வெள்ளாடுகளுக்கும் செம்மறியாடுகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

1. வெள்ளாடுகள் நீண்ட கால்களுடனும், மெலிந்த உடலுடனும் உயரமாகக் காணப்படும். ஆனால் பொதுவாக செம்மறி ஆடுகள் குட்டையான கால்களுடனும், தடித்த உடலமைப்புடனும் இருக்கும்.

2. செம்மறிக் கடாக்களுக்கு வெள்ளாட்டுக் கடா போன்று கெட்ட நாற்றம் இருக்காது.


3. வெள்ளாடுகளுக்குத் தாடி இருக்கும். செம்மறி ஆடுகளுக்கு இருக்காது.

4. வெள்ளாடுகளின் வால் தூக்கி இருக்கும். செம்மறி ஆடுகளின் வால் தொங்கிக் கொண்டு இருக்கும்.

5. வெள்ளாடுகள் நிமிர்ந்து நடந்து செல்லும். செம்மறி ஆடுகள் குனிந்து செல்லும்.

6. செம்மறி ஆடுகளுக்குப் பக்க வாட்டில் திருகிய கொம்புகள் உள்ளன. வெள்ளாடுகளுக்கு நேரான அல்லது பின்னோக்கி வளைந்த கொம்புகள் உள்ளன.

இனப் பெருக்கமும் :

வெள்ளாடுகளில், பிட்டியூட்டரி என்னும் நாளமில்லாச் சுரப்பி, வெள்ளாடுகள் குட்டி போடுவதை முறைப்படுத்துகின்றது. பிறந்த குட்டிகள் நன்கு உயிர்வாழ ஏற்றக் கால நிலை இருக்க வேண்டும்.

நமது இந்திய நாட்டின் சமுனாபாரியுத் பீட்டல் இன வெள்ளாடுகளும் சூலை முதல் செப்டம்பர் வரை சினைப் பருவத்திற்கு வரும்.

பார்பாரி, வங்காளக் கறுப்பு, நம் தமிழகப் பகுதி சாட்டு ஆடுகள் ஆகியவை ஆண்டு முழுவதும் சினைக்கு வரும். எனினும், வறட்சியில்லாமல், மழை பெய்து புல் பூண்டு வளர்ந்துள்ள சூழ்நிலையிலேயே வெள்ளாடுகள் சினைக்கு வந்து நன்கு கருத்தரிக்கின்றன.

வெள்ளாடுகளில் சினைத் தருண அறிகுறிகள் :

1. பெட்டை ஆடு, நிலை கொள்ளாமல் அங்கும், இங்கும் ஓடும்.

2. தொடர்ந்து கத்திக் கொண்டிருக்கும்.

3. வெள்ளாட்டின் வெளிப்புற இன உறுப்புகள் வீங்கிச் சிவந்திருக்கும்.

4. பால் கொடுக்கும் ஆட்டின் பால் அளவு குறைந்துவிடும்
அடுத்த ஆடுகள் மீது தாவும்.

5. சிறப்பாக, ஆடுகள் வாலைத் தொடர்ந்து விரைவாக அசைத்துக் கொண்டே இருக்கும்.

சில ஆடுகளில், சினைத் தருண அறிகுறிகள் அதிகம் தெரியாமல் இருந்து விடும். இத்தகைய ஆடுகளைக் கடாக்களின் துணையுடன் கண்டு பிடித்துச் சினைப் பிடிக்க வைப்பது அவசியமாகும்.

சினைக்காலம் :

1. வெள்ளாடுகளில், சினைக் காலம் 151 நாட்களாகும். ஆகவே ஆண்டிற்கு இருமுறை வெள்ளாடுகளைக் குட்டிகள் ஈன வைக்கலாம். ஆனால், பாலுக்கான இனங்கள் வளர்க்கும்போது ஆண்டிற்கு ஒரு முறை ஈன வைப்பது வழக்கம்.

2. நாட்டு ஆடுகளும், தலைச்சேரி, பார்பாரி, வங்காளக் கறுப்பு ஆடுகளும் குட்டி போட்ட 8 வாரங்களுக்குள் சினைப் பருவத்திற்கு வந்துவிடும். ஆனால் பல வெளிநாட்டு இன வெள்ளாடுகள் குட்டி போட்டுப் பல மாதங்கள் ஆன பின்பே சினைக்கு வருகின்றன.

3. தராணமாகச் சாணன் ஆடுகள் குட்டி போட்ட 7 மாதங்கள் சென்ற பின்பே முதல் முறையாகச் சினைக்கு வருகின்றன.

4. வெள்ளாடுகள், 18 முதல் 21 நாட்களுக்கு ஒரு முறை சினைக்கு வரும். சினைத் தருணம் 2 முதல் 3 நாட்களுக்கும் நீடிக்கும். ஆனால், குளிர்காலத்தில் சினைத் தருணம் 24 முதல் 36 மணி நேரம் மட்டுமே இருக்கும்.

5. வெள்ளாட்டுக் கடாக்கள், பெட்டை ஆடுகளுடன் இருப்பது. அவை சினைப் பருவத்திற்கு வரத் தூண்டி கருத்தரிக்க வைக்கின்றன எனப் பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இனப் பெருக்கம் செய்யத் தகுந்த வயது :

வெள்ளாடுகள் மிகக் குறைந்த வயதிலேயே இனப் பெருக்கம் செய்யும் பருவத்தை அடைந்து விடுகின்றன. ஏழு மாத வயதில் குட்டி ஈன்ற பெட்டை ஆடும் உண்டு. ஆனால் இதி பெட்டை ஆட்டையும், குட்டியையும் மிகப் பாதிக்கும். நம் நாட்டு ஆடுகள் 8 முதல் 10 மாத வயதில் இனப்பெருக்கும் செய்யலாம். வெளி நாட்டினம் என்றால் 15 முதல் 18 மாத வயதில் இனவருத்தி செய்யலாம். இளமையில் வருவத்திற்கு வந்து விடுவதால், ஆண், பெண் குட்டிகளைப் பிரித்து வளர்ப்பது சிறந்தது.

பொலிவு செய்ய ஏற்ற நேரம் :

முதல் சினை அறிகுறு தோன்றிய 10 முதல் 15 மணி நேரத்திற்குள் பொலிவு செய்வது சிறந்தது. பொதுவாக, ஒரு முறை பொலிவு செய்வது போதுமானது. நமது நாட்டில் சில பகுதிகளில், வெள்ளாட்டுக் கடா விந்து உடைற நிலையில் பாதுகாக்கப்பட்டுச் செயற்கை முறையிலும் கருவூட்டல் செய்யப் பயன்படுத்தப்படுகின்றது.

சினையான ஆடுகளின் அறிகுறிகள் :

ஆடுகள் சினைப் பட்டதற்கான அறிகுறிகள் 2 – 1/2 மாதத்திற்குப் பின்பே தெரியவரும். குட்டி போடுமுன் கடைசி இரு வாரங்களுக்கு வெளியே அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். சினையான ஆடுகளின் மடி பெருக்க ஆரம்பிக்கும். அமைதியாகவும் காணப்படும். 67% உறுதியுடனேயே வெள்ளாடுகளில் சினை கண்டு பிடிக்க முடியும். வெள்ளாடுகளில், கருத்தரியாமைப் பிரச்சினை மிகக் குறைவு.

குட்டி போடும் தருண அறிகுறிகள் :

சிறப்பாக, இனச் சேர்க்கை செய்த நாள்கள் கடந்து 151 நாள்களில் குட்டி ஈனும். இதன் அடிப்படையிலேயே ஆடுகளைத் தனிமைப் படுத்தித் தேவையான வைக்கோல் பரப்பித் தயார் செய்ய வேண்டும்.

குட்டி போடும் ஆடுகள் தனிமையை விரும்பிச் சென்று, காலால் தரையைத் தேய்க்கும். பெண் உறுப்பிலிருந்து இரத்தம் கலந்த கெட்டியான திரவம் வடியும். முதலில் இரு முன் காலும், தலையும் வெளியே வரும். குட்டி போடும் போது எவ்விதத் தொந்தரவும் செய்யாமல் இயற்கையாகக் குட்டி போட அனுமதிக்க வேண்டும். நச்சுக் கொடி. ஆடு குட்டி ஈன்ற ஒரு மணி நேரத்திற்குள் வெளியாகிவிடும்.


தொகுப்பு : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி


Comments