படிக்கலைன்னா மாடுதாண்டா மேய்க்கணும்

"படிக்கலைன்னா மாடுதாண்டா மேய்க்கணும்" - நூற்றில் தொண்ணூற்றொம்பது பேர் தங்கள் பெற்றோரிடமிருந்து சிறு வயதில் இதைக் கேட்டிருப்பீர்கள். இந்தியாவில் பெற்றோர்களும் குழந்தைகளும் கல்விக்குத் தரும் மதிப்பு மிக அதிகம். ஆனால் தொழில்நுட்ப உலகில் சாதித்தவர்களில் பலர் கோடீசுவரனாக மாறவும் சாதிக்கவும் பெரிய படிப்புத் தேவையில்லை என்பதை உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.


தொழில்நுட்பத் துறையில் சாதாரண மனிதர்கள் பலர் புதிய முயற்சிகளில் வெற்றி கண்டு உலகையே அதிர வைத்திருக்கிறார்கள். இன்றைய உலகில் கல்வி ஒரு முக்கியத் தேவையாக இருந்தாலும் ஒரு பட்டப்படிப்பு கூட இல்லாமல் சாதித்த 8 பெரிய மனிதர்களைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம். பல்லாயிரம் கோடி சொத்து இதற்குச் சிறந்த உதாரணமாகப் பில் கேட்ஸும் மார்க் ஜக்கர்பர்க்கையும் கூறலாம்.

இவர்கள் தலைசிறந்த பல்கலைக் கழகங்களில் தங்கள் படிப்பை பாதியில் விட்டுவிட்டுத் தங்கள் சொந்த நிறுவனத்தை உருவாக்கி கோடிகள் அல்ல பல்லாயிரம் கோடிகளுக்குச் சொந்தக்காரர்களாக ஆகியிருக்கிறார்கள்.

ஸ்டீவ் ஜாப்ஸ் - ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம் இன்று இந்த நிலையை எட்டக் காரணமாகத் திகழ்ந்தவர் 19 வயதில் படிப்பை நிறுத்திய ஸ்டீவ் ஜாப்ஸ். துரதிருஷ்டவசமாகப் புற்று நோய் அவரை ஆட்கொண்டுவிட்டது. ஆனால் தனது கடைசிக் காலகட்டத்திலும் மொபைல் உலகையும், இசை உலகை மாறியதை ஐபாடை-யும் ஐபோனையும் உருவாக்குவதற்குத் புற்று நோயும், கல்வியும் எந்த வகையிலும் தடையாக இல்லை.

பில் கேட்ஸ் - மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ் இந்த உலகின் மிகப்பெரும் பணக்காரர், தமது 20 ஆவது வயதில் படிப்பை நிறுத்திவிட்டு மைக்ரோசாப்டை உலகின் முதற்தரக் கணினி மற்றும் லாப்டாப் இயங்குதளப் பிராண்டாக உருவாக்கினார். உலகில் இதுநாள் வரை அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக இது இன்றும் திகழ்கிறது.

மைக்கேல் டெல் இவருடைய நிறுவனத்தின் கம்பியூட்டர் மற்றும் லாப்டாப்புகளை உலகம் விரும்பி உபயோகிக்கின்றது. 19 வயதில் கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டு இந்தப் பிராண்டை உருவாக்கத் தொடக்கி தற்போது சேக்ட்டாப் முதல் சர்வர்கள் வரை உலகில் அனைத்தையும் தயாரிக்கும் நிறுவனமாக இது திகழ்கிறது.

இவான் வில்லியம்ஸ் - ட்விட்டர் நல்லா ட்வீட் பண்ணுங்க.. மக்கள் உங்களைத் தொடருவாங்க... இவான் தன்னுடைய 20 வயதில் படிப்பை நிறுத்தி கடுமையாக உழைத்து இன்று அனைவராலும் பெரிதும் விரும்பப்படும் ட்விட்டர் சமூக வலை தளத்தைக் கொண்டு பல ஆயிரம் கொடிகளைச் சேர்த்திருக்கிறார்.

ட்ராவிஸ் காலனிக் - உபர் உபர் அமெரிக்காவில் மட்டும் பிரபலமடைந்த ஒரு கருத்துருவாக்கம் அல்ல. இந்தியா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் தற்போது காலூன்றியுள்ளது உபர். மக்கள் தற்போது காப் அல்லது டாக்ஸி என்று கூறுவதில்லை. உபர் என்றுதான் அழைக்கிறார்கள். இதற்கு 20 வயதில் படிப்பை நிறுத்திய ட்ரைவிஸ்ஸையே நாம் நொந்துகொள்ளவேண்டும்.

லாரி எலிசன் - ஆரக்கிள் 20 வயதில் லாரி அவருடைய படிப்பிலிருந்து கவனத்தை வேலைக்குத் திருப்பினார். இன்று அவர் ஆரக்கிள் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திப் பல ஆயிரம் கொடிகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார் ஜான் கவும் -

வாட்சப் பேஸ்புக் நிறுவனம் அண்மையில் பல ஆயிரம் கொடிகளைக் கொடுத்து வாட்ஸப்பை வாங்கியது அனைவரும் அறிந்ததே. ஜான் படிப்பை பாதியில் நிறுத்தி வாட்சப்பை துவங்கியபோது அவருக்கு வயது 21 மட்டுமே.


மார்க் ஜூக்கர்பெர்க் - பேஸ்புக் தி சோசியல் நெட்ஒர்க் என்ற படத்தை நீங்கள் பார்த்திருந்தால் மார்க்கை பற்றி உங்களுக்கு ஓரளவிற்குத் தெரிந்திருக்கும். அவரு ஹார்வாடில் படித்த பொது அவர் எவ்வாறு இந்த நிறுவனத்தை உருவாக்கினார் என்பதையும் அறிந்திருப்பீர்கள். இந்தக் கோடீஸ்வரர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை 20 வயதில் நிறுத்தினார்.

கேக்க எல்லாம் நல்லாத்தான் இருக்குனு நீங்க விடற பெருமூச்சு கேக்குது. முயற்சி செய்தால் முடியாதது ஒண்ணுமில்லைதானே?

Read more at: http://tamil.goodreturns.in

Comments