மரண ரகசியம் !

மரணப்படுக்கையில் இராவணன் இலட்சுமணுனுக்கு உபதேசித்த பாடங்கள்!

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் நமக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதை சிறப்பாக உணர்த்துகிறது. இராமன் மூலம் ஒழுக்கத்தையும், சீதை மூலம் கற்பு நெறியையும், இலட்சுமணன் மூலம் பாசத்தையும், ஆஞ்சநேயர் மூலம் பக்தியையும், இராவணன் மூலம் வீரத்தையும், வன்மத்தையும் இப்படி இராமயணத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் நம்முள் இருக்கும் குணங்களை பிரதிபலிப்பார்கள். இராவணனின் பல சிறப்புகளை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வாழும் வரை ஒரு வீரனாகவும், மன்னனாகவும் வாழ்ந்த இராவணன் இறக்கும் தருணத்தில் குருவாக இருந்து விட்டு இறந்தார். அவர் குருவாக இருந்தது இராமனின் தம்பி இலட்சுமணனுக்கு, அவரை இராவணனிடம் அனுப்பி வைத்ததே இராமர்தான்.


இந்த சம்பவத்தை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதனை பற்றி இங்கு பார்க்கலாம்.
இராவணின் ஆட்சி

இராவணின் ஆட்சி இராவணனை ஒரு கொடுங்கோலனாகவே சித்தரித்து விட்டது இந்த உலகம். இராவணன் செய்தது தவறாக இருந்தாலும், அதற்கு அவருக்கு கிடைத்த தண்டனை நியாயமாக இருந்தாலும் அவரின் திறமைகளை புறக்கணிக்க இயலாது. ஆயக்கலைகள் அனைத்தும் அறிந்த இராவணனின் ஆட்சிக்காலத்தில் இலங்கை சொர்க்கம் போல மின்னியது. இலங்கை மக்கள் அனைவரும் அவரின் ஆட்சியில் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள். மக்களின் உணர்வுகளை மதித்து ஆட்சி செய்தவர் இராவணன்.


இராவணனின் திறமை இராவணன் மிகச்சிறந்த சிவபக்தர், அதுமட்டுமின்றி மிகச்சிறந்த ஜோதிடர். அதனால்தான் தனக்கும், தன் மகன் மேகநாதனுக்கும் அனைத்து கிரகங்களும் ஒரே கட்டத்தில் இருக்கும்படி இராவணனால் செய்ய முடிந்தது. கட்டிடக்கலையில் இராவணனை விட சிறந்தவர் யாருமில்லை. அதனால்தான் சிவனுக்கும், பார்வதிக்கும் கற்பனைக்கும் எட்டாத வடிவில் ஒரு மாளிகையை வடிவமைத்து பரிசாக அளித்தார். ஆனால் அதையே சிவபெருமானிடம் வரமாக கேட்டது தனிக்கதை. இப்படி அனைத்து திறமையும் இருந்தும் இராவணன் வீழ்ந்ததன் காரணம் தன் மீது இருந்த கர்வமும், மாற்றான் மனைவி மேல் இருந்த மோகமும் தான். இதுவும் இராவணன் நமக்கு உணர்த்தும் பாடம்தான். 
மரணப்படுக்கையில் இராவணன்


இராமயண போர் மிகவும் உக்கிரமாக நடந்த இராமாயண போரில் இருபுறமும் எண்ணற்ற இழப்புகள் ஏற்பட்டது. அதில் இராவணனுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு தன் மகன் மேகநாதனின் இழப்பும், சகோதரன் கும்பகர்ணனின் இழப்பும்தான். அவர்கள் இருவர் மீதும் அளவற்ற பாசம் வைத்திருந்தார் இராவணன். அனைவரும் இறந்த பிறகு தானே போர்க்களம் சென்று போரிட தொடங்கினார் இராவணன். இராவணனின் தோல்வி போர்க்களத்திற்கு சென்ற இராவணன் இராமபிரானுடன் உக்கிரமாக போர் புரிய தொடங்கினார். ஆனால் எதிரில் இருந்தது நாராயணன் ஆயிற்றே அவ்வளவு எளிதில் சாய்த்துவிட இயலுமா? இராவணனும் சாதராண மனிதன் அல்லவாயிற்றே, இருவரின் போரும் மூவுலகையும் நடுங்க செய்தது.

இராமனின் விளக்கம்
இறுதியில் இராவணனின் சகோதரன் விபீஷணன் அவருடைய மரண ரகசியத்தை கூறியிருந்த படியால் இராமன் இராவணனை வீழ்த்தினார். மரணப்படுக்கையில் இராவணன் இராவணன் தாக்கப்பட்டு மரணத்திற்கு போராடி கொண்டிருக்கும்போது, இராமன் தன் சகோதரன் இடச்சுமணனை அழைத்து, இராவணனிடம் சென்று சில வாழ்க்கை உபதேசங்களை கற்றுக்கொண்டு வரும்படி பணித்தார். ஏனெனில் இராவணனின் மகிமை மற்ற அனைவரையும் காட்டிலும் இராமபிரானுக்கு நன்கு தெரியும். இலட்சுமணனின் தயக்கம் இலட்சுமணனுக்கு இராவணனிடம் உபதேசம் பெற விருப்பம் இல்லை என்றாலும் இராமரின் சொல்லை தட்ட இயலாமல் இராவணனின் தலைக்கு அருகில் சென்று சிறிது நேரம் காத்திருந்தார்.


இறக்கும் போதும் இராவணன் அரசன்தானே அதனால் இராவணன் எதுவும் பேசாமல் இருந்தார். நேரம் கடக்க இலட்சுமணன் அங்கிருந்து நகர்ந்தார். இராமனின் விளக்கம் இராமரிடம் வந்து இராவணன் பேசாமல் அமைதியாய் இருந்ததை கூறினார் இலட்சுமணன், அதற்கு இராமர் நாம் ஒருவரிடம் பாடம் கற்க செல்லும்போது எப்பொழுதும் அவர்களின் பாதம் இருக்கும் புறமே நிற்க வேண்டுமே தவிர தலை இருக்கும் பக்கம் அல்ல என்று கூறினார். எனவே இலட்சுமணன் மீண்டும் இராவணனின் பாதத்தின் அருகே சென்று பணிவுடன் உபதேசிக்கும்படி வினவினார். இராவணன் இப்பொழுது வாய்திறந்து " இலட்சுமண குமாரரே நான் கூறும் இந்த வாழ்கை இரகசியங்கள் உங்களுக்கு மட்டுமல்ல இந்த உலகத்திற்கு உதவியை இருக்கும் " என்று கூறி பேசத்தொடங்கினார்.


ரகசியம் 1 எந்தவொரு சுபகாரியத்தையும் செய்ய காலம் தாழ்த்தக்கூடாது, அதேபோல தப்பான செயல்களை எவ்வளவு தாமதமாக செய்ய முடியுமோ அவ்வளவு தாமதமாக செய்ய வேண்டும். இராமரை பற்றி முழுதாக தெரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு குடிலுக்கு வந்து சீதையை கவர்ந்து வந்தததால்தான் தனக்கு இந்த நிலை ஏற்பட்டதாக கூறினார். ஒருவேளை அந்த கெட்ட காரியத்தை நேரம் கடத்தி இராமர் குடிலுக்கு வந்தவுடன் சீதையை கவர முயற்சித்து இருந்தால் நிலை வேறுமாதிரி இருந்திருக்கும்.


ரகசியம் 2 உன் எதிரியை எப்பொழுதும் குறைவாக மதிப்பிடாதே. இராவணன் பிரம்மரிடம் மரணம் இல்லா வரம் வாங்கியபோது மனிதர்கள் மற்றும் குரங்குகள் தவிர மற்ற எவற்றாலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்று வரம் வாங்கினார். ஏனெனில் தன்னை வதைக்கும் தகுதியோ, சக்தியோ மனிதர்களுக்கு இல்லை என்று அவர்களை குறைவாக மதிப்பிட்டதே தன் அழிவுக்கு காரணம் என கூறினார்.


ரகசியம் 3 உன் எந்தவொரு ரகசியத்தையும் எப்போதும் யாரிடமும் கூறாதே. தன் மரண ரகசியத்தை தன் சகோதரன் விபீஷணனிடம் பகிர்ந்து கொண்டதே தன் வீழ்ச்சிக்கு காரணம் எனவே ஒருபோதும் உங்கள் ரகசியங்களை மற்றவர்களிடம் கூறாதீர்கள் என்று கூறி இலட்சுமணை ஆசிர்வதித்து விட்டு உயிர்விட்டார் இராவணன்.

நன்றி ஒன் இந்தியா.

Comments

Post a Comment