ஆட்டுப்பால் விற்பனை பீஹாரில் துவக்க முடிவு

பீஹாரில், ஆடு வளர்க்கும் பெண்கள், பொருளாதார ரீதியாக பயனடையும் வகையில், ஆட்டுப் பால் விற்பனையை சந்தைப்படுத்த, அதிகாரிகளுக்கு, அம்மாநில முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள, ஜாரங்கில் வசிக்கும் பெண்கள், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில், ஜாரங்கில், 461 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களின் துவக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

இதில் பேசிய, முதல்வர் நிதிஷ் குமார், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள, கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், ஆட்டுப் பால் விற்பனையை, அரசு சார்பில் 
சந்தைப்படுத்த, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இது குறித்து, அப்பகுதியில் வசிக்கும், ரஞ்சிதா தேவி என்ற பெண் கூறுகையில், ஓர் ஆடு, 1.5 லி., வரை பால் தரும். டில்லி போன்ற நகரங்களில், ஆட்டுப் பாலுக்கு வரவேற்பு இருப்பதால், அங்கு, ஆட்டுப் பாலை விற்பனை 
செய்வதன் மூலம், நல்ல லாபம் கிடைக்கும். இதனால், நகரங்களில், ஆட்டுப் பால் விற்பனையை சந்தைப்படுத்த, அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதல்வர், ஆடு வளர்ப்பை ஊக்குவிக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.

Comments