இந்தியாவிலேயே முதல்முறையாக இயற்கை விவசாயத்திற்கு பல்கலைக்கழகம்!

 இயற்கை விவசாயத்திற்கு பல்கலைக்கழகம் குஜராத்தில் விரைவில் நிறுவப்படுகிறது:

வதோதரா,

நாட்டிலேயே முதல்முறையாக இயற்கை விவசாயத்திற்காக புதிய பல்கலைக்கழகம் ஒன்றை குஜராத் அரசு நிறுவ உள்ளது. விவசாயிகள் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில முதல்வர் அனந்திபென் படேல் இதை அறிவித்துள்ளார். 


அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட குஜராத் அரசின் 2016-17 பட்ஜெட்டில் மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக புதிய பல்கலைக்கழகம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த பல்கலைக்கழகத்தை எங்கு அமைப்பது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. காந்திநகர் மாவட்டத்தில் உள்ள காமதேனு வேளாண்மை பல்கலைக்கழத்திற்கு அருகிலேயே நிறுவப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அண்மையில், சிக்கிம் மாநிலம் முற்றிலும் இயற்கை விவசாயத்தை கொண்டிருக்கும் மாநிலமாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments