காலம் வேகமாக உருண்டு கொண்டிருக்கிறது. 2000-ம் ஆண்டுகளில் வேகமெடுத்த இணையதள வருகை அந்த வேகத்தை மேலும் துரிதமாக்கி இருக்கிறது. இன்று இணையதளம் இல்லாமல், ஊன் இல்லை, உறக்கம் இல்லை என்கிற ஒரு தலைமுறை உருவாகிவிட்டது. மின்சாரம் இல்லாமல் உலகம் இயங்க முடியாது என்பதுபோல, இன்று இணைய தொடர்பு இல்லாமல் ஒர் அலுவலகம் ஒரு நாள்கூட இயங்க முடியாது என்கிற நிலைமைக்கு வந்து விட்டது. இதற்கேற்ப துரித இணைய சேவையை வழங்க ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டு வருகின்றன.
உலகின் மக்கள் தொகை வளர்ச்சியை போலவே இணைய பயனாளிகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 2017ம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் இணையதளம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 கோடியை தொடும் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
இந்த நிலையில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இணைய வழியிலான சில்லரை வர்த்தகம் பல்வேறு வர்த்தக வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. முக்கியமாக ஸ்டார்ட்அப் நிறுவனங் களுக்கு இணையதளங்களே மிகப் பெரிய அடித்தளமாக இருக்கிறது. ஏற்கெனவே பாரம்பர்யமாக சில்லரை வர்த்தகம் மூலம் நடந்துகொண்டிருக்கும் பல தொழில்களிலும் இணையதள நிறுவ னங்கள் இறங்கிவிட்டன.
அன்றாட அத்தியாவசிய தேவைகள் முதல், வீடு வாங்குவது, பர்னிச்சர்கள் உள்பட அனைத்தும் இணையதளங்கள் வாயிலாகவே வாங்கி விட முடிகிறது. தங்களது இணையதளங்களை எளிதாக அணுகுவதற்கு ஏற்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதலீடுகளை செய்கின்றன.
பொதுவாக இந்தியாவில் 5 கோடி சிறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 17 சதவீத பங்களிப்பை வைத் துள்ளன. ஆனால் இந்த 5 கோடி சிறு தொழில் நிறுவனங்களும் இணையதள வாய்ப்புகளை பயன்படுத்துகிறார்களா என்றால் இல்லை. சுமார் 1 கோடி சிறு தொழில் நிறுவனங்கள் மட்டுமே இணையதளங்களை பயன்படுத்து கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. இந்த எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் மாற்றத்தை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளது.
இணையதளம் ஏன்?
இணையதளங்களை சரியாக பயன்படுத்துவதன் மூலம் தங்களது தொழிலுக்கு சரியான முகம் கொடுக்க முடியும் என்கின்றனர் தொழில் ஆலோ சகர்கள். ப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வெற்றி பெற்றது இப்படித்தான். உதாரணமாக பல்வேறு தொழில்களுக்கான கருவிகளை உற்பத்தி செய்யும் சிறு நிறுவனம் தங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்த வேண்டும், அல்லது தேவை உள்ள இடத்துக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்றால் விளம்பரம் மற்றும் சந்தையிடல் உத்திகளில் கவனம் செலுத்தினால் மட்டும் போதாது. காலத்துக்கு ஏற்ப இணையதளம் ஒன்றை உருவாக்கிக் கொள்வதே சிறந்த வழியாக இருக்க முடியும். சொந்தமாக இணையதளம் வைத்துள்ள நிறுவனத்துக்கும், இணைய தளம் இல்லாத நிறுவனத்துக்குமான வளர்ச்சி விகிதம் மலையளவு வித்தியாசம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தேடல்
தயாரிப்போ சேவையோ அதை வெளிப்படுத்துவதுதான் முதன்மையான தேவையாக இருக்கிறது. அப்போதுதான் அது உரியவர்களை சென்றடையும். பல்வேறு தரப்பு வாடிக்கையா ளர்களும் தங்களது தேவைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை இணையதளம் கொடுக்கிறது.
மிக எளிதாக கையாளுவதுபோல வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் மக்களை அதிக அளவில் ஈர்க்கிறது. பிரிவுகள், உட்பிரிவுகளுடன் தயாரிப்பு களுக்கேற்ப வடிவமைத்தால், வாடிக்கையாளர்கள் தேடி வருவார் கள்.
வேறுபாடு
இணையதளம் நமது பொருளை அடையாளப்படுத்த மட்டுமல்ல, இந்த துறையில் செயல்பட்டு வரும் இதர உற்பத்தியாளர்களிடமிருந்தும் வேறு படுத்துகிறது. தவிர இணையதளம் வாடிக்கையாளருக்கு ஒப்பிட்டு பார்க்கும் வாய்ப்புகளை வழங்குகிறது. விலை மற்றும் பிராண்டுகள் குறித்து வாடிக் கையாளர்கள் முடிவெடுக்க முடியும்.
குழு உருவாக்கம்
இணையதளம் வாடிக்கையாளர் களுக்கான கலந்துரையாடல் தளத்தையும் வழங்குவதாக இருக்க வேண்டும். இதன் மூலம் தயாரிப்புகள், சேவைகள் குறித்து கருத்துரைகள் கிடைக்கும். இது புதிய வாடிக்கையாளர்களை கொண்டு வருவதற்கான சிறந்த வழியாக அமைகிறது. இதன் மூலம் வாடிக் கையாளர்கள் குழு உருவாக்கத் துக்கான வாய்ப்புகளும் உருவாகிறது.
பிராண்ட்
தயாரிப்புகளை பிராண்டாக வளர்த் தெடுக்கவும் இணையதளம் பக்க பலமாக இருக்கிறது. இணையதளத்துக்கு சரியான பெயரை தேர்ந்தெடுத்துவிட்டால் அதுவே பிராண்டாக உருவாகிவிடும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வருகையும் அதிகரிக்கும். தவிர நமது பெயர் பொதுவாகவும், அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் கவருவ தாகவும், சர்வதேச அளவில் புரிந்து கொள்வதுபோலவும் இருந்தால், தயாரிப்பு அல்லது சேவைக்கான பிராண்ட் வேல்யூ உரு வாகும்.
சந்தைப்படுத்த..
புதிய பொருள் அறிமுகத்துக்கான சந்தையையும் இணையதளம் உருவாக்கிக் கொடுக்கிறது. வாடிக்கை யாளருக்கு சரியான புரிதலை ஏற்படுத்தவும் உதவுகிறது. சேவை அலலது தயாரிப்பு எந்த எந்த வகை களில் பயன்படும் என்பதை விளக்கு வதற்கான சாத்தியங்கள் உள்ளதால் சந்தைப்படுத்துதலின் முக்கிய கருவி யாகவும் செயல்படுகிறது.
விழிப்புணர்வு
பொருளை அல்லது சேவையை பயன்படுத்துவது குறித்த செயல் பாடுகளை இதன் மூலமே விளக்கி விடலாம்.
இதனால் வாடிக்கையாளருக்கு ஏற்படும் குழப்பங்கள் தவிர்க்கப்படும். தவிர எல்லா தேவைகளுக்கும் வாடிக் கையாளர் சேவை மையத்துக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதால் நம்பகதன்மையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
செலவு கட்டுப்பாடு
சிறு தொழில் நிறுவனங்கள் தங் களது தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் இணையதளங்கள் கணிசமாக செலவு களை கட்டுப்படுத்தும் கருவியாகவும் இருக்கிறது.
டிஜிட்டல் மீடியா விளம்பரங்கள் பத்திரிகைகள் வாயிலாக கொடுக்கும் விளம்பரங்களைவிட செலவு குறை வாக இருப்பது மட்டுமல்ல, நீண்ட நாட்களுக்கு தாக்குபிடிக்கும் தன்மை கொண்டவையாகவும் உள்ளன.
பொதுவாக இந்திய சிறு தொழில் நிறுவனங்கள் குடும்ப உறுப்பினர்களால் நிர்வகிக்கப்பட்டே வருகின்றன. தொழில் வளர்ச்சி எப்போதும் நமது கண் பார்வைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதுதான் குடும்ப நிறுவனங்களின் பண்பாக இருக்கிறது.
அதைத் தாண்டி சிறு நிறுவனங்கள் பல மடங்கு வளர்ச்சியை எட்ட வேண்டும் என்றால் இணையதளம் வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்துவதே சிறந்த வழியாக இருக்க முடியும். எதிர்கால இந்தியா அதை நோக்கியே வளர்ந்து வருகிறது என்பதையும் தொழில் முனைவோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment