தென்னை மரத்திலிருந்து நீரா பானம் உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி

சென்னை: தென்னை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் நீராபானத்தை உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தென்னை விவசாயிகள் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்காக தென்னை மரத்தில் இருந்து நீராபானத்தை இறக்கி பதப்படுத்தி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.


TN Government has allowed to get drinking water from Thennai tree

இதையேற்று கடந்த ஏப்ரல் அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த கூட்டத்தில், தென்னை வளர்ச்சி வாரியம், தமிழக அரசினால் அனுமதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சங்கம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தென்னை உற்பத்தியாளர் இணையம் மூலம் மட்டுமே நீரா உற்பத்தி செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து நீரா உற்பத்திக்கு உரிமம் வழங்குவதற்கான விதிகள் அடங்கிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி தென்னை இருந்து நீரா எடுத்து விற்பனை செய்ய, உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணைய சட்டப்படி முறையான அனுமதியை பெற்றிருக்கும் தேங்காய் உற்பத்தியாளர் நிறுவனம் அல்லது கூட்டுறவு சங்கங்கள் இதற்கான உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம். அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் மீண்டும் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எத்தனை உரிமம் வழங்கலாம் என்பதை அரசு முடிவு செய்யும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-government-has-allowed-get-drinking-water-from-thennai-tree-306060.html

Comments