மகளிர் இயற்கை வேளாண் சந்தை

இயற்கை விவசாய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இப்போது உண்டாகிவருகிறது. அதன் ஒரு அம்சமாக செப்டம்பர் 1,2 ஆகிய இரு தேதிகளில் (சனிக்கிழமை / ஞாயிற்றுக்கிழமை) ஒரு தனித்துவமான ‘அனைத்து

மகளிர் உயிர்ம வேளாண் சந்தை’  சென்னையில் நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம். தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகமும் (TNCWD) இயற்கை விவசாயிகள் சந்தையும் (OFM) இந்தச் சந்தையைத் தொடங்குகிறார்கள். இதன்மூலம் உயிர்ம வேளாண் சந்தைப் பொருட்களை உங்களிடம் கொண்டுவருகிறார்கள்.
இந்தத் தனித்துவமான சந்தையில் நுகர்வோர் நேரடியாக வாங்கும் வாய்ப்புள்ளது. இந்தச் சிறப்பு ‘மகளிர் மட்டும்’ இயற்கைச் சந்தையில், ரசாயனமில்லா இயற்கை உற்பத்திப் பொருட்கள், பாரம்பரிய உணவு வகை, ஊறுகாய், செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வகை, இயற்கை ஆடை உள்ளிட்டவை கிடைக்கும். புத்தகங்களும் கிடைக்கும். நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்பதற்கும் வாய்ப்பு உண்டு. இயற்கை முறையில் உற்பத்திசெய்யப்பட்ட காய்கறிகளும் பழங்களும் விற்பனை செய்யப்படும். மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த தனித்துவமான  சந்தை நடைபெறும்.
நடைபெறும் இடம்: அன்னை தெரேசா மகளிர் வளாகம் 
(வள்ளுவர் கோட்டம் அருகில்), சென்னை - 34.
நடைபெறும் தேதி: செப்டம்பர் 1, 2



நன்றி:இந்து தமிழ் திசை

Comments