கேர­ளாவில் ஆர்­கானிக் பால் நெதர்­லாந்து துணை­யுடன் உற்­பத்தி

திரு­வ­னந்­த­புரம்:கேரள கூட்­டு­றவு பால் சந்­தைப்­ப­டுத்தும் கூட்­ட­மைப்­பான, எம்.ஐ.எல்.எம்.ஏ., ஊட்­டச்­சத்­துள்ள, ‘ஆர்­கானிக் பால்’ உற்­பத்­தியில் ஈடு­பட முடிவு செய்­துள்­ளது. 
‘இத்­த­கைய பால் உற்­பத்­திக்கு, நெதர்­லந்து அரசின் சோலி­டா­ரிடாட் நிறு­வனம், அனைத்து வகை­யான தொழில்­நுட்ப உத­வி­களை வழங்கும். இதற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம், விரைவில் கையெ­ழுத்­தாக உள்­ளது,’’ என, எம்.ஐ.எல்.எம்.ஏ., நிர்­வாக இயக்­குனர் கே.டி.தாமஸ் தெரி­வித்து உள்ளார். 


ஆர்­கானிக் பால் என்­பது, முழுக்க முழுக்க, இயற்கை உண­வு­களை உண்ணும் மாடு­களில் இருந்து பெறப்­ப­டு­வது. இதற்­காக, கேர­ளாவின் வய­நாடு மாவட்­டத்தில், முல்­லன்­கொல்லி பகுதி தேர்வு செய்­யப்­பட்டு உள்­ளது. 
இந்த முறையில், ஒன்­றரை ஆண்­டுகள் மாடுகள் வளர்க்­கப்­பட்ட பின்­னரே, அதி­லி­ருந்து பால் கறக்­கப்­படும். அதே­ச­மயம், தற்­போ­துள்ள பால் விலையை விட, இயற்கை பால் விலை, அதிகம் இருக்கும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
tks dinamalar.

Comments