ஒரு ஜோடி நாட்டு மாடு கொடுக்கிறோம்!

சேலம் மாவட்டம், ராஜாப்பாளையம் பெத்தாம்பட்டி கிராமத்தில், 'காமதேனு' என்ற பெயரில், கோசாலை நடத்தி வரும் பாஸ்கரன்: நான் பிறந்ததில் இருந்து, நாட்டு மாட்டுப் பால் தான் குடித்து வருகிறேன். இன்று வரை எந்த நோயும் வந்தில்லை. விவசாயத்திற்காக அப்பா, ஏர் உழுறதுக்கும், வண்டியில பூட்டு றதுக்கும், ஐந்து காளைகளையும், வீட்டுப் பால் தேவைக்கு, நான்கு பசு மாடுகளையும் வைத்திருந்தார். அரசுப் பணியில் இருந்தாலும் விவசாயம் பார்த்து வந்த நான், தற்போது ஓய்வு பெற்று விட்டேன்.கடந்த, 10 ஆண்டுக்கு முன், 40 சென்ட் நிலத்தில் பூச்செடிகளை நட்டு, அதற்கு நாட்டு மாட்டுச் சிறுநீர், சாணத்தை இடுபொருளாகப் போட்டதில் நன்றாக வளர்ந்து வருமானம் கிடைத்தது.
சொல்கிறார்கள்
 நாட்டு மாடுகளின் கழிவில் இவ்வளவு விஷயம் உள்ளது தெரிந்ததும், அனைவரிடமும் கொண்டு சேர்க்க ஆசைப்பட்டு, நாட்டு மாடுகளை வளர்க்க ஆரம்பித்தேன். அதில் உருவானது தான், இந்த கோசாலை. இப்போது, ஒன்பது வகையான நாட்டு மாடுகளில், மொத்தம், 151 மாடுகள் உள்ளன. மாடுகளைப் பராமரிக்க, எட்டு பணியாளர்கள் உள்ளனர். விவசாயம் மீதான ஆர்வத்தால், வங்கி பணியிலிருந்த மூத்த மகன், வேலையை விட்டு, என்னுடன் மாடுகளைப் பராமரித்து வருகிறான்.இங்கு, 40க்கும் மேற்பட்ட பசுக்களிலிருந்து கிடைக்கும் பாலை, எங்க குடும்பம், பணியாளர்கள் தேவைக்கு போக மீதியை, இலவசமாக கொடுக்கிறோம். சுற்று வட்டாரத்தில் கர்ப்பமடைந்த பெண்களுக்கு, 7ம் மாதம் முதல், குழந்தை பிறக்கும் வரையும், 1 வயது வரை குழந்தைகளுக்கும், 16 கோவில்களுக்கு அபிஷேகத்திற்காகவும், சேலத்தில் உள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்துக்கும் பால் கொடுக்கிறோம்.விபூதி, பல்பொடி, சோப்பு, ஷாம்பு, பூச்சி விரட்டி, 'கம்ப்யூட்டர்' சாம்பிராணி, வறட்டி, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் தயாரித்து விற்பனை செய்வதன் வாயிலாக, 70 சதவீத வருமானம் கிடைக்கிறது. மீதியை, எங்களின் சேவையைத் தெரிந்த சிலர் உதவுகின்றனர். ஒரு நாளுக்கு, மாடுகளின் தீவனத்திற்காக, 17 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. சிலர் தீவனமாகவும் கொடுத்து உதவுகின்றனர்.வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள இயற்கை விவசா யிகளுக்கு, நாட்டு மாடு தேவையெனில், ஒரு ஜோடி மாடு கொடுக்கிறோம். அந்த மாடுகள் மூலமாக கன்று பிறந்த உடன், அந்தக் கன்றை அவர்களுக்குக் கொடுத்து, அந்த ஒரு ஜோடி மாட்டைத் திரும்ப வாங்கிக் கொள்வோம். இது மூலமாகவும் நாட்டு மாடுகளைப் பரவலாக்கி வருகிறோம். 

தேவைப்படுவோர் எங்களை அணுகலாம். தொடர்புக்கு: 9789238009.

நன்றி தினமலர் 

Comments