பொறியாளராக 24 இலட்சம் சம்பாதித்தவர் இன்று விவசாயியாக 2 கோடி சம்பாதிக்கும் ஆச்சரியம் !!

வசந்த் ராவ் காலே சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாநிலத்தில் உள்ள மெதாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு அரசாங்க ஊழியராகவே இருந்தார். வேலையில் இருந்து ஓய்வு பெற்றதும் தன் நீண்ட நாள் கனவான விவசாயத்தைப் பின்பற்ற நினைத்தார். எனினும் ஒரு விவசாயி எதிர்கொள்ளும் வழக்கமான சவால்கள் அவருக்குப் பயமூட்ட போதுமானதாக இருந்தன.

வேளாண்மை கதையால் கவரப்பட்ட பேரன் வசந்த்தின் பேரன் சச்சின், 

கிராமத்திற்கு அடிக்கடி அவரைப் பார்க்க வரும்போதெல்லாம் அவரது தாத்தா கூறும் வேளாண்மை கதைகளால் கவரப்பட்டார். எனினும், இந்தியாவின் பல நடுத்தரக் குடும்பங்களைப் போலவே சச்சினின் பெற்றோரும் அவர் ஒரு பொறியாளர் அல்லது மருத்துவர் ஆக வேண்டும் என நினைத்தனர்.

மெக்கானிக்கல் எஞ்சினியரிங் சச்சினுக்கும் படிப்பது பிடித்திருந்த காரணத்தால் அவர் REC நாக்பூரில் (இப்போது VRCE என அழைக்கப்படும்) 2000 ஆம் அண்டு மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கில் பொறியியல் பட்டம் பெற்று அவரது பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றினார். பிறகு எம்பிஏ (நிதி) பட்டம் பெற்று சட்டமும் பயின்றார். சச்சின் ஒரு மின் நிலையத்தில் தன் பணி வாழ்வைத் துவங்கி தான் திறமையால் வேகமாக வளர்ந்தார்.

வளர்ச்சி பொருளாதாரத்தில் பிஎச்டி 2007 ல், சச்சின் வளர்ச்சி பொருளாதாரத்தில் தனது பிஎச்டியை துவங்கினார். தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் வலுத்தது இந்தக் காலகட்டத்தில் தான். அவர் பணி வாழ்வில் மேலும் மேலும் வெற்றி கண்டு முன்னேறிக்கொண்டு இருந்தாலும் நாம் ஏன் நமக்கே வேலை செய்யாமல் அடுத்தவருக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரை மிகவும் தொந்தரவு செய்தது.

பணம் இல்லாமல் இருக்காமல் இருக்கலாம் உணவு இல்லாமல் இருக்க முடியுமா?
சச்சினின் தாத்தா அடிக்கடி, எந்தக் கட்டத்திலும் ஒருவர் பணம் சம்பாதிக்காமல் இருக்கமுடியும் ஆனால் உணவு இல்லாமல் வாழ முடியாது என்பதை வலியுறுத்துவார். எனவே உங்களுக்குத் தேவையான உணவை நீங்களே உற்பத்தி செய்து கொள்ளும் கலை தெரிந்தால்,எந்த நிலையிலும் உயிர் வாழலாம். அவர்களது முன்னோர்களின் இடமான 25 ஏக்கர் நிலத்திற்குச் சச்சினை அழைத்துச்சென்று அதை என்றாவது ஒரு நாள் விவசாய நிலமாக மாற்றவேண்டும் என்ற தான் கனவைப் பகிர்ந்து கொள்வார். அவரது தாத்தா அவருக்குக் கற்றுக்கொடுத்த பல்வேறு பாடங்களில் ஒன்றில் சச்சின் கவனம் செலுத்த தொடங்கினார் - தொழிலாளர்கள் கிடைப்பது.


விவசாயத்தை எப்படி லாபமாக மாற்றுவது சச்சின் விவசாயிகளுக்கு நலன் பயப்பது எது என்பதைப் பற்றிச் சிந்திக்கத்துவங்கினார். ஆனால் அவர் ஒரு சிறந்த விவசாயத் தொழில் முனைவோர் ஆக,முதலில் விவசாயம் அறிய வேண்டும் மற்றும் அதில் அதிக லாபம் ஈட்டுவதன் மூலம் தான், தான் ஒரு உதாரணமாக அமைய முடியும் என்பதை உணர்ந்தார்.

லட்சங்களில் இருந்த சம்பளத்தைத் துறந்த சச்சின் 2013 ல், சச்சின் அவர் வேலை செய்த குர்காவ்னில் உள்ள புன்ஞ் லாயிடில் அவருக்குக் கிடைத்த 24 இலட்சம் (வருடத்திற்கு) சம்பளத்தைத் துறந்து, ஆடம்பரமான வாழ்க்கை விட்டு வெளியேறி ஒரு விவசாயியாக மேதாபூருக்கு சென்றார்.

15 ஆண்டு வருங்கால வைப்பு நிதி முதலீடு விவசாய முயற்சி வெற்றி பெறாவிடில், அவரைச் சார்ந்து அவர் குடும்பம் இருந்ததால், மறுபடியும் பணி வாழ்விற்குச் செல்லலாம் என்று முடிவெடுத்து, 15 ஆண்டுகளாகச் சேமித்த அவரது முழு வருங்கால வைப்பு நிதியை விவசாயத்தில் முதலீடு செய்தார்.

வருமானத்தை ஈட்டிய கடின உழைப்பு ஆனால் அவரது கடின உழைப்பு, உறுதி மற்றும் திறன்கள் அவருக்கு வருமானத்தை ஈட்டின - அவர் ஆண்டு முழுவதும் பயனுள்ளதாக இருக்கும் விதத்தில் அவருடைய விவசாய நிலத்தை அமைத்து அதிகபட்ச இலாபம் ஈட்டினார். இப்போது அவரது அடுத்த இலக்கு அவருக்குக் கற்றுக்கொடுத்த விவசாயிகளுக்கு நலன் பயப்பது. அதற்காக ஒப்பந்த வேளாண்மை பற்றிய ஆராய்ச்சி செய்து, விவசாயம் ஒரு நிலையான வருமானத்தை விவசாயிகளுக்கு ஈட்டித்தந்து நலன் பயக்கும் விதத்தில் இருக்கும் எனத் தீர்மானித்தார். 

இவ்வாறு 2014 ல் சச்சின், இன்னோவேடிவ் அக்ரிலைஃப் சொல்யூஷன் பிரைவேட் லிமிடட் என்ற சொந்த நிறுவனத்தைத் துவங்கினார். அது வேளாண்மையில் ஒப்பந்த விவசாய மாதிரியில் விவசாயிகளுக்கு உதவி புரியும் விதத்தில் அமைக்கப்பட்ட நிறுவனம். வேலான் நிபுணர்கள் பணிக்கு வேலை சச்சின் மேலும் விவசாயிகளுக்குப் புதிய தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மையைச் சரியான வழியில் கற்பிக்கப் பிலாஸ்பூரில் உள்ள வேளாண் கல்லூரியில் இருந்து நிபுணர்களைப் பணியில் அமர்த்தினார். ஒப்பந்த வேளாண்மையின் அடிப்படைகள் மிக எளியது மற்றும் இலாபம் தரக் கூடியது. விவசாயிகளுக்கு உதவி ஒப்பந்த விவசாயம், விவசாய உற்பத்தியை வாங்குபவர் மற்றும் விவசாயிகளுக்கு இடையே ஏற்படும் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும். 
வருமானத்தை ஈட்டிய கடின உழைப்பு

வாங்குபவர் விவசாயிகளுக்கு நிதி மற்றும் விவசாயத்திற்குத் தேவையான எல்லா வகையிலும் உதவுவர். பதிலுக்கு விவசாயி பயிர் வாங்குபவர் பரிந்துரைத்த மற்றும் வாங்குபவரின் முறைமையைப் பொறுத்து உற்பத்தி செய்வார். குறைந்தபட்ச விற்பனை விலை முன்பே குறிக்கப்பட்டு, வாங்குபவர் சந்தை விலை குறைந்தாலும் கூட, முழுப் பயிரையும் குறிக்கப்பட்ட விலையில் வாங்குவார். வாங்குபவர்கள் மற்றும் விவசாயிகள் இருவருக்கும் இந்தச் சூழ்நிலை வெற்றி தரும் - விவசாயி, 
விவசாயிகளுக்கு உதவி

சந்தையில் விலை அதிகமாக இருந்தால் இலாபத்தில் ஒரு பங்கைப் பெறுவார். நெல் மட்டும் இல்லாமல் பருவகாலக் காய்கறிகள் சச்சின் தனக்குச் சொந்தமான 24 ஏக்கர் நிலத்தில் நெல் மற்றும் பருவகாலக் காய்கறிகள் தொடர்ந்து பயிரிட்டார். காலப்போக்கில், அவர் அங்கு விவசாயிகள் நெல் மட்டுமே பயிரிட்டனர் என்பதை அறிந்தார். அது மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் மட்டுமே. அடுத்த எட்டு மாதங்களுக்கு ஒன்றுமே பயிரிடப்படாமல் நிலம் இருந்தது.. 

இதனால் நெல் அறுவடை செய்த பிறகு, அவர்கள் பருவகாலக் காய்கறிகள் ஆண்டு முழுவதும் வளர்க்க ஒரு பண்ணை மாதிரி அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயிகள் சச்சினின் விவசாய உத்திகளால் ஈர்க்கப்பட்டு அவருடன் இணைந்து வேலை செய்தனர். 24 ஏக்கர் 200 ஏக்கராக மாறியது இன்று, சச்சினின் நிறுவனம் 200 ஏக்கர் நிலத்தில் வேலை செய்யும் 137 விவசாயிகளுக்கு உதவி புரிந்து சுமார் ரூ 2 கோடி வரை விற்பனை செய்கின்றார் சச்சின்.
கிராம வாழ்க்கை

கணக்கரின் மனைவி கம்யுனிகேஷனில் முதுகலைப் பட்டம் பெற்ற சச்சினின் மனைவி கல்யாணி, நிறுவனத்தின் நிதியை கவனித்துக் கொள்கிறார். புகைப்படம்: திபெட்டர்இந்தியா கிராம வாழ்க்கை அவரிடம் நகர வாழ்வு இல்லாமல் கிராம வாழ்வு எப்படி உள்ளது எனக் கேட்டபோது, "ஆம் நாங்கள் மால் செல்வது மற்றும் மெட்ரோவில் பயணம் செய்வது ஆகியவற்றை மிஸ் செய்தாலும் சச்சினுடன் செலவிட நேரம் கிடைக்கிறது. அவர் பணி புரியும் சமயத்தில் மாதம் 20 நாட்கள் பயணம் செய்யது கொண்டிருந்தார். மேலும், நாங்கள் இங்கே நகரம் போல் இல்லாமல் முற்றிலும் ஆரோக்கியமான உணவு மற்றும் சுத்தமான காற்றை அனுபவிக்கிறோம்" எனக் கூறினார். புகைப்படம்: திபெட்டர்இந்தியா 
கணக்கரின் மனைவி

பங்குச் சந்தையில் விவசாயம் மும்பை பங்குச் சந்தையில் தனது நிறுவனம் பதிவு செய்யப்பட்டு விவசாயம் இந்திய பொருளாதாரத்தின் ஒரு முக்கியப் பகுதியாகத் திகழவேண்டும் என்பது தான் சச்சினின் கனவு.
பங்குச் சந்தையில் விவசாயம்


thanks:

     Good Returns - Tamil

Comments