூட்டப்பட்டு அபரிதமான வரவேற்பை பெறவைத்துவிட்டது.
நமது இந்திய இன மாடுகள் Bos Indicus எனும் அறிவியல் பெயருடன் தனி உயிரியல் குடும்பத்தை சேர்ந்தவை. இவை முற்றிலும் நம் பாரத தேசத்திற்கு மட்டும் உரிய இனம். இந்த இன மாடுகளுக்கு முன்கால் சேரும் முதுகிற்கு மேல் ‘திமில்’ என அழைக்கப்படும் கம்பீரமான மேடு காணப்படும். வாயிலிருந்து கீழே முன்னங்கால் இணைப்புவரை தோல் மடிப்பு மடிப்பாக தொங்கி காணப்படும். நம் நாட்டு இனங்கள் நல்ல வெயில் அடிக்கும் மண்டலங்களில் வளர்க்கப்படுவதால் இதற்கு வியர்வை சுரப்பிகள் உண்டு. தமிழகத்தை பூர்விகமாக கொண்ட நாட்டு பசுக்கள் அதிகபட்சம் 3 லிட்டர் வரையிலும் பால் கொடுக்கும். நம் நாட்டின் கால்நடைகளுக்கு பொதுவாகவே நோய் எதிர்ப்பு திறன் மிகவும் அதிகம். அத்துடன் இந்த நாட்டுப் பசு இனங்களுக்கான தண்ணீர் தேவையும், தீவன தேவையும் குறைவே. இதற்கு குறைந்த பட்ச பராமரிப்பே போதுமானது. நல்ல பசுக்கள் 10 முதல் 12 ஈத்துவரையிலும் கன்றுகள் ஈனும். சுமார் 4 மெட்ரிக் டன் வரை வண்டி பாரம் இழுக்கும். நாட்டு காளைகள் கன்றிலேயே சுமார் 20,000 ரூபாய் வரையில் விலை போகும். கடுமையான வறட்சி காலத்தில் மாடுகள் இளைத்து மேனி விட்டாலும் விரைவில் தேறிவிடும். இந்த நாட்டுப் பசுவின் சாணத்தில் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் நிறைந்து காணப்படுவதால் இந்த எரு மண்வளத்தை பெருக்கி உயிர் சூழலை காக்கும் என இயற்கை வேளாண் வல்லுநர்கள் கூறுகின்றனர். நாட்டுப் பசுவின் சாணம், கோமியம், பால், தயிர், வெண்ணெய் போன்றவைகளைப் பயன்படுத்தி தயார் செய்யப்படும் பஞ்சகாவ்யம் சிறப்பானது. சிறந்த கோமியம் சாணத்திலிருந்து விபூதி முதல் அர்க் வரை அநேகவிதமான பொருட்கள் செய்யலாம். நாட்டுப் பசுமாடுகள் மஹாலட்சுமி வாசம் செய்யும் இடமென ஆன்மிக நம்பிக்கை இருக்கின்றது. இந்த வகை நாட்டுப்பசுக்கள் கொடுக்கும் பால் A2 பால் என அழைக்கப்படுகின்றது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல்வேறுவிதமான நாட்டு மாடுகள் உள்ளன. காங்கேயம் மாடு, பர்கூர் செம்மரை மாடு, பாலமலை மாடு, ஆலம்பாடி மாடு, பெரம்பலூர் மொட்டை மாடு, மணப்பாறை மாடு, தொண்டைப் பசு, புங்கனூர் குட்டை என பல்வேறு இனங்கள் உண்டு. மயிலை (சாம்பல் நிறம்) காரி (கருப்பு நிறம்) வெள்ளை, செவலை (மர நிறம்) என பல நிறங்கள் மாடுகளுக்கு உண்டு.

மாடுகளின் நிறமானது மாடு மேயும் புல்வெளிப் பகுதி, தண்ணீர் உள்ள பகுதி போன்றவற்றை அடிப்படையாக கொண்டு பல்வேறு விதங்களில் காணப்படும். பொதுவாக நாட்டு மாடுகள் 15-20 ஆண்டுகள் வரை உயிர் வாழும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் கன்று ஈனும். கன்றுக் குட்டி ஈனும் சமயம் மழைக்காலமாதலால் புற்கள் வளர்ந்து மேய்ச்சலுக்கு அனுகூலமான சூழல் இருக்கும்.
வட இந்திய வகை மாடுகளும் அவைகள் கிடைக்கும் இடங்களும் பகுதிகளும்.
இனம்
இடம்
இர்
குஜராத், ராஜஸ்தான்
சாஹிவால்
பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம்
சிவப்பு சிந்தி
ஆந்திரா

வறட்சி தாங்கும் இனம்
இடம்

மால்வி
ராஜஸ்தான், மத்திய பிரதேசம்
நாகேரி
தில்லி, ஹரியானா, உத்திரப் பிரதேசம்
ஹலிக்கார்

கர்நாடகா
ஹரியானா
ஹரியானா
ஓங்கோல்
ஆந்திரா
காங்கிரேஜ்
குஜராத்
தார்ப்பார்க்கர்
குஜராத்

இந்த வட இந்திய பசுக்களும், சீமை மாடுகள் போன்றே அதிக பால் கொடுக்கும் திறனுடையவை என அறிந்த தமிழக பால் உற்பத்தியாளர்கள் வட மாநிலங்களில் இருந்து அத்தகைய மாடுகளை வாங்கி
வளர்க்கின்றனர். குஜராத், பஞ்சாப், ஹரியானா பகுதியில் இருக்கும் சாஹிவால் ரக மாடு சாதாரணமாக வெளியில் மேய்ச்சலுக்குச் சென்று வந்து 15 லிட்டர் முதல் அதிக பட்சம் 20 லிட்டர் வரையிலும்
பால் கறக்கின்றது. சாஹிவால் இன மாடுகள் சீமை மாடுகளுக்கு இணையாக அதிக பால் உற்பத்தியைக் கொடுக்கக் கூடியது. ஒரு ஈத்தில் சுமார் 10 மாதம் 3000 கிலோ முதல் 6000 கிலோ வரையிலும்
பால் கொடுக்கும் திறனுடையது. 4 முதல் 4.5 வரை கொழுப்பு உள்ள பால் கொடுக்கும். கடும் வெப்பம், கடும் மழை, கடும் குளிர் என பல்வேறு பருவகால நிலையையும் தாங்கும் திறனுடையது.
பசுவை நம்மை அண்டி வாழும் ஒரு வீட்டு விலங்காகத்தான் நம் தமிழர்கள் கருதி வந்தனர். ஆனால் மேல் நாட்டு பசுக்களின் வரவால் பசுக்கள் பால் கொடுக்கும் இயந்திரம் என்பதாக கருதப்பட்டு வரும் நிலமை ஏற்பட்டது. ஜெர்சி, H F, ரெட்டேனிஸ் போன்ற மேலை நாட்டு பசுக்கள் Bas tauris வகை, இவைகள் கொடுக்கும் பால் A1 வகை பால். குளிர் நாடுகளில் வாழப்பழகிய இந்த இனங்களுக்கு தோலில் வியர்வை சுரப்பிகள் இல்லை. மிகப்பெரிய உருவ அமைப்பை உடைய இனம் என்பதால் இதன் பராமரிப்பிற்காக அதிக தண்ணீர், அதிக தீவனம் கொடுக்க வேண்டும். வழக்கமாக ஒரு சீமை பசுவானது மூன்று நாட்டுப் பசுக்களுக்கான தீவனத்தை எடுத்துக் கொள்ளும். இந்த வகை பசுக்கள் வறட்சி காலத்தில் உடல் இளைத்துப் போனால் மீண்டும் உடலை தேற்ரி பழைய நிலைக்குக் கொண்டு வருவது கடினமான காரியம். அத்துடன் இவ்வகை கால்நடைகள் எளிதில் நோய் வாய்ப்படும். ஏனெனில் இந்தற்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு. இவ்வகை பசுக்கள் இளம் வயதில் அதிக பாலையும் பின்னர் வரும் ஈத்துகளில் பாலின் அலவு குறைந்தும் கொடுக்கக் கூடிய இயல்பை உடையது. இதன் காளைக் கன்றுகள் விவசாய வேலைக்குப் பயன்படாது. அதனால் மேலை நாட்டு காளைக் கன்றுகளுக்கு விலையில்லாததால் ஆண் கன்று பிறந்ததும் தாய் பசுவிடமிருந்து பிரிக்கப்பட்டு இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டு விடுகின்றது.

ஆனாலும் அதிக பால் உற்பத்தி என்னும் ஒற்றை நோக்கத்தை மட்டும் உடைய பால் பண்ணையாளர்கள் சீமை பசுக்களை மட்டுமே வளர்த்து அந்த பால் மட்டுமே விற்பனைக்கு செல்வதால் நம்மில் பெரும்பான்மையினர் உபயோகிப்பது A1 ரக சீமை பசுமாட்டு பால்களும், பால் பொருட்கள் மட்டுமே ஆனால் பிரேசில் உட்பட சில நாடுகளில் இந்தியாவிலிருந்து சாஹிவால் போன்ற அதிக பால் கொடுக்கும் இனங்களை இறக்குமதி செய்து பராமரித்து வருகின்றனர். நமது நாட்டின் சிறப்பையும், வளத்தையும் நமக்க்கு அடுத்தவர்கள் சொன்னால் தான் புரியும்.
பசுக்கை காமதேனு என்பர். காமதேனு என்பது அனைத்தையும் தரவல்ல தெய்வம். அதுபோல நாட்டின பசுக்களிலிருந்து பல்வேறு பொருட்கள் கிடைக்கின்றது. நம்முடைய ஆன்மிக வாழ்வில் பசு பின்னிப் பிணைந்து பிரிக்க இயலாத அங்கமாகிவிட்டது. வாழ்வில் தீராத பாவச் செயல்களை செய்தவர்கள் கூட கோதானம், கோ சேவை செய்து தன் பாவங்களை போக்கிக் கொள்கின்றன. ஆகவே தான் தமிழர்கள் ஆநிரையை செல்வமாகக் கருதினர். பண்டைய படையெடுப்புகளில் ஆநிரை கவர்ந்து செல்லுதலும் வெற்றியின் அடையாளமாக கருதப்பட்டது. நாட்டுப் பசுக்களின் சாணத்தை நிழலில் காய வைத்து எருவாக்கி அதனை முறையாக பஸ்பமாக்கி கிடைப்பது தான் திருநீறு. ஆனால் இன்று முகப்பூச்சு பொடி போன்று வெண்மையாக, வெள்ளை வெளேர் என கிடைப்பதெல்ல்லாம் திருநீறு அல்ல. காகித ஆலை கழிவுகளை சில ரசாயனங்களைச் சேர்த்து வெளுப்பூட்டி மிகவும் நைசாக அரைத்து விபூதி என்ற பெயரில் விற்பனை செய்கின்றனர். இத்தகைய விபூதிகளை நெற்றியில் இடுவதால் விபூதியின் மருத்துவ குணம் நமக்குக் கிடைப்பதில்லை. சிலர் விபூதியை வாய்க்லும் போடும் தவறான பழக்கத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். இது போன்ற ரசாயன விபூதிகளை உட்கொண்டால் நோய் தீராது.
புதிய நோய்தான் வரும்.

நாட்டுப் பசுவின் சிறுநீரான கோமியத்தைக் கொண்டு கோமூத்திர அர்க், கோமிய பசை, கோ ரத்ன குலம் பார்த்து பெண் எடுப்பதும் சுழி பார்த்து மாடு வாங்குவதும் நம்பிக்கை. மாடுகள் வாங்கும் போது குறிப்பாக நாட்டு மாடுகள் வாங்கும்போது சுழிகள் நன்றாக அமைந்திருந்தால் எல்லாம் நன்றாக இருக்குமென்ற நம்பிக்கை காலம் காலமாக ஊறிப்போனதொன்று. உழவர்களுக்கு அவர்தம் தொழிலுக்கு அச்சாணியாக கருதுவது காளை மாடுகளையே. தீய சுழிகள் உள்ள காளை மாடுகளோ, பசுமாடுகளோ பட்டியில் இல்லாமல் பார்த்துக் கொள்வர். சுழிகளில் நன்மை தரும் சுழிகளும் தீமை தரும் சுழிகளும் உண்டு.
கோபுர சுழி, லட்சுமி சுழி, தாமணி சுழி, விரிசுழி, இரட்டை கவர் சுழி, பாசிங் சுழி ஏறு பூரான் சுழி, விபூதி சுழி, கொம்புதானா சுழி, ஏறு நாகச் சுழி, நீர் சுழி போன்ற சுழிகள் நன்மை தருபவை.
அக்கினி சுழி, முக்கண் சுழி, குடைமேல் குடை சுழி, விலங்கு சுழி, பாடை சுழி, பெண்டிழந்தான் சுழி, நாகப்பட சுழி, தட்டு சுழி, துடைப்பை சுழி, புட்டாணி சுழி, படைக்கட்டு சுழி, இறங்கு பூரான் சுழி, பூரான் செளவல் சுழி, வால்முடங்கி சுழி, இறங்கு நாக சுழி, கருநாகச் சுழி, மென்னிப்பிடி சுழி போன்ற சுழிகள் தீமை கொடுக்கும் சுழிகள்.

இந்த சுழிகள் மாடுகளின் உடலில் இருக்கின்ற இடம் அமைப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு அவை நாம் எதிர்கொண்டு வருகின்றோம். அதில் முக்கியமான தொன்று நமது பாரம்பரீய அறிவு நாளுக்கு நாள் மரைந்து வருவது. தொன்று தொட்டு நிலவி வந்த மிகப் பெரிய முறை கால்நடை சிகிச்சை முறைகளும், மருந்துகளும் நாளுக்கு நாள் மறைந்து வருகின்றன. பின் விளைவுகளையும் குறைபாடுகளையும் உடைய ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்தும்போது கண்கூடாக தெரியும் சில நன்மைகளால் தொடர்ந்து பயன்படுத்துகின்றோம். ஆங்கில மருந்துகள் நன்மையை விட கூடுதலான சிக்கலான சூழ்நிலையையே உண்டாக்குகிறது.
நம் நாட்டில் அனுபவம் மிக்க நாட்டு வைத்தியர்கள் குறைந்த செலவில் குணப்படுத்துகின்றனர். நாட்டு மருந்துகளுக்கு நாட்டு வைத்தியம்தான் சிறப்பாக அமையும்.
சஞ்சீவினி, வாதாரி, அர்க், மதுமேகந்தவடி, கோதீர்த்தவடி, மதுமேக சூரணம், அஷ்ட மங்கள கிருதம், பிரமேகாரி, நாராயண தைலம், காமதேனு தைலம், அமிர்த தாரா, கோஒபால் சூரணம், பஞ்ச்திக்க கிருதம், தர்காரிஷ்டம் என எண்ணிலடங்கா மருந்துப் பொருட்கள் செய்யப்படுகின்றன.
பசுவின் சாணம், கோமியம், பால், தயிர், நெய் போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் பஞ்சகாய்வா இயற்கை வேளாண்மைக்கு அடிப்படையாக கருதப்படுகின்றது.

நாட்டுப் பசுக்களுக்கு மட்டும் நோய் நொடிகளிலிருந்து விலக்கு உண்டா என்றால் இல்லை என்பது தான் பதில். உலகமய பொருளாதார கொள்கையால் நடக்கும் தடையற்ற வர்த்தகத்திற்கு இந்தியா ஒரு மிகப்பெரிய சந்தை/ இந்த கொள்கையால் நாட்டில் பல்வேறு விளைவுகளை ஆஇ நன்மை தரும் சுழியா, தீமை தரும் சுழியா என்பது முடிவு செய்யப்படுகின்றது. பொதுவாக தீமை செய்யும் சுழிகளை உடைய மாடுகளுக்கு விற்பனை வாய்ப்பு மிகவும் அரிது. பண்டைய நம்பிக்கையான சுழிக்கு எவ்வித அறிவியல் அடிப்படையும் இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் மாட்டின் விற்பனையிலும், வளர்ப்பிலும் சுழி பெரும்பங்கு வகிக்கின்றது என்பது எதார்த்தம்.
நம் நாட்டின் பூர்வ பசுக்கள் விவசாயத்தின் ஆதாரமாக விளங்கியது அன்னிய ஆதிக்கமும், மேல் நாட்டு மோகமும் சீமை பசுக்களை நோக்கி திருப்பிவிட்டது. இப்போது மீண்டும் நாட்டுப் பசுக்களை பேண வேண்டும் என்கின்ற எண்ணமும், செயலும் திரும்ப வர்த்துவங்கியுள்ளது. இந்த மாற்றம் நிலைத்து நீடித்தால் இழந்த ஆநிரை செல்வத்தை மீட்டெடுக்கலாம்
நன்றி: தினமணி By S.V.P. வீரக்குமார்

Comments