பருத்தி துணியால் ஆன, 'பீல் ப்ரீ ' சானிட்டரி நாப்கினை அறிமுகப்படுத்தியுள்ள, திருச்சியில் இயங்கி வரும், 'கிராமாலயா' தொண்டு நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அமிர்தமதி: கடைகளில் விற்பனையாகும் சானிட்டரி நாப்கின்களில், 90 சதவீதம், 'பாலிபுரோப்லின்' என்ற பிளாஸ்டிக் பொருளும், ரசாயனமும் கலந்துள்ளது.
இதை பயன்படுத்தும் பெண்களுக்கு, உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் வகையிலான நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது.குறிப்பாக, கர்ப்பப்பை தொடர்பான நோய், தொற்று, எரிச்சல், ஒவ்வாமை, அரிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மாதவிடாய் காலங்களில் பெண்கள் சந்திக்கும் சிரமங்களை தவிர்க்கவும், அந்த நாட்களில் அவர்களது சுகாதாரத்தை மேம்படுத்தவும், எங்கள் தொண்டு நிறுவனத்தின் மகளிர் சுய உதவிக்
குழுவினர், முற்றிலும் பருத்தி துணியால் தயாரிக்கப்பட்டுள்ள, புதுவகையான நாப்கின்களை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
திருப்பூர் பனியன் கம்பெனிகளில் மீதமாகும் துாய பருத்தி துணிகளில், நாப்கின் தயாரிக்கிறோம். இதில், பிளாஸ்டிக்கையோ, ரசாயனத்தையோ சேர்ப்பதுஇல்லை. ஐந்து நாப்கின் உள்ள பாக்கெட், 250 ரூபாய். இதை, எட்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும். மேலும், இதை துவைத்து வெயிலில் காயவைத்து, மீண்டும்பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதிகபட்சமாக ஒரு பாக்கெட்டை, ஓராண்டு வரை உபயோகிக்கலாம். அதன் பின், எரியூட்டி அழித்து விட வேண்டும். எரியூட்டாமல் மண்ணிலே போட்டாலும் பாதிப்பு இல்லை.
பருத்தி துணி என்பதால், மண்ணோடு மண்ணாக அதுவே மக்கிப் போகும்; சுற்றுச்சூழலுக்கும் கேடு இல்லை.தென் மாநிலங்களுக்கான குடிநீர், தனிநபர் கழிப்பறை மற்றும் மாதவிடாய் சுகாதாரம் குறித்தான பயிற்சி மையமாக நாங்கள், மத்திய அரசின்அங்கீகாரம் பெற்றுஉள்ளோம்.
ஜூன் மாதம், டில்லியில் நடந்த மாதவிடாய் சுகாதாரக்கல்வி பற்றிய கருத்தரங்கில், 'பீல் ப்ரீ' சானிட்டரிநாப்கினை, அறிமுகப்படுத்தி விளக்கினோம்.இதற்கு காப்புரிமை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளோம். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, விலை மலிவான, 100க்கு, 100 துாய பருத்தி துணியிலான, எங்கள் சானிட்டரி நாப்கினை பற்றி, பெண்கள் அனைவருக்கும் எடுத்து செல்ல வேண்டும் என்பதே, எங்கள் குறிக்கோள்.
ஓராண்டில், 14 அரசு பள்ளிகளில், 3,000 மாணவியரிடையே இந்த நாப்கினை வழங்கினோம்.
இயல்பாகவும், இலகுவாகவும் உணர்வதாக, அனைவரும் தெரிவித்துஉள்ளனர். இந்தியாவில், கிராமம், நகரங்களில், 60 சதவீதத்தினர் துணிகளையும், 40 சதவீதத்தினர் நவீன சானிட்டரி நாப்கின்களையும் பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது.
இவர்களில் பெரும்பாலானோரை, துாய பருத்தி துணியாலான, 'பீல் ப்ரீ' சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்த வைக்க வேண்டும் என்பதே, எங்களின் எதிர்கால திட்டம்.
தொடர்புக்கு: 94425 70515.

Comments
Post a Comment